உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

என்னிடமிருந்து நீ.. இவ்வளவு. . காட்டமான வார்த்தையை எதிர்பார்க்கவில்லை என்பதை உன் கண்களில் வழிந்த கண்ணீர் சொன்னது.! உனது மெல்லிய விசும்பல் என்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. . ! மாறாக அது எனக்கு ஒருவித மனத்திருப்தியையே கொடுத்தது.!!

தோட்டத்திலிருந்து. . அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன் ..! கை கால் முகம் கழுவி… அம்மா கொடுத்த ராகிவடையையும். .. காபியையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது… நீ வந்தாய்.!!!
சாயம்போன பழைய .. ஆரஞ்சு தாவணியில் இருந்தாய்.!!
” எனக்கு டிபன் கெடையாதா ?” எனச் சிரித்தவாறு கேட்டாய்.

”எங்கம்மாளக் கேளு… ” என்றேன்.
” ஏன். . நீங்க தந்தா என்னவாம்?”
” எனக்கு அவ்ளோ தாராள மனசு இல்லை. . ”
” ஒரு வார்த்தைக்காவது… ? ”
” அந்த வார்த்தைக்கு இந்த எடத்துல அவசியமில்ல.. ”
சேரை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாய். ஏனோ பெருமூச்சு விட்டாய்.
” எனக்கு நீங்க பதிலே சொல்லல.. ” என்றாய்.சன்னக் குரலில்.
” அதான் சொல்லிட்டேனே.. ”
” ஐயோ. . இதில்ல.. முந்தாநாள் நான் சொன்னேனே… ? ” என என்னை ஆவலுடன் பார்த்தாய்.
” என்னது….? ”
” ஐ லவ் யூ…? ”
” அப்படின்னா… ? ” எந்த வித உணர்ச்சி பாவமும் இல்லாமல் கேட்டேன்.
என்னை உற்றுப் பார்த்தாய். உள்ளே திரும்பி என்அம்மா வேலையாக இருப்பதைக் கவனித்து விட்டு. . மருபடி என்னைப் பார்த்தாய்.!
” உங்களக் காதலிக்கறேன்னு அர்த்தம். ” என்றாய்.
” அப்படியா… ? ”
” உங்கள நான் புரிஞ்சிக்காம போனதுக்காக இப்ப பீல் பண்றேன் நந்தா. உங்கள நான் ரொம்பமே அவாய்ட் பண்ணியிருக்கேன்.அதெல்லாம் நெனச்சா எனக்கே என்மேல கோபம் கோபமா வருது… ” என வருந்தும் குரலில் சொன்னாய்.
நான் காபி குடித்தவாறு… அமைதியாக உன்னையே பார்த்தேன்.!
மிகவும் மெல்லிய குரலில் நமக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாய்.!
” சின்ன வயசுல இருந்தே உங்கள எனக்கு ரொம்பப் புடிக்கும் நந்தா. ஆனா ஏனோ அத நான் வெளிப்படுத்த முடியாமயே போயிருச்சு… வெளிப்படுத்தியிருப்பேன்.. நீங்களும். .. எங்கக்காளும். . அந்த மாதிரி ஒரு இதுல இல்லாம இருந்திருந்தா… ! அன்னிக்கு நீங்க. .. ரெண்டு பேரும் அப்படி இருந்ததப் பாத்ததும்.. உங்கமேல அப்படியொரு ஆத்திரம் வந்துருச்சு எனக்கு. .! அந்த கோபத்துலதான் உங்கள அவ்ளோ மோசமாவெல்லாம் பேசிட்டேன்… ஸாரி. .. ”
எவ்வளவு அழகாக.. உன்பக்கம் நியாயம் கோர்க்கிறாய்.. ? நீ இப்படியெல்லாம் பேசுவதால். நீ செய்த காரியங்கள் எல்லாம் இல்லையென்றாகி விடுமா.. ?
இல்லை கடந்த காலங்களில் அணுபவித்த.. வேதணைகள்தான் பொய்யாகி விடுமா.. ?
இல்லை.. ! எதுவுமே மாறப்போவதில்லை.!!!
அமைதியாக நான் குடித்து முடித்த காபி டம்ளரைக் கீழே வைக்க. …
” என் வீட்டுக்கு வாங்களேன் ” என்றாய்.
” எதுக்கு. .. ? ”
” அங்க யாருமே இல்ல. .. உங்ககிட்ட இன்னும் எவ்வளவோ மனசுவிட்டுப் பேசணும். . வாங்களேன் ப்ளீஸ்”
நான் ஒண்றும் பதில் தரவில்லை. சிறிது நேரம் மௌனம் நிலவியது. பின்னர் நான் எழுந்து. . வெளியே போய் நின்றேன்.
என் பின்னாலேயே நீயும் வந்தாய் ! என் அருகில் வந்து நின்று…
”நான் உங்கள ரொம்ப ஆழமா நேசிக்கறேன் ” என்றாய்.
” நேசம். .. ” நான் சிரித்தேன். ”நீ என்னை நேசிக்கற… ? ”
” சத்தியமா நந்தா. .. ”
” இதை நான் நம்பனும். . ? ”
ஒரு பெருமூச்சுடன் ” உங்க கோபம் புரியுது. .. ஆனா… ”
நான் இடைமறித்துச் சொன்னேன்.

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.