உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

மறு அழைப்புக்கு… உன் அக்கா ரம்யா வந்திருந்தாள்.! கல்யாணக் களையில் அவள் முகம். ..ஜொலித்தது.!
”அப்றம்… ஃபர்ஸ்ட் நைட்லாம் எப்படி.. ? ” நான் கேட்க… கண்கள் சுருங்கச் சிரித்தாள் ரம்யா. .. ” முத்தமோ.. முந்தாணைச் சுகமோ.. எனக்கொண்ணும் புதுசில்லையே… ”
” உன் கிருஷ்… எப்படி. . ? ”
” ஹஹ்ஹா…. வெரி ஸ்மாட்..யூ.. நோ. . ? ”

” ஏய்… ரொம்ப பீலா உடாதடி… ”
” நோடா… மாமு.. ! உன்கிட்டப் போய் பீலா உடுவனா.. ? ” எனச் சிரித்தாள்.!
” புரியுது… புரியுது…! அதெல்லாம் சரி… நான் உனக்கு கூடப் பொறக்காத அண்ணன்னு.. உன் ஹஸ்பெண்ட்கிட்ட. . எப்படிறீ.. உன்னால சொல்ல முடிஞ்சிது?”
சிரித்தாள் ” கூடப் பொறக்காத அண்ணன்னுதான சொன்னேன். அதுல என்ன தப்பு. .. ?”
அதே நேரம் நீ வந்து விட்டதால் அதற்குமேல் அதைப் பற்றிப் பேச முடியாமல் போய் விட்டது.!

மேலும் இரண்டு நாட்கள் கழித்து … நீ.. என்னைப் பார்த்த போது.. புண்ணகைத்தாய். உன் பார்வையிலும். .. தோற்றத்திலும் கூட .. மாற்றம் தெரிந்தது. ! உன் அக்காளும் கணவனுடன் போய் விட்டாள்.
அப்போது நீயாக வந்து என்னிடம் பேசினாய்.
” உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். .. ”
” என்ன சொல்லு… ”
” பர்ஸ்னல் … ”
” யாரோடது.. ? ”
யோசித்து… ” நம்ம ரெண்டு பேர் சம்மந்தப் பட்டது.. ” என்றாய்.
” அப்படியா…? ”
” தணியா… பேசலாம்.. ”
” எனக்கு பர்ஸ்னல்னு ஒண்ணும் கெடையாது… ”
நீ… என் கண்களைப் பார்க்க… நான் எங்கோ பார்த்தேன்.
” தனியா வாங்களேன்.. ப்ளீஸ். ” எனக் கெஞ்சினாய் .
” தனியாவா.. எதுக்கு.. ? ”
” உங்ககிட்ட ஒண்ணு சொல்லனும் ”
” சொல்லு.. ”
” இங்க உங்கம்மா இருக்காங்க நான் மனசுவிட்டுப் பேசணும் ”
” அவசியமில்லேனு.. நெனைக்கறேன். .. ” என நான் சொல்ல .. அடிபட்ட பார்வை பார்த்தாய்.! அந்தப் பார்வையில் ஏமாற்றமும்… ஏக்கமும் தெரிந்தது. ! தலைகுணிந்து. .. மெதுவான குரலில் பேசினாய்.!
” அவனை நான் மறந்துட்டேன்”
” எவனை. .? ”
தயங்கி.. ” ராமு. . ” என்றாய்.
” அத… என்கிட்ட எதுக்கு சொல்ற…? ”
” உங்க மனசு எனக்கு அப்ப புரியல..! இப்ப நல்லா புரியுது. ”
” டூ… லேட்… ”
” என்னை மண்ணிச்சிருங்க..! உங்க மனச நான் ரொம்பப் புண் படுத்தியிருக்கேன்.” என சன்னக் குரலில் சொன்னாய்.
ஒரு பெருமூச்சுடன் நான் கிளம்பி விட்டேன்
” எனக்கு வேலையிருக்கு.. ”
நான் வெளியே செல்ல… நீகூடப் பெருமூச்சு விட்டாய் .

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.