உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

உன்னை ஊடுருவிப் பார்த்தேன் ஏனோ என் மனசு உனக்காக உருகியது.! ஆனால் உன்பால் என் மனம் கரைவது எனக்கு நல்லதல்ல.. !!!
பட்டுப்போன பூவை மருபடியும் மலரவைக்க முயல்வது முட்டாள்தனம்.! காதலும் ஒரு பூவைப் போன்றதுதான். முதன் முதலாக உன்மேல் தோண்றிய காதல்.. புத்தம் புது மலராக இருந்தது.! அதில் இயல்பான மலர்ச்சி.. மனதை மயங்கச் செய்யும் நறுமணம் எல்லாம் இருந்தது.!!!
இயற்கையாக மலர்ந்த அந்த காதல் மலரை நீயே கருகச் செய்து விட்டாய். இனி அது மீண்டும் மலராது.!!!
” உண்டா.. இல்லையா.. ?” என்னை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டாய். ” மனச மறைக்காம சொல்லுங்க.. ”
பெருமூச்செறிந்தேன். ”உண்மைதான். ஆனா அதெல்லாம் அப்பவே அழிஞ்சும் போச்சு.. இப்ப உன்மேல எனக்கு எந்த ஈடுபாடும் இல்ல. . ”
உன் கண்களில் முணுக்கெனக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து விட்டது.!
” புரியுது. .” மெதுவாகச் சொன்னாய்.” உங்கள அவ்ளோ மோசமா திட்டியிருக்கேன். அத நா இப்ப நல்லாவே உணர்றேன்

என்னையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ். . ! நீங்க என்னை லவ் பண்ணலேன்னா பரவால்ல.. .! உங்கள நான் கம்பெல் பண்ணல.! ஜஸ்ட் ஒரு பிரெண்டா நெனச்சு. .. ஜாலியா பேசிச் சிரிக்கலாமில்ல…? ”
” பேசிட்டுத்தான இருக்கோம் ”
” அது…. நானா வந்து பேசினா.அது கூட வேண்டா வெறுப்பாத்தான்.! ரம்யா பத்தி நான் சோல்லவேண்டியதே இல்ல. . அவகிட்டல்லாம்கூட க்ளோஸா. .. ஜாலியா.. பழகறீங்க. ஆனா நான் ஒரே ஒருத்தன்கிட்டத்தான் .. மோசம் போனேன். . என்னை தீண்டத்தகாதவளா ஒதுக்கறீங்க. அது ஏன்…? அதான் எனக்கு புரியல .. அவள விட எந்தவகைல நான் மோசம் போயிட்டேன் சொல்லுங்க.. ” என விசும்பினாய்.!!
” அவசியம் சொல்லனுமா.. ?”
” சொல்லுங்க.. ”
” ஏன்னா.. எனக்கும் உங்கக்காளுக்கும் இருக்கறது சாதாரண நட்பு இல்ல. . ! அதையும் தாண்டி எங்களுக்குள்ள எவ்வளவோ இருக்கு.! அன்பு.. காதல்.. பாசம்.. இது எலலாத்தையும்விட ரொம்ப முக்கியமான ஒண்ணு விட்டுக் கொடுத்தல். !!! அது அவகிட்ட நெறையவே இருக்கு எங்களுக்குள்ள இன்னிக்குவரை சின்ன மனஸ்தாபமோ கருத்து வேறுபாடோ வந்ததில்லை. அதனாலயே நாங்க லவ்வும் பண்ணிக்கல.! இந்த விசயத்துல அவ கேசுவல் டைப்.!! ஆனா நீ எங்கள அப்படி பாத்ததா சொன்னியே.. அப்ப நடந்தது நீ நெனைக்கறமாதிரியானது இல்ல. !

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.