உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” என்னாச்சு… ?”
பெருமூச்சு விட்டாய்.” ப்ச்…”
” சொல்லிரு..” என்றேன்.
” ஹ்ம்…! என்ன சொல்லி என்ன. .. எல்லாம் அர்த்தமில்லாதது.” என விரக்தியோடு சொன்னாய்.
” ரொம்ப விரக்தில பேசர போலிருக்கு. .?”
” ப்ச்..! இப்பெல்லாம் வாழ்றதே விரக்திலதான். .”
” ஏய். .. எதுக்கு இப்ப தேவையில்லாம மனசப்போட்டு அலட்டிக்கற..?”
” உண்மையச் சொன்னா. . எனக்கு வாழ்றதுல இன்ட்ரெஸ்ட்டே இல்லாம போயிருச்சு..! என்ன பண்றது சாகவும் விடல..! ஏன்தான் பொண்ணாப் பொறந்து தொலச்சேனோனு இருக்கு.” என வருந்தும் குரலில் சொன்ன. . உன் கையைத் தொட்டேன் .
” நடந்ததெல்லாம் மறந்துட்டு.. நடக்கப்போற நாட்கள சந்தோசமா மாத்து.. ”
என்னைப் பார்த்துக் கேட்டாய்.
” மனசாட்சியோடதான் பேசறீங்களா..? ”
” ஏன். ..?”
” ப்ச்… பேசாம போங்க… ” எனச் சொல்லிவிட்டு… அதற்கு மேல் அங்கு நிற்காமல் நீ.. உன் வீட்டிற்குப் போய் விட்டாய்.
சோகம் தாங்கிப் போகும் உன் பின்புறங்களை வெறித்தேன்!!
☉ ☉ ☉
அம்மா இன்னும் முழுமையாகக் குணமடைந்து விடவில்லை. .! மேல் வலி. .கால்வலி எல்லாம். . இருந்துகொண்டுதான் இருந்தது.! அதனால் மருபடி அம்மாவைக் கூட்டிப் போய் அக்கா வீட்டில் விட்டு…விட்டு. .
காத்து. .. சம்சு. . இருவரையும் போனில் கூப்பிட்டு… வரவழைத்து. . பாருக்குப் போனோம்.! இரவு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வீடு போனபோது… பதினொரு மணிக்கு மேலாகி விட்டது !! நான் டிவியைப் போட்டுக்கொண்டு. .. கட்டிலில் சாய்ந்து படுக்க…. கதவைத் திறந்து கொண்டு நீ உள்ளே வந்தாய்.!!!
” வா….!!” என்றேன்.
” கதவ.. தாழ் போடாமதான் தூங்குவீங்களா.. ? ” எனக் கேட்டாய்.
” நீ.. வருவியோ… என்னமோனுதான். . கதவ தாழ் போடாம விட்டேன்.. ”
நேராக வந்து என் அருகே. .. கட்டிலில் என்னை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாய்.!
உன் தோளில் கை போட்டு. உன்னை அணைத்துக் கொண்டு கேட்டேன்.
” சாப்பிட்டியா…? ”
” ம்..! நீங்க. . ? ”
” ஆச்சு. ..! உங்கம்மா…? ”
” தூங்கியாச்சு. .! ”
” மப்பா..? ”
” ம்..ம்.. ! குடிச்சிருங்கீங்களா.?”
” ம்.. ”
” தம்மடிக்கறத விடச்சொன்ன. .உங்க க்ளோஸ் பிரெண்டு. . தண்ணியடிக்கறத விடச் சொல்லலியா…?” என நீ கேட்க
வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
” ஹேய்… இப்ப என்ன பிரச்சினை உனக்கு. ?”
” நிம்மதியே இல்ல. .. அதான் பிரச்சினை..? ”
” ஏன். . நிம்மதியில்லாமப் போச்சு. .?”
” அது தெரியாமத்தான்.. நானே பயித்தியம் மாதிரி ஆகிட்டேன்”
” ஏய். .. கொஞ்சம் தெளிவா சொல்லு.. என்னதான் பிரச்சினை உனக்கு. . ? ”
” மருபடியும்… ” என என்னை முறைத்தாய்.பின் ”பயங்கர மெண்டல் டார்ச்சரா இருக்கு.. ”
” என்ன டார்ச்சர்..? ”
” திங்கிங்.. ”
” என்ன விதமா…? ”
” இதான்னு இல்ல. . என்னெல்லாமோ யோசனை வரும். .. ! நான் செத்துட்டா அதுக்கப்பறம்… என்ன நடக்கும்னெல்லாம்.. யோசிப்பேன். ! சொர்க்கம்.. நரகம்.. இந்த பூமி… பேயி.. பூதம் இன்னும் நெறைய…”
நான் சிரித்தேன். ” ஓ… ”
” கேட்டா.. சிரிப்பா வருதில்ல?” என்றாய்.
உன்னை நன்றாக அணைத்து.. உன் கண்ணத்தில் முத்தமிட்டேன்.!
” விதி.. ஒவ்வொருத்தர் வாழ்க்கைல எப்படியெல்லாம் வெளையாடுது பாரு… ஆனா நீ பாவம்..”
” விதியைத் தடுக்கற சக்தி .. எதுமே இல்லையா.. ? ” என நீ கேட்டாய்.
” யாருக்கு. .தெரியும். .? விதி.. வலியதும்பாங்க…”
” விதிய மதியால வெல்ல முடியும்பாங்களே… ?”
” அதப்பத்தி… எனக்குத் தெரியாது..”

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.