கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“டோண்ட் வொரி.. உனக்கென்னடீ கொறைச்சல்? நீ ஏன் இப்படி பயந்து சாகறே? உன்னை நானே அழைச்சிட்டுப்போய் எங்க அத்தைகிட்ட அறிமுகப்படுத்தறேன். எங்கத்தான் ஒரே பையன்.ஏகப்பட்ட சொத்து இருக்கு அவருக்கு.நல்லாக் கேட்டுக்க. எங்க அத்தை வீட்டுல நீ ராணி மாதிரி இருக்கப்போறே.”

“ப்ச்ச்… எனக்கு சொத்தெல்லாம் வேணாம்டி.. இவர் கிடைச்சா, அதுவே போதும்டீ…”

அனுவின் செல் கிணுகிணுத்தது. சம்பத்துதான் அவளை அழைத்திருந்தான். ரிஸப்ஷனில் இருப்பதாக சொன்னான்.

“போயிட்டு வரேன்டீ…”

“அனு.. ஆல் த பெஸ்ட்… கொஞ்சம் பொறுமையா இரு…”

“என்னடி சொல்றே?”

“ம்ம்ம்.. நீ ஒரு பாப்பா… நேத்து காலையிலத்தான் நீ வயசுக்கு வந்திருக்கே; நான் சொல்றதோட அர்த்தம் உனக்கு புரியலே? கல்யாணம் ஆகற வரைக்கும் முழுசா டேமேஜ் ஆகாம இருடீன்னு சொல்றேன்..” சுகன்யா ஹோவென சிரித்தாள்.

“போடீ.. இவ ஒருத்தி.. நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்…” அனு அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, தன் முகத்தில் வெட்கத்துடன் ரிசப்ஷனை நோக்கி வேகமாக ஓடினாள்.

* * * * *

சுகன்யா… நானும்தான் ஒருத்தனை மனசாரக் காதலிச்சேன். என் காதல் தோத்துத்தான் போச்சு. அதுக்காக நான் செத்தா போயிட்டேன்? இன்னொருத்தன் கூட சந்தோஷமா வாழ்ந்து இவனை பெத்துக்கலையா? என் புள்ளை சம்பத் வாழ்க்கையோட நிஜமான அர்த்தத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கறான்.

என் புள்ளை, காலம் பூரா உன்னையே நெனைச்சுக்கிட்டு வாழ்ந்துடுவேன்னு அடாவடி பண்றான்டீ. உன் பேச்சை அவன் கேப்பான்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கும்மா. எனக்காக ஒரு தரம் நீ அவன் கிட்ட பேசறயா?

ராணி அத்தே… உங்க பிள்ளை நிஜமாவே லக்கி. தங்கமான மனசுள்ள பெண் ஒருத்தி உங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறா. நான் அதிகமா எந்த முயற்சியும் எடுக்காமலேயே உங்க பிரச்சனை தன்னால முடிஞ்சுப்போச்சு. கடந்தவாரம், தன்னிடம் செல்லில் அழுது புலம்பிய தன் அத்தை ராணியின் முகம் அவள் மனதில் சட்டென வந்தது. சுகன்யா எழுந்து பால்கனிக்கு வந்தாள்.

ஹாஸ்டல் கேட்டுக்கு வெளியில், கேட்டுக்கு எதிரில் உயரமாக வளர்ந்திருந்த மாமரத்தின் நிழலில் நின்றிருந்த சம்பத்தை அனு நெருங்கியதும், அவன் அவளை விருட்டென இழுத்து தன் மார்போடு அணைத்து அவள் கன்னத்தில் உரிமையுடன் முத்தமிட்டான்.

“அனு.. ரியலி யூ ஆர் வெரி வெரி ப்யூட்டிஃபுல் இன் திஸ் சாரி… தேவதை மாதிரி இருக்கே…” சம்பத் தன் விழிகளை இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“ப்ளீஸ்.. சம்பத்… விடுங்க என்னை… சுகன்யா பால்கனியில நின்னுகிட்டு இருக்கா…” சம்பத் சட்டென அவளை தன் பிடியிலிருந்து விடுவித்தான். அனு, சுகன்யா நிற்கும் திசையை நோக்கி தன் கையை உற்சாகமாக ஆட்டினாள். சம்பத்தை நோக்கி தன் முகம் மலர சிரித்தாள்.

“அனு எதுக்கு சிரிக்கறே?” சம்பத்தும் சுகன்யா நின்ற திசையை நோக்கி தன் கையை ஆட்டினான்.

“டேமேஜ் ஆகாம, முழுசா வந்து சேருடீன்னு இப்பத்தான் சுகன்யா சொல்லி அனுப்பினா. ஆனா நீங்க என்னடான்னா, அவ எதிர்லேயே என் கன்னத்தை கடிக்கறீங்க?” கன்னத்தை துடைத்துக்கொண்டு, அனு விழுந்து விழுந்து சிரித்தாள்.

சுவாமி மலை முருகா.. என் அனுவும், என் அத்தானும் என்னைக்கும் இப்படியே சந்தோஷமா சிரிச்சுக்கிட்டெ இருக்கணும். சுகன்யா அவர்களை நோக்கி உற்சாகமாக தன் கரத்தை அசைத்துக்கொண்டிருந்தாள்.

சம்பத் அனுவின் கழுத்தை சுற்றி தன் கரத்தை ஆசையுடன் போட்டுக்கொண்டான். அவள் அவன் இடுப்பில் தன் கையை தவழவிட்டுக்கொண்டாள். காலியாக இருந்த நடைபாதையில் அவர்கள் இருவரும் மெல்ல நடக்க ஆரம்பித்தார்கள். தலையில் காயும் வெய்யில் அவர்களுக்கு சுத்தமாக உறைக்கவில்லை.
பால்கனி தரையில், குளிர்ந்த நீரை ஒன்றுக்கு இரண்டு முறையாக தெளித்து, தரை ஜில்லென்று ஆனவுடன், ஒரு பெட்ஷீட்டை விரித்து நிம்மதியாகப் படுத்திருந்தாள் சுகன்யா. அவள் உள்ளத்தில் அன்று அசாதாரணமான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.