உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

இரண்டு நாட்களுக்குப் பின்.. உன்னை இன்றுதான் பார்க்கிறேன்.! நான் மெல்லிய குறுஞ்சிரிப்பைக் காட்டிவிட்டு. . பைக்கை விட்டு இறங்கி. .. பூட்டைத்திறந்து. . வீட்டுக்குள் போய் விட்டேன். நான் உடை மாற்றும்போது ஈரக்கால்களுடன் வந்தாய்.

நான் எதுவும் கேட்கவில்லை.
நீயே கேட்டாய்.
” எப்படி இருக்கீங்க..? ”
” ம்…பாத்துக்கோ.. ” லுங்கி கட்டீய நான் உன்னை வீலக்கிக் கொண்டு பாத்ரூம் போனேன். நான் கை.. கால்…முகம் கழுவி வெளியே வர… நீ.. உன் வீட்டில் இருந்தாய்.
கண்ணாடி முன்பாக நான் நின்றிருந்த போது… நீ சாப்பாட்டுத் தட்டுடன். . வந்தாய்.
” சாப்டறீங்களா.. ? ”
” ம்.. நீ சாப்பிடு… ”
” கொஞ்சம் போட்டு வரட்டுமா?”
” இல்ல. .. வேண்டாம். . ”
” ஏன். . எங்க வீட்டு சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டிங்களா… ? ”
நான் உன்னை திரும்பிப் பார்க்க. .. சிரித்தாய்.
” நீங்க இன்னும் சாப்பிடலதான?”
” இப்ப கெளம்பிருவேன் ”
தட்டிலிருந்த சாப்பாட்டைப் பிசைந்து. . நின்று கொண்டே சாப்பிட்டாய்.
” உக்காந்து சாப்பிடு.. ” என்றேன்.
” தேங்க்ஸ்.. ” என்றாலும் நீ உட்காரவில்லை.!
நான் டிவியைப் போட்டு விட்டு உட்கார்ந்தேன்.!
” உங்கள பாக்கவெச்சு சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்கும். . கொஞ்சம் போட்டு வரட்டுமா.. ? ”
” ஏய். .. சொன்னா கேக்கமாட்ட நீ… பேசாம சாப்பிட்டு போ.. ” என நான் கோபத்துடன் சொல்ல. ..
சட்டென உன் முகம் வாடிவிட்டது. எதுவும் பேசாமல் தட்டுடன் நீ வெளியேறிவிட்டாய்.
உன்மேல் கோபமெல்லாம் இல்லை எனக்கு. . ! உன்னைக் கடிந்து கொண்டதற்காக நானும் வருத்தப் பட்டேன்.! ஆனாலும் உன்னைச் சமாதாணப் படுத்த நான் முயலவில்லை.
எழுந்து வீட்டைப் பூட்டிவிட்டு என் அக்கா வீட்டிற்கு சாப்பிடக் கிளம்பி விட்டேன்.!!

சாப்பிட்டு விட்டு நான் திரும்பி வந்தபின்பும் நீ வெளியே வரவில்லை. அதனால் உன்னைத் தேடிக்கொண்டு நானே வந்தேன்.! டிவியில் விஜயும். . காஜல் அகர்வாலும் டூயட் பாடிக்கொண்டிருக்க.. நீ.. கால்களைப் பரத்திப் போட்டு மல்லாந்து படுத்திருந்தாய். என்னைப் பார்த்ததும். . புரண்டு ஒருக்கழித்துப் படுத்தாய். ஆனால் முகத்தில் சிரிப்பு இல்லை. !
” சாப்பிட்டியா… ? ” நானே கேட்டேன்.
நீ.. பேசவில்லை. !
அருகே வந்தேன். ” கோபமா.?”
” உங்கமேல கோபப்பட நான் யாரு. . ?” என்றாய்
” ஏய். .. நீ இப்படியெல்லாம் நடந்துக்கறதால.. உன்மேல எனக்கு லவ் வந்துராது.”
” வரவே வேண்டாம் ” என்ற உன் கண்களில் மலுக்கென கண்ணீர் வந்துவிட்டது.!
எதுவும் பேசாமல் அமைதியாக வந்து உன்னருகே உட்கார்ந்து
கொண்டேன்.
கண்களைத் துடைத்து.. மூக்கை உறிஞ்சிவிட்டு. .
” ஸாரி. . ” என்றாய் கரகரக்குரலில்.
உன் பக்கம் திரும்பினேன்.
” எனக்கு கல்யாணமாகப் போறது உனக்கே தெரியும்.! உன் மனச மாத்திக்கோ ”
” தேங்க்ஸ்… ”
” ஆமா. . ஏன். . சொல்லாமக் கொள்ளாம உங்கக்கா வீட்டுக்கு போய்ட்ட.. ?”
” மனசு செரியில்லனு போய்ட்டேன்.”
” ஓ.. ! இப்ப சரியாகிருச்சா.. ?”
” அதெப்படி சரியாகும்..? ”
” அபறம் ஏன் வந்துட்ட.. ? ”
பெருமூச்சுடன்..
” வந்துட்டேன்”என்றாய்.
” ம்.. சரி.. ரம்யா எப்படி இருக்கா?”
” ம்.. ம்.. நல்லாருக்கா.. ”
இப்போது நீ.. ஓரளவு சமாதாணமடைந்து விட்டது போலத் தோண்றியது. உடனே நான் அங்கிருந்து எழுந்து விட்டேன்.
” சரி. . நா போய் படுக்கறேன் ”
”போறீங்களா.. ? ” சட்டென எழுந்தாய்.
”ம்.. ”
” ஒண்ணு சொல்லனும் ”
” என்ன. .. ? ”
” ஐ லவ் யூ…”
நான் சிரித்துவிட்டேன்.” ஏய். . வெளையாடறியா.. ? ”
” ஏன் நீங்க வெளையாடல.. ?”
” எப்ப. . ?”
” லவ் பண்ணு… லவ் பண்ணுனு என்ன கம்பல் பண்ணல.. ? ஐ லவ் யூ… ஐ லவ் யூனு.. எத்தனை தடவ சொல்லிருப்பீங்க.. ? ”
” ஏ..ஏய்.. அப்ப நீ இருந்த நெலமை வேற. . ”
” ஆ.. இப்ப. .? ”
” நீயே..யோசிச்சுப் பாரு நாம பழைய மாதிரி இருக்கமானு..?”
” பழைய மாதிரின்னா. . என்ன நந்தா..? நான் கண்ணி கழியாம இருக்கனுமா.. ? ” என நீ கேட்க.

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.