உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

இரவு… !!
நான் அக்கா வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கிளம்பியபோது.. லேசாக மழை தூற ஆரம்பித்து விட்டது. பெரிய மழையாக இல்லை. . ! தூறல்தான். ! மழைக் காற்றால் மின்சாரம் துண்டிக்கப் பட்டது… ! அப்படியும் நான் வீடு போனபோது… ஓரளவு நனைந்திருந்தேன்.!
காம்பௌண்டுக்குள் பைக்கை நுழைத்து… நனையாமல் நிறுத்தி.. பைக்கை ஆப் பண்ண உன் வீட்டுக் கதவு திறந்தது. ஆனால் கதவைத் திறந்தது. . நீயா .. இல்லை உன் அக்காளா என்பது புலணாகவில்லை.
” என்னடா மழைல நனஞ்சிட்டு வர்ற… ?” எனக் கேட்டபின்பு தான் அது ரம்யா எனப்புரிந்தது.
” ரம்ஸ்.. நீயா.. ?” என்றேன்.
” ம்… நனஞ்சிட்டியா.. ? ”
” லேசா… ” நான் கதவைத் திறக்க… தூறலில் நனைந்தபடி ரம்யா என்னிடம் ஓடி வந்தாள் .
நான் கதவைத்திறந்து.. உள்ளே நுழையும் முன்பாக மழைக்கு ஒண்டி..
என் முதுகோடு ஒட்டி நின்று..
” இந்தா.. கேண்டில்.. ! சாப்பிட்டியா.. ?” எனக் கேட்டாள்.
” ம்.. ” மெழுகுவர்த்தீயை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து. .. உத்தேசமாகத் தீப்பெட்டியைத் தேடி எடுத்துப் பற்ற வைத்தேன்.!என் பின்னாலேயே ரம்யாவும் நுழைந்தாள்.!
” ஏன் ரம்… தூக்கம் வல்லியா.?” மெழுகுவர்த்தியை டேபிள் மேல் வைத்தேன்.!
கதவருகே நின்று… வெளியே எட்டிப்பார்த்து விட்டுக் கேட்டாள்.
” சாப்பிட கொண்டு வர்ரதாடா?”
” சாப்பிட்டாச்சு!. நீ… ?”
” ம்… ”
”உங்கம்மா வந்தாச்சா.?”
” ஓ..! தூங்கியும் ஆச்சு… ”
” சரக்கா.. ?”
” ஆமா. .. ”
” கீதா. .. ? ”
” படுத்துட்டிருந்தா.. ”
” நீ.. ஏன் தூங்கல.. ? ” ஈரமான சட்டையைக் கழற்றினேன்.
” தூக்கம் வல்லடா.. மழை பெருசா வருமா.. ? ”
” தெரியல.. ” நான் பேண்ட்டையும் கழற்றிவிட்டு.. ஜட்டியோடு நிற்க … அந்த நேரம் பார்த்துக் கதவைத் திறந்து கொண்டு. .. நீ.. உள்ளே வந்தாய்.!
” என்னடி பண்ற இங்க.. ?” என உன் அக்காளைக் கேட்ட நீ.. அப்போதுதான் நான் ஜட்டியுடன் நிற்பதைப் பார்த்தாய்.! ” கண்றாவி… ஏன்டி நீ..திருந்தவே மாட்டியா. . ?” என ரம்யாவைக் கேட்டாய்.
ரம்யா கோபமாகி விட்டாள் .
” அவன் ஈரத்துணீய மாத்திட்டிருக்கான்டி லூசு.. ! என்னமோ நாங்கரெண்டு பேரும் ஒண்ணா படுத்துட்டிருக்கற மாதிரி கேக்கற.. ? ”
நான் லுங்கிக்கு மாறினேன். ஈரம் துடைக்க… நீ.. என்னைப் பார்த்தவாறு சிரித்தாய். பின் ரம்யாவைப் பார்த்துக் கேட்டாய்
” இந்த நேரத்துல.. இங்க என்ன வேலை உனக்கு. .. ?”
”நீ.. ஒருத்தி போதுண்டி.. என் பேரக்கெடுக்க… ”
” க்கும். ..! சரி நான் இருக்கவா போகவா…? ”
” நாங்க என்ன பண்றோம்னுதான பாக்க வந்த?”
” சே… இல்ல. ..” என்றாய்.” நானும் உங்ககூட கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்னுதான் வந்தேன். மத்தபடி உங்கள வேவு பாக்கறதுக்கெல்லாம் இல்ல. . ”
” நீ.. வேவு பாக்ற அளவுக்கு இங்க எதுவும். .. நடந்துடாது.” என நான் சொல்ல…
” ஐயோ. .. ஏன் நான் எது சொன்னாலும்.. அதை தப்பாவே எடுத்துக்கறீங்க.. ! இல்லப்பா நான் எதுமே பேசல… ! நா இங்க நின்னா அதுகூட தப்பாத்தான் படும்.. நா போறேன்.” என்றுவிட்டு உடனே வெளியேறி விட்டாய்.
நான் ரம்யாவைப் பார்த்தேன்.
” உங்க பிரச்சிணை எப்பதான்டா தீரும். . ?” எனக் கேட்டாள்.
” அத விடு… ! அப்றம் உன் மேரேஜ் லைப் பத்திச்சொல்லு ” என நான் கட்டிலில் உட்கார்ந்தேன்.
” இல்லடா.. நீ.. இவளப் புரிஞ்சுக்கத்தான் வேணும். பாவன்டா அவ.. வீட்ல இப்ப நானும் இல்லம தணிமைல ரொம்ப பாதிக்கப் படுவா… ஏதோ உங்கூட பேசிட்டிருந்தா அதாவது அவளுக்கு ஆறுதலா இருக்கும்…! அவ என்ன தப்பு பண்ணிருந்தாலும் சரி. ..! அவகிட்ட நீ..வெறுப்பக் காட்டாத…!! எனக்காக அவள நீ மண்ணிச்சு விட்று.. ” என்றாள்.
நான் எதுவும் பேசாமல் இருக்க
” நா ஒண்ணு கேட்டா உண்மையா பதில் சொல்லுவியாடா…” எனக் கேட்டாள் ரம்யா.
அவளைப் பார்த்தேன் .

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.