கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“டாக் டு ஹிம்.. பிளீஸ்…

“குமார்… எத்தனை நாளானாலும், சுகன்யாதான் என் மருமகளா என் வீட்டுக்குள்ள நுழைய முடியும். என் மனைவியோட முடிவும் இதுதான்.” நடராஜன் தேனீர் கோப்பையை டீப்பாயின் மேல் ஓசையெழுப்பாமல் வைத்தார்.

“ஹூம்ம்ம்ம்…” நீளமாக பெருமூச்செறிந்தார் குமாரசுவாமி.

“செல்வா மேல எனக்கு வருத்தம் இருக்கறது உண்மை. ஆனா அவன் மேல நிச்சயமா கோபம் இல்லே. அவனும் சின்னப்பையன்தானே? வாழ்க்கையை அவன் இன்னும் சரியா புரிஞ்சுக்கலே. இப்போதைக்கு சுந்தரிக்கு அவன் மேல கொஞ்சம் கோபமிருக்கு. சுகன்யாவோட நடத்தையை செல்வா சந்தேகப்பட்டான்னு தெரிஞ்சதும் அவ ரொம்ப பதறிப்போயிட்டா…”

“சுகன்யாவோட தாயாச்சே? அவங்க கோபம் நியாயமானதுதான்.” நடராஜனுக்கு குமாரின் முகத்தைப்பார்க்க தெம்பில்லை.

“சுகன்யா, கடைசியா ஸ்டேஷன்ல, செல்வாவை இப்பவும் நான் வெறுக்கலேன்னுதான் மீனாகிட்ட சொன்னா. ஆனா சுகன்யா இப்ப மனசால ரொம்ப அயர்ந்து போய் இருக்கா. கொஞ்சநாள் அவளை அவளோட போக்குல விட விரும்பறேன். செல்வா அவனா திரும்பி வரட்டும். அந்த நேரத்துல சுகன்யாவும் செல்வாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பப்பட்டால் மட்டுமே இந்தக் கல்யாணம் நடக்கும். அப்பத்தான் அவங்க சுகமாயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.”

“குமார்… நீங்க சொல்றது எனக்குப் புரியுது. திரும்பவும் சொல்றேன். சுகன்யாவோட எடத்துல வேற யாரையும் என்னால வெச்சுப் பாக்க முடியாதுன்னு மல்லிகாவும் முடிவெடுத்திருக்கா. எங்க மனசுல இருக்கறதை, உங்க வைப் சுந்தரிகிட்டவும் தெளிவா சொல்லுங்க… பத்து நாள் போகட்டும். நானே வந்து அவங்களை நேர்ல பாத்து இதை சொல்றேன்.!

“நடராஜன் நீங்க சொல்றதை கேக்கறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா நாம இப்ப கொஞ்சம் பொறுமையா இருக்கறது நல்லதுன்னு எனக்குத் தோணுது.

“யெஸ்… வேற வழியில்லே.”

“நடராஜன்… இந்த நேரத்துல உங்ககிட்ட ஒரு ரிக்வெஸ்ட் பண்ண விரும்பறேன். ஆஃபிசுல எப்பவும் போல நீங்க இயல்பா உங்க வேலையைப் பாக்கணும். நம்ம ரெண்டுபேருக்கும் இடையில இருக்கற சுமுகமான உறவுக்கு நடுவுல, அது அலுவலக உறவாயிருந்தாலும் சரி; தனிப்பட்ட நட்பாயிருந்தாலும் சரி; செல்வா எடுத்த முடிவு, எந்த மாத்தத்தையும் எப்பவும் உண்டு பண்ணாது.”

“தேங்க் யூ குமார்…” நடராஜன் தன் நண்பரின் கையை அழுத்தமாக குலுக்கினார்.

“நடராஜன்… செல்வா உங்க வீட்டுக்கு இன்னைக்கே வந்து சேருவான். நானும் சீனுகிட்டே பேசறேன்… கவலைப்படாம வீட்டுக்குப் போங்க.” குமார் மென்மையாக சிரித்தார்.