கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

சுகன்யா தன் மேல் விழும் தூறலில் விருப்பத்துடன் நனைய ஆரம்பித்தாள். தன் கைகளை இடவலமாக வீசி எகிறி எகிறி குதித்தாள். மழையில் நனைந்ததால், தன் மனம் இலேசாகி, தேகம் காற்றில் பறப்பதை அவள் உணர ஆரம்பித்தாள். மழை நின்றதும், அனுவை அழைத்துக்கொண்டு, எங்கேயாவது ஜாலியாக வெளியில் போய் சுற்றிவிட்டு வரவேண்டுமென தன் மனதுக்குள் திட்டமிட்டுக்கொண்டாள்.

போர்டிகோவிற்குள் அடித்துக்கொண்டிருந்த மழையின் சாரலில் தன் உடல் நனைய நின்றிருந்தாள் சுகன்யா. இரு கோப்பைகளில் கொதிக்கும் காஃபியுடன் மெஸ்ஸின் வாசலுக்கு வந்தாள் அனு. சுழன்று சுழன்று அடித்த காற்றில் அனுவின் தலை முடி கொத்தாக அவள் முகத்தில் வந்து விழுந்தாடிக்கொண்டிருந்தது.

கொழு கொழுவென்ற உடலுடன், கள்ளமில்லாத குழந்தை முகத்துடன், சூடான காஃபியை, தன் சிவந்த உதட்டால் ஊதி ஊதி மெல்ல உறிஞ்சிக்கொண்டிருந்த அனுவின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுகன்யா.

“ரெண்டு மாசமா பாத்துக்கிட்டு இருக்கேன். இந்த அனுதான் எவ்வளவு நல்லவ? இவளுக்கு முகம் மட்டும்தானா அழகா இருக்கு… மனசும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கே? இவளை வேணாம்ன்னு சொல்றதுக்கு இவ லவ்வருக்கு எப்படி மனசு வந்திச்சி…”

“என்னடி சுகா… எதுக்குடி நீ என்னை உத்து உத்துப்பாக்கறே? என் புருவத்தை காலையில நானே ட்ரிம் பண்ணேன். சரியா இல்லையாடீ? கொஞ்சம் பாத்து சொல்லுடீ…” அனு, சுகன்யாவை நெருங்கி வந்தாள்.

“அனு… என்னைப்போய் ப்யூட்டி குயின்… ப்யூட்டி குயின்னு நீ சொல்றே… ஆனா உண்மையைச் சொல்லணும்ன்னா… என்னை விட நீதான்டீ கொள்ளை அழகா இருக்கே? உன் புருவம் என்னடி புருவம்? உனகென்னடீ கொறைச்சல்? ராஜாத்தி மாதிரி இருக்கே.” இதமான காற்றில் அடிக்கும் மழைத்துளிகள் பறந்து வந்து தன் உடலில் மோத, கையிலிருந்த காஃபியை சுகன்யாவும் பரபரப்பில்லாமல் ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.

“ஆமாம்.. என் அழகை நீதான்டீ மெச்சிக்கணும்?”

அனு தன் தலையை கோதிக்கொண்டாள். தான் அணிந்திருந்த காட்டன் குர்த்தியின் முனையை திருகிக்கொண்டே, சுகன்யாவின் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

“ஏண்டீ அலுத்துக்கறே? வெளியிலே எங்கேயாவது போவலாமா? இன்னைக்கு லஞ்ச் என் செலவுலதான்.. என்னடீ சொல்றே நீ?” சுகன்யா பூவாக சிரித்தாள்.

மழை இப்போது கொட்டோ கொட்டென கொட்டிக்கொண்டிருந்தது. சுகன்யா நிமிர்ந்து மைதானத்தை பார்த்தாள். கூச்சலுடன் மாங்காய் பொறுக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள் இப்போது காணாமல் போயிருந்தார்கள்.