உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

மாலை நேரம். .. !!!
நான் பைக்கை ஸ்டார்ட் பண்ண கதவு வழியாக என்னை எட்டிப் பார்த்தாய்.
” கெளம்பிட்டாப்ல இருக்கு.. ? ”
நான் ஒன்றும் பதில் தரவில்லை.
மருபடி. . ” உங்களத்தான் ” என்றாய்.!
” ஜாலியா ” என்றேன் மனமிறங்கி.. !
” குடுத்து வெச்சவங்க…” எனச் சிரித்தாய்.!
” யாருகிட்ட.. ? ” என்றுவிட்டு உன் பதிலுக்குக் காத்திருக்காமல் கிளம்பி விட்டேன்.!
மறுநாள். .. ! வீட்டில் என் அம்மா இல்லை. அக்கா வீட்டிற்குப் போயிருந்தாள். மதிய உணவுக்குப் பின் நான் படுத்துக் கொண்டிருந்தேன.
எந்தவித முன்னறிவுப்புமின்றி. நீ வந்தாய் .! இளமஞ்சளில் சுரிதார் அணிந்திருந்த உன் மார்பில் துப்பட்டா இல்லை. தலை நிறையப் பூ வைத்துக் கண்ணுக்கு அழகாகவே தோண்றினாய்.! சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாய்.!
” எங்க மச்சானப் பத்தி என்ன நெனைக்கறீங்க.. ? ” என வெகு இயல்பாகக் கேட்ட.. உன்னைப் பார்த்து. . வியக்காமல் இருக்க முடியவில்லை. !
” ஏன். . ? ”
” சும்மாதான் சொல்லுங்களேன்”
” நல்ல.. டைப்பாதான் தோணுது..”
சிரித்தாய் ” இவரக் கல்யாணம் பண்ணியிருக்காறே பாவம்..! என்ன பாடுபடப் போறாறோ.. ”
” ஏன். .. அவளுக்கென்ன. .. ?”
அமைதியாகிவிட்டாய்.. ! ஒரு பெருமூச்சு விட்டுப் பேச்சை மாற்றினாய்.!
” உங்களுக்கு எப்ப மேரேஜ்.?”
” மெதுவா… பாக்கலாம்.. ”
” இப்ப என்ன வயசு.. ? ”
” அதெல்லாம் ரகசியம் ”
” பொண்ணுங்ககிட்டத்தான் வயசு கேக்கக் கூடாது. . உங்களுக்கென்ன.. ? ”
” சரி… உன் வயசென்ன… ?”
” பதினேழு…! நானே சொல்லிட்டேன். . ”
” நீ.. சொல்லலாம் ஆனா நான் சொல்ல மாட்டேன்.”
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னாய் .
” ஐ..லவ். ..யூ… ”
உன் முகத்தில் ஒரு பல்ப் எரிந்தது. கண்களில் கூட பரவசத்தின் எதிரொலி.!!
” உண்மைலயே.. நீங்க ரொம்ப நல்லவங்க.. நந்தா. . ! நாந்தான் அதப் புரிஞ்சிக்கவே இல்ல. . ”
” ஸோ… வாட்… ? ”
” உங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன். உங்க அன்புக்காக இப்ப. .. ரொம்பமே ஏங்கறேன். ஐ லவ் யூ.. ”
நான் கண்களை மூடினேன். வெளியே சாதாரணமாகக் காட்டிக் கொண்டாலும். . மனதில் ஒரு பெரும்புயல் அடித்துக் கொண்டிருந்ததது. அதை உடனே நிறுத்தியாக வேண்டும்.!
” என்னை நிம்மதியா தூங்கவிடு கீதா.. உன் மேல எனக்கு. . அப்படி எந்த அபிப்ராயமும் இல்ல. . ” எனக் கண்களை மூடிக்கொண்டே சொன்னேன்.
” நான் உங்கள ரொம்பமே காயப்படுத்தியிருக்கேன்தான் நந்தா.! என்னை மண்ணிச்சிருங்க.. அதெல்லாம் புத்திகெட்டுப் போய் பண்ணது. இப்ப நான் பழைய கீதா இல்ல.. இத நீங்க புரிஞ்சிட்டா அது ஒண்ணு போதும் எனக்கு. . ”
நான் பேசவில்லை. !
நீயும் பேசவில்லை. !
சிறிது நேரம் கணத்த மௌனம் நிலவியது.!
” நான் ஆஸ்பத்ரில இருந்தப்ப நீங்க என்னைப் பாக்கக்கூட வல்லையே .. ”என வருந்தும் குரலில் கேட்டாய்.
நான் கண்களைத் திறந்தேன்.
” எப்ப. . ? ”
” நான் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணேணே அப்ப. .. ? ”
உன் கண்களை ஊடுருவினேன்.
உன்னிடம் பொய்சொல்லி மறைக்க வெண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை. ஆனாலும் பதில் சொல்லாமல் உன்னைக் கேட்டேன்.

” நீ.. நெஜமா தற்கொலை முயற்சிதான் பண்ணியா ? ”
தணிந்த குரலில்.. ” முயற்சி இல்ல. . தற்கொலைதான் பண்ணேன். என் விதி என்ன சாகவிடல.. ” என்றாய்.
” எனக்கு நம்பிக்கை இல்ல” என்றேன்.
”இல்ல. ..நான் சாகணும்னுதான் ட்ரை பண்ணேன்.. ” என உறுதியாகச் சொன்னாய். ”என்னைக் காப்பாத்தாம விட்றுந்தா எனக்கு இப்ப கருமாதி பண்ணி ஒரு வருசத்துக்கு மேலாகியிருக்கும். ”
” உன்ன நீயே ஏமாத்திக்கறதுல எந்த லாபமும் இல்ல கீதா. ”
” அப்ப. .. நம்பலையா நீங்க. . ?”
” இல்ல. . என்னப் பொறுத்தவரைக்கும் நீ.. பண்ணதெல்லாமே ஒரு டாராமாதான்.” அவ்வாறு நான் சொல்ல உன் முகம் இருகிப் போனது.! உன் செயலை நான் அங்கீகரிக்கவில்லையே என்கிற.. ஆதங்கத்தில் உன் அடக்கமான மார்புகள் விம்மியெழப் பெருமூச்சு விட்டாய்.
” நீங்க நம்பலேன்னாலும் நான் சாகவிரும்பினதுதான் உண்மை இந்த உலகத்துல எனக்கு வாழவே புடிக்கல..! என்ன பண்றது… என் விதி அப்படி இருக்கு.. அதான் என்னைக் காப்பாத்தி… இந்த நரகத்துல தள்ளிட்டாங்க… ” எனக் கண்களில் மெல்லிய நீர் கசிவுடன். . குரல் கம்மச் சொன்னாய்.. !!!
உன் மனதைக் கிளர நான் விரும்பவில்லை. அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.!
கண்களைத் துடைத்துக் கொண்டு… மருபடி கேட்டாய் .
” ஏன் வரவே இல்ல. .. ? ”
” உண்மையைச் சொன்னா அன்னிக்கு நீ செத்திருந்தாலும் உன் சாவுக்குக்கூட வந்துருக்க மாட்டேன்.” என எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் சொல்ல
உன் முகம் அதிர்ந்தது..!
” ஏ… ஏன். . ?” எனக் கேட்ட உன்குரல். . உன் தொண்டைக்குள்ளேயே அடங்கியது. !
” ஏன்னா… ஐ ஹேட்.. யூ ” என்றேன். !

என்னிடமிருந்து நீ.. இவ்வளவு. . காட்டமான வார்த்தையை எதிர்பார்க்கவில்லை என்பதை உன் கண்களில் வழிந்த கண்ணீர் சொன்னது.! உனது மெல்லிய விசும்பல் என்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. . ! மாறாக அது எனக்கு ஒருவித மனத்திருப்தியையே கொடுத்தது.!!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.