இந்த அணைப்பு.. இந்த தடவல்.. இந்த முத்தம்! 70

சந்ருவின் வீட்டுக் கதவு லேசாக திறந்திருந்தது. காலிங் பெல்லை அழுத்தலாமா என நினைத்தான் நிருதி. ஆனால் உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்க.. தயக்கத்துடன் அப்படியே நின்றான்.. !!

“உன்னையும் ஒரு பொண்டாட்டினு கட்டிகிட்டு நான் மாரடிக்கறேனே.. ச்சை.. எல்லாம் என் தலையெழுத்து..” சந்துருவின் வேதனை கலந்த குரல்.
“ஏன்.. எனக்கென்ன கொறைச்சலாம்?”
“ஒரு மயிறும் கொறையுல.. அத்தனையும் ஜாஸ்திதான்.. வாய் மட்டும் நீளுது ஏழு ஊருக்கு”
“ஆமாமா.. எங்களுக்குத்தான் நீளுது. அங்க ஒண்ணுமே நீளறதில்லே.. அதை நான் சொல்லணும்.. எனக்குனு வந்து வாச்சிருக்கீங்களே..”
“ஏய்.. வாயை மூடி தொலைடி சனியனே..”
“ஆமாமா.. நான் சனிதான்.. இவரு குரு.. அப்படியே..”
“வேணாண்டி என் கோவத்தை கெளறாதே.. எனக்கு கோபம் வந்தா அப்பறம் நான் எதை எடுத்து அடிப்பேனு எனக்கே தெரியாது”
“இதா.. அதுக்கு மொத என் கைல என்ன இருக்குனு பாருங்க.. மண்டைல ஒரே போடு.. போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன். உங்க பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டா இந்த லிபிகா”
“ஆமா.. இவ பெரிய இவ..”
“எவ..? எங்கே என்னை நேரா பாத்து சொல்லுங்க?”
“அட ச்சீ.. மூடிட்டு போடி சனியனே.. மூஞ்சிக்கு முன்னால வந்து நின்னுட்டு.. என் எரிச்சலை கெளப்பாதே.. மூஞ்சியும் மொகறையும்..”
“இத ராத்திரில பக்கத்துல வந்து படுக்கறப்ப சொல்லணும். அப்ப மட்டும் இந்த மூஞ்சியும் மொகறையும்.. அதுக்கு கீழ இருக்கறது எல்லாம் இனிக்ககுதாக்கும்..?”
“ஆமா நாங்க மட்டும்தான் பக்கத்துல வந்து படுக்கறோம்.. இவங்க பெரிய மகாராணி.. தூரமா தள்ளி போயிதான் படுத்துக்குவாங்க.. போடி அந்த பக்கம்..”

உள்ளே கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்களா அல்லது கொஞ்சிக் கொள்கிறார்களா என்று வெளியே நின்று கேட்ட நிருதிக்கு சுத்தமாக புரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை கேட்டுக் கொண்டிருந்தால் வார்த்தைகள் இன்னும் மோசமாக காதில் வந்து விழும் என்று தோன்றியது.

உடனே கதவைத் தட்டினான். சற்று பலமாக.

முதலில் எட்டிப் பார்த்தது சந்ருதான்.
“வா நிரு” என்றான். அவன் முகத்தில் கடுகடுப்பு நன்றாக தெரிந்தது.

அவனுக்கு பின்னால் அவன் மனைவி லிபிகா நைட்டியுடன் வந்து எட்டிப் பார்த்தாள். உடனே சிரித்தாள்.
“வாங்க..”

“ஸாரி” என்றான் நிருதி “நீங்க ரொம்ப இண்ட்ரெஸ்ட்டா சண்டை போட்டுகிட்டுருக்கிங்க போல..”

“அதை ஏன்டா கேக்குற.. ஒரே தலை வேதனை..” என்றான் சந்ரு.

கணவனை முறைத்தாள் லிபிகா. அவள் கண்களில் தீப்பொறி பறந்தது. மூக்கு விடைக்க புசுபுசுவென மூச்சு விட்டாள். தனங்களின் எழுச்சியில் அவளை கோபத்தில் பார்த்தாலும் அழகாகவே இருந்தாள்.

2 Comments

Add a Comment
  1. Please send the next episode

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *