கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“அனு… ஏண்டி உன் வாய்லே என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்கே? வாயைத்தொறந்து சொல்லேண்டீ..”

“என்னடீ சொல்ல சொல்றே?” அனு தழுதழுத்தாள்.

“உங்களை நான் காதலிக்கலே; உங்களை நான் எப்பவோ மறந்துட்டேன்; சுகன்யா சொல்லிகிட்டு இருக்கறதெல்லாம் சுத்தப்பொய்ன்னு என் அத்தான் மூஞ்சைப்பாத்து ஒரே ஒரு தரம் சொல்லேண்டீ..”

உள்ளத்தில் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தில், ஆசையில், தன் மேலிருக்கும் ஒரு தலைக்காதலால், தன் பெற்றவர்களின் ஆசையை நிறைவேற்ற மறுக்கும் தன் அத்தானின் மனதை மாற்றிவிடவேண்டும் என்ற உணர்ச்சியுடன் கோபமாக சுகன்யா அனுவிடம் வெடித்தாள். தன் பேச்சுக்கு பதிலேதும் வராததால், சட்டென திரும்பி பின் சீட்டை நோக்கினாள்.

காரின் பின்னிருக்கையில், சம்பத்தின் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டு, அனு தன் விழிகளை மூடி உட்கார்ந்திருந்தாள். சம்பத்தின் இடது கரம் அனுவின் தோளில் விழுந்திருந்தது. அனுவின் வலது கரத்தை, அவன் தன் இடது கரத்தால் பற்றி வருடிக் கொண்டிருந்தான்.

கார் மலைமந்திரின் முன் கிறீச்சிட்டு நின்றது.

“அனு குட்டீ உன் கண்ணைத் தொறடீ… கோவில் வந்திடிச்சிடீ…” களிப்புடன் கூவிய சுகன்யா காரின் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கினாள்.

“சுகன்யா… ஒரு சின்ன திருத்தம் சொல்லட்டுமா?” தன் பக்கத்து கதவைத் திறந்துகொண்டு இறங்கிய சம்பத், தன் முகத்தில் புன்னகையுடன், அனு இறங்குவதற்காக வசதியாக அவள் பக்கத்து கதவை திறந்து கொண்டு நின்றான்.

“அத்தான் நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்களோ, அதை முதல்லே உங்க அனுராதாகிட்ட சொல்லுங்கோ… அவ தன் காது குளிர கேக்கட்டும்…” சுகன்யாவின் முகத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

“ஓ.கே… சுகன்யா… கோவில் என்னைத் தேடி வராதுங்கறது எனக்கு இன்னைக்கு நல்லாப் புரிஞ்சு போச்சு. எனக்காக திறந்திருக்கிற ஒரு கோவிலைத் தேடி நான்தான் போகணும்.” காரிலிருந்து இறங்கிய அனு அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் பார்த்தாள்.

“அனு… எனக்காக நீ காத்துக்கிட்டு இருந்தே. இப்ப நானே உன்னைத் தேடி வந்திருக்கேன். என்னை நீ ஏத்துக்குவியா?” சம்பத் படபடக்கும் உள்ளத்துடன், அனுவின் முகத்தை உற்று நோக்கினான்.

அனுராதா, சம்பத்குமாரனின் இடதுபுறத்தில் நின்றிருந்தாள். அவள் பதிலேதும் பேசாமல், தன் வலது கரத்தால், அவன் இடது முழங்கையை வளைத்துக்கொண்டாள். அவன் இடது தோளில் தன் தலையை சாய்த்துகொண்டு, சில நொடிகள் ஏதும் பேசாமல் மவுனமாக நின்றாள்.

“சுகன்யா… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டீ.” மெல்லிய குரலில் சொன்னவள் சம்பத்தை இழுத்துக்கொண்டு அர்ச்சனை தட்டுகள் விற்கும் இடத்தை நோக்கி, தன் கால்கள் தொய்ய, தொய்ய, மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.