உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” நீ.. வேற ஆள் பாத்துக்கோ கீதா. . அதான் நல்லது.. ”
” நான் ஒண்ணும் ஆளு தேடி அலையல .. ! ஒரு தடவ பட்டதே போதும். உங்கள விட்டா.. இன்னொருத்தன என்னால் உண்மையா லவ் பண்ண முடியாது.. ”
” வேஸ்ட்.. ” சிறிது இடைவெளிவிட்டுச் சொன்னேன் ” இது காதல் இல்ல கீதா. . ! உன்னோட ஏமாந்து போன மனசுக்கு.. இது ஒரு மாற்று வழி…! நீ . காதலிச்சவன் உன்ன ஏமாத்திட்டாங்கறதுனால இப்ப உன் மனசு என் பக்கம் திரும்பியிருக்கு.! இப்ப உன்னச் சுத்திவர்றதுக்கும்.. உன் அழக புகழ்றதுக்கும். .. உன்னக் கொஞ்சறதுக்கும் ஆள் இல்ல. . அதான் ஆள் தேடற… ? என்னால இனி உன்ன லவ் பண்ண முடியாது. .! என்னை மறந்துரு.. ” எனக்குள் இருந்த கசப்பு. .வெறுப்பையெல்லாம் தூண்டி விட்டுவிட்டாய். என் தொண்டையை இருக்கிப் பிடித்து .. மூச்சுத் திணறடிப்பது போல உணர்ந்தேன். ! அதற்கு மேல் .. என்னால் அங்கு நிற்க முடியாமல் விலகி…வீட்டிற்குள் போய்விட்டேன்.!!!

என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. அவளை ஆஸ்பத்ரி அழைத்துப் போனேன்! மருந்து.. மாத்திரைகள் எழுதிக் கொடுத்த டாக்டர். . அம்மாவுக்கு ஓய்வு தேவை என்றார்.! அம்மாவை அழைத்துப் போய்… என் அக்கா வீட்டில் விட்டேன்.!
” சாப்பிட இங்கயே வந்துர்ரா.. அம்மா நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். .. ” என்றாள் என் அக்கா குமுதா. !!!
நான் வீட்டுக்கு வந்ததும் என்னிடம் முதலில் கேட்டவள் நீதான். . !
” உங்கம்மாக்கு எப்படி இருக்கு?”
” ம்… தேவலை… ”
” இப்ப எங்க. .. ? ”
”குமுதா வீட்ல.. ”
” என்ன ஒடம்புக்கு. . ? ”
” வயசாய்டிச்சில்ல.. ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிரும்”
” நீங்க ஒரு கல்யாணம் பண்ணிட்டா உங்கம்மாக்கு. . நல்லாவே ரெஸ்ட் கெடைக்கும்” எனச் சிரித்தாய்.
உன்னை முறைத்த என்னை நீ..பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.!
” உங்களுக்கொரு குட் நியூஸ் ” என்றாய்.
” தேவையில்லே.. ” என்றதும் நீ.. அமைதியாகிப் போனாய்.!!

அன்று மாலை… !!
தோட்டத்திலிருந்து வீடு திரும்பிய நான். . பைக்கை நிறுத்தி இறங்க…
உன் வீட்டுக் கதவு திறந்து. . வெளியே வந்தாள் உன் அக்கா.
” ஹேய்… தடியா..” என்று சிரித்தாள்.!
திகைத்துப் பின் சிரித்தேன்.
” ஹேய்.. ரம். .. ! நீ எப்ப வந்த? ”
” நான் வர்றப்ப நீ இல்ல. . உங்கம்மாவ ஆஸ்பத்ரி கூட்டிட்டு போயிருக்கேனு கீதா சொன்னா.. என்னடா.. அம்மா ஒடம்புக்கு. .. ? ”
” நத்திங் டூ.. வொர்ரி..! குமுதா வீட்ல இருக்காங்க.. ! மருபடி நான் வந்தனே வீட்டுக்கு. . ? ”
” ! ஓ… ! அப்ப நான் பத்மா வீட்ல இருந்தேன்.”
” நீ… மட்டும்தான் வந்தியா.. ?”
” ரெண்டு பேருமதான் வந்தோம்… ஆனா. . அவரு போய்ட்டாரு.. ”
” ஏன்.. ? ”
” எனக்கு. . லைட் பீவர்.! அவரும் ஒரு வேலையா வெளியூர் போறாரு… ! அதான் இங்க கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாரு.. ”
” ஓ… ! எத்தனை நாள் இருப்ப?”
” மினிமம் டூ டேஸ்.”
எங்கள் பேச்சைக் கேட்டு நீயும் வெளியில் வந்து நின்றாய்.
என்னைப் பார்த்துச் சொன்னாய்.
” உங்களுக்கு ஒரு குட் நியூஸ்னு சொன்னேனில்ல.. அது இவ வந்ததுதான். நான் சொல்ல நெனச்சேன் நீங்கதான் வேண்டாம்ன்ட்டீங்க.. ”
பொதுவாகப் பேசிவிட்டு. .. பாத்ரூம் போய் சின்னதாக ஒரு குளியல் போட்டு..விட்டு வந்து வெளியே.. கிளம்பினேன். !
மறுநாள். ..!!!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.