உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” நீங்க.. என்ன தப்பா புரிஞ்சிட்டீங்க..! நா திணவெடுத்து அலையல.! எனக்கு இப்ப தேவை.. அன்பு.. பாசம். . இது மாதிரிதான். ! ஓரளவு சரியா சொன்னா. . என்னைப் புரிஞ்சுகிட்ட ஒரு ஆணோட அன்பு.. ”
நான் அமைதியாக உன்னைப் பார்த்தேன்.!
நீ.. என்னைப் பார்த்து.. புண்முறுவலுடன் சொன்னாய்.
” அந்த வகைல என்னைப் புரிஞ்சுகிட்ட ஒரே ஆண் நீங்கதான். அதனாலதானோ என்னமோ.. என் மனசு உங்களையே சுத்திச் சுத்தி வருதுனு நெனைக்கிறேன் ”
என் காலின் மேல் கை வைத்தாய்.”ஒரு விசயத்துல ரம்யாள நெனச்சா.. ஆச்சரியமா இருக்கு. ”
” என்ன… ?”
” அவளால எப்படி எந்த பீலிங்குமே இல்லாம ஆள் மாத்திக்க முடியுது. ? ”
” அவ யாரையுமே சின்சியரா லவ் பண்றதில்ல. . அதான். ”
” அதான் எப்படி முடியுதுனு ஆச்சரியமா இருக்கு…”
நான் புண்ணகைக்க மட்டும் செய்தேன். என் காலை வருடியவாறு சொன்னாய்.
” மனசே இல்லேன்னா எவ்ளோ நல்லாருக்கும்…?”
” மனசுனு ஒண்ணு இல்லேன்னா. .. வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இருக்காது. ” என நான் சொல்ல..
” எப்படிச் சொல்றீங்க.. ? ” எனக் கேட்டாய்.
” மனசுன்னு ஒண்ணு இருக்கறதுனாலதான். . எண்ணங்கள் இருக்கு. ! எண்ணங்களோட ஜங்க்சன்தான் மனசு.! எண்ணங்கள்தான். . நம்ம சிந்தணைகளுக்கும். . நினைவுகளுக்கும் காரணம்! நு சொல்ற மாதிரி மனசு மட்டும் இல்லேன்னா. .நாகரீக வளர்ச்சினு ஒண்ணு இல்லாமலே போயிருக்கும். நாகரீகம் இல்லேன்னா நம்ம வாழ்க்கையும் அர்த்தமில்லாமப் போயிருக்கும்.. ”
நான் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு. . ஒரு பெருமூச்சுக்குப் பின் பேசினாய்
” ஆனா இந்த மனசால எத்தனை பிரச்சினைகள். நமக்குப் புடிச்சவங்கள.. நல்லவங்களாக் காட்றதும். . புடிக்காதவங்கள.. கெட்டவங்களா காட்றதும் இந்த மனசுதான.. ? ஆசைகள நமக்குள்ள வளர்க்கறதும் மனசுதான்.. அதே ஆசைகள் நிறைவேறாமப் போனா… இடிஞ்சு போய்… நம்மள வேதணைல தள்றதும் அதே மனசுதான்.! சும்மாருக்கறப்ப. . பழைய நெனப்பெல்லாம் கெளறி விட்டு. .. நம்மள சோகப்படுத்தி.. தூங்க முடியாம சாப்பிட முடியாமெல்லாம்… பழியெடுக்கறதும் இதே மனசுதான… இப்படி எத்தனையோ… இருக்கு.. அதெல்லாத்துக்கும் காரணம் இந்த மனசுதான.. ?”
மிகச்சரியாகவே நீ பேசியது போலத் தோண்றியது. அதைவிட… நீ… இவ்வளவு ஆழமாக யோசிக்கிறாயா என்கிற வியப்பும் உண்டானது.!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.