உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

நான் மதிய உணவைக் குமுதா வீட்டில் சாப்பிட்டு விட்டு. . என் வீட்டிற்குப் போனபோது.. உன் வீட்டில் தையல் மிஷின் ஓடிக்கொண்டிருந்தது. நீதான் தைத்துக் கொண்டிருந்தாய். என்னைப் பார்த்ததும் சிரித்தாய்.
” ரம்யா இல்ல. .. ?” நான்.
” உள்ள. . வாங்க… ”
” ரம்யா இருக்காளா.. இல்லையா.. ?”
” அவளேதான் வேணுமா. . ?”
” ஆமா. . எங்க அவ.. ?”
” என்னத்துக்கு… அவ.. ?”

உன்னை முறைத்துப் பார்த்து விட்டு. . உன் வீட்டில் நுழைந்து தேடிப்பார்த்தேன். ரம்யாவைக் காணவில்லை. !
” உக்காருங்க. . நந்தா..! சாப்படறீங்களா.. ?” எனச் சிரித்துக் கொண்டு கேட்டாய்.
” நான். .. உபசரிப்புக்காக வல்ல. ரம்யா எங்க. ..?”
” சொன்னா என்ன தருவீங்க எனக்கு. . ?” எனக் குறும்பாகப் பார்த்தாய். இதே பழைய நந்தாவாக இருந்திருந்தால்…
‘முத்தம்’ என்று தயங்காமல் சொல்லியிருப்பேன்.
ஆனால் இப்போது. .
” முத்தம் தரூவீங்களா..? ” என நீயே கேட்டாய்.
நான் சிரித்தேன். ஆனால் அது வெறுப்பில் வந்த சிரிப்பு.!!!
‘ உன் ஒரு பார்வைக்கும். . பேச்சுக்கும் நான் ஏங்கிய நாட்கள்தான் எத்தனையெத்தனை.. ? நீ எதிர்பாராத விதமாக உன்னைத் தீண்டியோ.. அணைத்தோ.. எத்தனை ஆனந்தமடைந்திருப்பேன்.. ?
ஆனால் அன்றைய நிலையில் உனக்கு.. நான் என்றாளே பிடிக்காது.! என்னைக் கண்டாலே முகம் சுளிப்பாய். கண்கள்… பேச்சு. . செயல் என அத்தனையிலும் உன் வெறுப்பைக் காண்பிப்பாய்.!!
ஆனால் இன்று …!!!
நீயாக முன் வந்து. . என்னைக் காதலிப்பதாகச் சொல்கிறாய்.! முத்தம்கூடக் கேட்கிறாய் .. என்ன விந்தை இது. .?
உன்னால் என் மனதில் பதிந்த வடுக்கள் … இன்னுமே என்னைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.!!!
” என்ன சார்… பேசாம இருக்கீங்க. . ? நானே ஆசைப்பட்டுத்தான் இப்ப கிஸ் கேக்கறேன்.! ஜஸ்ட் ஒரு சின்ன பரிசு. . ! உஙகளுக்குக்கூட ரொம்பமே புடிச்ச வெளையாட்டு…!!! தந்தா.. ரம்யா பத்திச் சொல்றேன்.” என்று ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டு கேட்டாய்.
” போயும். . போயும் உன்னக் கிஸ் பண்றதா…. ? அதுக்கு தெருல போற ஒரு நாய கிஸ் பண்ணலாம் ” என வார்த்தையில் வெறுப்பைக் காட்டினேன்.
உன் முகம் அதிர்ந்தது. கண்களில் ஒரு சீற்றம் ! ஆனாலும் அதை உடனே மறைத்து. .சகஜ நிலைக்குத் திரும்பினாய்.. !
” நான். . நாயவிட மோசமா. ?”
” அத நா வேற சொல்லனுமாக்கும்… ?”
” சொன்னா என்னவாம்… நாக்கு அழுகிருமோ… ? ”
” உன்கிட்ட. . வாக்குவாதம் பண்ண நான் வல்ல… ”
” நீங்க என்ன திட்ணாலும் ஐ டோண்ட் கேர் நந்தா. . ! ஐ லவ் யூ… ஐ லவ் யூ. ..தான். . ”
எதுவும் பேசாமல் நான் வெளீயேறி விட்டேன்.!!!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.