உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

மதிய நேரம் . … !
வெளியே வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. !
முண்டா பணியனும். . லுங்கியுமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்

கதவருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தேன்.!
நீ….உள்ளே வந்தாய்.!
” இப்பத்தான் சாப்பிடறாப்ல இருக்கு … ? ”
” ம்…”
” என்ன சாப்பாடு. .. ? ”
” பாத்துக்கோ.. ”
” என்னெல்லாம் ஒரு வார்த்தை கேக்க மாட்டிங்களா… ?”
கண்டுகொள்ளாமல் சாப்பிட்டேன் !
சுவற்றில் சாய்ந்து நின்றாய்.
திடுமெனக் கேட்டேன்..
” நீ.. எப்ப போகப் போற… ?”
” எங்க. .. ? ”
” புருஷன் வீட்டுக்கு. .. ? ”
என்னை ஆழமாகப் பார்த்தாய்
சிரித்து. .. ” எப்பக் கல்யாணம் ?” எனக் கேட்டேன். நீ..விட்ட பெருமூச்சில் உனது நெஞ்சகம் விம்மியது.
” நீங்க சொல்லுங்க.. ? ”
” நானா… மெதுவா பாக்கலாம் ”
நான் சாப்பிட்டு முடித்துப் படுத்தேன்.
” தூங்கப்போறீங்களா… ? ” எனக் கேட்டாய்.
” ஆமா .. ஏன். .. ? ”
” உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. ”
” என்ன பேசணும். . ? ”
” பர்ஸ்னல்… தணியாத்தான் பேசணும். .. ”
” தணியாதான இருக்கோம் ?”
” உங்கம்மா இருக்காங்க… ”
உன்னைஏறிட்டுப் பார்த்தேன்
” என்ன விசயம்னு சொல்லு.. ”
” மனசு விட்டு பேசணும். .. ”
பதில் சொல்லாமல் உன்னயே பார்த்தேன்.
” எங்க வீட்ல யாருமே இல்ல வாங்களேன் … ப்ளீஸ். . ” பவ்வியமாக அழைத்தாய்
ஒரு கணம் யோசித்தேன்.. உன் ஊதாசீணத்தால்… மனதளவில் நான் பட்ட காயம் நினைவில் வந்து. .. கசப்பான உணர்வைக் கொடுத்தது.!
” நான் தூங்கனும். . ” என்றேன் அலட்சியமாக.!
” ஒரு. . பத்து நிமிசம் வாங்களேன் ப்ளீஸ். .. ”
போய்த்தான் பாக்கலாமே என்ற சபலம் தோண்றியது. ஆனாலும் உடனே அதை அழித்தேன்.
உனது எண்ணங்களுக்கு வளைந்து போவதை நான் விரும்பவில்லை. !
” சொல்றதுனா இங்கயே சொல்லு… ” என்றேன்.
வெறித்தவாறு. . என்னையே பார்த்தாய்.!
” ஒரு பத்து நிமிசம். ..எனக்காக செலவு பண்ண மாட்டிங்களா..?”
அடிபட்ட குரலில் கேட்டாய்.!
மறுப்பாகத் தலையை மட்டும் ஆட்டினேன்.
என்னையே வெறித்தாய்.. பின் ஆழமாக மூச்சு விட்டாய் ! உன் முகம் சூம்பிப்போனது.. அவமானத்தாலோ… ?
சட்டென எழுந்து.. என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல். . விறு விறுவென வெளியேறிப் போய் விட்டாய். …!!!
அதன் பிறகு இரண்டு நாட்கள் நீ… என்னுடன் பேசவே இல்லை. என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாய்..!
இது எனக்கு வேடிக்கையாக இருந்தது.!
‘ ஹா… நீ பேசாமல் இருப்பதால் எனக்கென்ன நட்டம். . ? முகம் திருப்பிக்கொண்டு போனால்.. வழிய வந்து உன்னுடன் பேசுவேன் என்று எதிர்பார்த்தாயோ…? முட்டாள் பெண்ணே… அந்த நந்தா எப்போதோ செத்துப் போனான்.
உன் ஒரு பார்வைக்காக ஏங்கியதும்… சிறு புண்ணகைக்காகக் கெஞ்சியதும் அது ஒரு காலம்… ! அப்போது இருந்த நந்தா வேறு. .! அவனுக்கு இந்த கீதா மேல் கொள்ளை ஆசை..! கட்டுக்கடங்காத காதல்.. எல்லாம் இருந்தது.! அதனால் உன் பார்வைக்கும். . புண்ணகைக்கும். . ஏங்கினான். அந்த நந்தா எப்போதோ செத்துப் போனான்…. !
இவன் மனதில் காதல்… கீதல் என்கிற எந்தப் புடலங்காயும் கிடையாது..! நீ பேசாமல் போவதால்.. எந்தவித! வருத்தமும் எனக்கில்லை. !

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.