கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“இன்னைக்கு வேணாம்டீ.. நாளைக்கு போவலாமே?” அனுவின் முகத்தில் ஒரு இனம் தெரியாத சோகம்.

“ஏண்டீ உம்முன்னு இருக்கே?”

“ப்ச்ச்ச்.. ஒன்ணுமில்லேடீ…”

“பொய் சொல்றே நீ…” சுகன்யா அவளை தோண்டி துருவ ஆரம்பித்தாள்.

“கோவிலுக்கு போகலாம்ன்னு நினைச்சேன்…”

“என்னடி தீடீர்ன்னு?”

“என் ஃப்ரெண்ட்டோட பர்த் டே இன்னைக்கு… கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணலாம்ன்னு நினைச்சேன்.”

“ஃப்ரெண்டுன்னு சொல்றயே… அது அவனா? இல்லே அவளா?”

“ஜெண்டர்ல என்னடி இருக்கு… என் ஃப்ரெண்ட் நல்லாயிருக்கணும்… அதுதான் என் விருப்பம்..” அனு தன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

“மை டியர் ப்யூட்டி குயின்… இன்னைக்கு வெதர் நல்லா இருக்குடீ… உன் இஷ்டப்படியே முதல்ல கோயிலுக்கு போயிட்டு அப்றமா லஞ்சுக்கு போவலாம்… ஈஸ் தட் ஓ.கே ஃபார் யூ?” சுகன்யா தாமரையாக மலர்ந்தாள்.

“ப்ச்ச்ச்… சும்மா நீ என்னை கிண்டல் பண்ணாதேடி. இப்பவும் ஒருத்தனுக்கு ரெண்டு பேரா, ஒரு பெங்காலியும், ஒரு டில்லிவாலாவும், ராத்திரி பகலா உன் கிட்டத்தான் கடலை போடறானுங்க. நீ என் பக்கத்துல இருக்கும் போது எவன்டீ என் பின்னாடி வர்றேங்கறான்?” அனுவின் கண்களில் இப்போது குறும்பு தெறித்துக்கொண்டிருந்தது.

“டோண்ட் பீ சில்லி. எனக்கு கடலையும் வேணாம். பட்டாணியும் வேணாம். இப்பத்தான் நான் நிம்மதியா இருக்கேன். என்னை கொஞ்ச நாளைக்கு இப்படியே நிம்மதியா இருக்க விடுங்கடீ.” சுகன்யா அவள் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டாள்.

“அப்ப நான் நிம்மதியா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?”

“அனு உன் கிட்ட அழகு இருக்கு. படிப்பு இருக்கு. நிரந்தரமான வேலையிருக்கு. எல்லாத்துக்கும் மேல யாருக்கு என்னப் பிரச்சனைன்னாலும், உடனே அவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்ங்கற ஆர்வமிருக்கு; எப்பவும் அடுத்தவங்களுக்கு உதவணுங்கற அழகான மனசும் உனக்கிருக்கு. இதுதாண்டீ ஒரு பொண்ணுக்கு உண்மையான அழகு. உன்னோட நல்ல மனசை அவனால புரிஞ்சுக்க முடியலியே; அதை நினைச்சாத்தான் எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு?”

“முடிஞ்சுபோன கதையைப் பத்தி இப்ப என்னடீ? பழசெல்லாத்தையும் விட்டுத்தள்ளுடீ…” அனு வெள்ளையாக சிரித்தபோதிலும் அந்த சிரிப்பில் ஒரு மெல்லிய சோகம் அன்று கலந்திருப்பதாக சுகன்யாவுக்குத் தோன்றியது.

“இல்லடீ… நானும் ஒரு வாரமா என் மனசுக்குள்ளவே யோசனை பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். இந்த ஆண்கள் மனசுல அப்படி என்னதான் இருக்கு? ஆண்கள் ஒரு பெண்கிட்ட என்னதான் தேடறாங்க? எதை எதிர்பாக்கறாங்க?”