உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” நீ.. சூசைட் அட்டெம்ப்ட் பண்ணதுக்கு உண்மையான காரணம் என்ன. . ? ” என இருகிய குரலில் கேட்டேன்.
” லவ்தான். . ஏன்.. ? ”
” பொய் சொல்லாத.. ”
” இதுல பொய் சொல்ல என்ன இருக்கு.. ? ”
” இல்ல. . வேற காரணம் கேள்விப் பட்டேன்.. ”
” என்ன. . ? ”
” நீ.. கர்ப்பமாகி.. அதக் கலைக்கத்தான ட்ராமா போட்ட? ”
அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தாய். உன்னிடமிருந்து பதிலேஇல்லை.
” என்ன. . பேச்சே இல்ல.. ?” நான் விடுவதாக இல்லை.
” ய.. யாரு. . சொன்னது.. இது.. இதெல்லாம். . ?”உன் குரலில் கலக்கம் இருந்தது. ” ரம்யாலா சொன்னா. . ?”
” சே.. அவமேல பழி போடாத.. உண்மையா இல்லையானு சொல்லு.. !”
” பாதி உண்மை.. ” என்றாய்.
” அதென்ன பாதி உண்மை ?”
” நா.. கர்ப்பமானது உண்மை. ”
அதிர்ந்தேன்.. ” ஓ.. ”
” ஆனா. .. சூசைட் அட்டெம்ப்ட் அதைக் கலைக்கப் போட்ட ட்ராமா இல்ல. ..! நெஜமா நான் சாகணும்னு பண்ணது.! அந்த இதுல அதுவும் கலஞ்சிருச்சு. இதான் நடந்தது. ! இதுக்கு மேல உங்ககிட்ட மறைக்க.. சத்தியமா இனி ஒண்ணுமே இல்ல. .” எனக் கண்கள் கலங்கச் சொன்னாய்.!
எதையும் மறைக்காமல் நீ ஒப்புக் கொண்டது.. என்னிடம் நீ கொண்டிருந்த. . நம்பிக்கையைக் காட்டியது.! நீ எதார்த்தமாக இருக்கிறாய் உன்னிடம் போய் கோபித்துக் கொண்டேனே என ஒரு சின்ன வருத்தம் எழுந்தது.!
சிறிது நேரம். . மௌணமாக இருந்துவிட்டுக் கேட்டாய்.
” இது யாரு சொன்னது.. ?”
” காத்து… ? ”
” அவருக்கு. . எப்படி. . ?”
” என்ன கேள்வி .. இது. . ? அவன்தான் சொல்லிருக்கான் ”
” ஐயோ.. இதெல்லாம். . அவனுக்கும். .நான் சொல்லல?”
” நீ.. கர்ப்பம்னு தெரியுமில்ல. அவனுக்கு. .? ”
” ம்..தெரியும்.. ”
” அது ஒண்ணு போதும். . கோடு போட்டா போதும் .. அவன் ரோடே போட்றுவான்.”
பொங்கி வந்த அழுகையை உன்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதாய்.!
நீ.. அழுது முடிக்கும்வரை நான் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.!
நீயாக மனம் தேறிக் கொண்டு. ..
எழுந்து.. எதுவும் பேசாமல் வெளியேறிப் போய்விட்டாய்.!
உன்மேல் வருத்தம் எழுந்த போதும். . உன்னைச் சமாதாணப் படுத்தத் தோண்றவில்லை எனக்கு. !!
மறுநாள் காலை நான் தூங்கி எழுந்த போது… வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. சூரியனையே காணவில்லை.
உன்வீட்டுக் கதவில்… பூட்டுத் தொங்கியது. !
☉ ☉ ☉
மதியம்.!!!
நான் சாப்பிட்டு விட்டு.. அக்கா வீட்டில் இருந்து.. கிளம்பும்போதே.. மழைக்காற்று வீசத்தொடங்கியிருந்தது.!!
பலமான காற்றுதான். . நான் பைக்கை எடுக்க. .. மேலிருந்து குமுதா கத்திச்சொன்னாள்.
” மழ வரும்டா..! போனதும் கேபிள புடுங்கி விட்று.. ! மழ பெய்யறப்ப டிவி பாக்காத.. ”
” ம்..ம்.. ” என்றுவிட்டுக் கிளம்ப.. காம்பௌண்ட் கேட்டைத் தாண்டும்…முன்பே படபடவென மழைத்துளிகள் விழத்தொடங்கின.! துளிகள்.. சிறியவை அல்ல. . பெரிய பெரிய துளிகளாக விழுந்தன.!
சாலையில்கூட வேகமாக பைக்கை ஓட்ட முடியவில்லை. பலமான காற்று..பைக்கின் வேகத்தைக்குறைத்ததோடு.. தூசி.. தும்பட்டிகளையும் வாரி இறைத்துக்கொண்டிருந்தது.!
வேகம் குறைவாக ஓட்டியதாலும். .. பெரிய பெரிய.மழைத்துளிகளாக விழுந்ததாலும். . நான் நனையத் தொடங்கினேன். !
தூரத்தில் எங்கோ .. இடியும்.. மின்னலும் இறங்கியது.!
சரியாக மெயின் ரோட்டிலிருந்து பிரியுமிடத்தில் என் பைக்கின் வேகம் குறைய..
சைடிலிருந்து. .

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.