கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

கட்டிலின் மேல் கிடந்த சுகன்யாவின் செல் மெல்ல சிணுங்க ஆரம்பித்தது. மணி பத்தாச்சு. இந்த நேரத்துல யார் கிட்டேருந்து கால் வருது? அனுவாத்தான் இருக்கும்! சம்பத் இதைச் சொன்னாரு. சம்பத் அதைச்சொன்னாருன்னு, இன்னைக்கு என்ன புதுக்கதை சொல்லப்போறாளோ? வர்ற காலை அட்டண்ட் பண்ணிட்டு, டயமுக்கு தூங்கினாத்தான், நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்து, சமையலை முடிச்சுட்டு, ஆஃபிசுக்கு ஒழுங்கா கரெக்டான நேரத்துக்குப் போக முடியும்???

சுகன்யா விருட்டென எழுந்தாள். பவுர்ணமி நிலவுக்கும், அதன் குளுமையான மெல்லிய வெளிச்சத்திற்கும் ஒரு டாட்டா காட்டினாள். தரையில் கிடந்த பெட்ஷீட்டை உதறியெடுத்துக் கொண்டு, தன் படுக்கையறைக்குள் வேகமாக நுழைந்தாள்.
“ஹலோ.. அயாம் சுகன்யா ஹியர்… நீங்க யாரு?” செல்லை பாய்ந்து எடுத்த சுகன்யாவால், தன்னை அழைத்தது யார் என்பதை அவளால், செல்லில் பளிச்சிட்ட நம்பரை மட்டும் வைத்து புரிந்து கொள்ள முடியவில்லை.

“சுகன்யா… எப்படியிருக்கேம்மா? மறுபுறத்திலிருந்து வந்த குரலில் அன்பும், கனிவும் பொங்கிக்கொண்டு வந்தன.

“நான் நல்லா இருக்கேன் அங்கிள்.. நீங்க எப்படி இருக்கீங்க?” மறுமுனை இனிமையாக பேச ஆரம்பித்ததும், தன்னுடன் பேசுவது யார் என்பதை புரிந்து கொள்வது, சுகன்யாவிற்கு இப்போது சிரமமாக இல்லை.

“சுகன்யா… மணி ஏற்கனவே பத்தாயிடுச்சு… உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணிடலியே?” நடராஜன் மிருதுவாக பேசினார்.

“அங்கிள்… நீங்க என்னை எப்ப வேணாலும் கூப்பிடலாம். ஆனா யாரோ முகம் தெரியாத ஒருத்தர் கிட்ட பேசற மாதிரி என் கிட்ட நீங்க ஃபார்மலா பேசினா, அப்புறம் உங்க கிட்ட நான் பேசமாட்டேன்… ஆமாம்…”

நடராஜனுடன் சகஜமாக சிரித்து பேசுவதாக நினைத்தவளால் மேற்கொண்டு ஏதும் பேசமுடியாமல், தன் முகம் வாடி சட்டென மவுனமானாள். அவர் தன்னைக் கூப்பிட்டு பேசுவார் என்று சுகன்யா சிறிதும் எதிர்பார்த்திராததால், கன்னங்கள் சிவந்து, உடலின் உஷ்ணம் வேகமாக ஏறி அவளுடைய குரல் சட்டெனத் தழுதழுத்தது.

நடராஜனின் குரலால், சில நாட்களுக்குப் பிறகு, தீடிரென புயலாகத் தன் மனசுக்குள் வந்து நின்ற செல்வாவின் முகம் சட்டென போகமாட்டேன் என அடம் பிடிக்க ஒரு நொடி தன் விழிகளை மூடி மூடித்திறந்தாள். இன்னைக்குத் தூங்கினமாதிரிதான் என மனதுக்குள் குமைய ஆரம்பித்தாள்.

செல்வா தன்னுடன் சண்டையிட்டுவிட்டு போனபின், நடராஜனோ, மல்லிகாவோ தன்னிடம் பேசாமலே இருந்தது அவள் மனதை அவ்வப்போது உறுத்திக்கொண்டுதான் இருந்தது. ஆயிரம்தான் இருந்தாலும் புள்ளையை பெத்தவங்களாச்சே… புள்ளையோட தப்பை அவங்க ஒத்துக்குவாங்களா? முதல் ஒரு மாதம் அவள் மனது இந்த போக்கில் போனது என்னவோ உண்மைதான். நாளாக நாளாக இந்த உறுத்தல் அவள் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.

நடராஜன், இப்ப எங்கிட்ட என்ன பேசுவார்? சுகன்யாவின் மனசில் இந்த கேள்வி எழுந்ததும், அவளுக்கு இடது தொடைக்கு கீழ் முழங்கால் இலேசாக உதறியது. இரு கால்களும் தங்கள் வலுவினை இழந்து பஞ்சாக துவண்டன. கட்டிலில் சரிந்து உட்கார்ந்து கொண்டாள். மீனாவின் பிறந்த நாளன்றுதான் அவரை, அவள் கடைசியாக சந்தித்து இருந்தாள். தங்கள் கல்யாணத்தைப்பற்றி அவருடன் மனம் திறந்து பேசிவிட்டு வந்திருந்தாள்.

அந்த வாரக்கடைசியில், கடற்கரையில், செல்வா வெகு மூர்க்கமாக, தன்னை, தன் உறவை, தன் காதலை தன்னிடமிருந்து முறித்துக்கொண்டு போனதும் அவள் நினைவிற்கு வந்தது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் கழித்து, சுகன்யா தில்லிக்கு வந்த பின், நடராஜனுடன் மீண்டும் அன்றுதான் முதன்முறையாக பேசிக்கொண்டிருக்கிறாள்.

“தேங்க் யூ சுகன்யா..!!”

நடராஜனின் குரலில் இருந்த சங்கடம் இப்போது வெகுவாக குறைந்தது போலிருந்தது. தன்
“காலை’ அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனையும், சுகன்யாவின் அந்த நேரத்து மனநிலையையும் வெகு துல்லியமாக அவர் கணக்கிட்டு விட்டிருந்தார். அவளுடன் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்பதையும் அவர் திட்டமிட்டுவிட்டிருந்தார்.

“அங்கிள்… மல்லிகா அத்தை எப்படி இருக்காங்க…?” சுகன்யா தன் மூச்சை நீளமாக இழுத்து தன்னை சுதாரித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

“ஏதோ இருக்காம்மா..?”

“ஏன் அங்கிள் சலிச்சிக்கிறீங்க? அவங்களுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே?” வாய்க்கு வாய் தன்னை அன்புடன், உரிமையுடன், தில்லி வருவதற்கு முன் மாமாவென அழைத்துக்கொண்டிருந்த சுகன்யா இன்று தன்னை
“அங்கிள்’ என்று விளித்தது அவருக்கு சுருக்கென்றிருந்தது.

“தடிமாடாட்டாம், புத்தியே இல்லாத, ஒரு புள்ளையை பெத்து வெச்சிருக்கோமே? சலிச்சுக்காம என்ன பண்றது?” இப்போது நடராஜனின் குரல் தழுதழுப்பாக இருந்தது.

“அங்கிள்…??”

“சுகன்யா…. மொதல்லே அந்த அறிவுகெட்ட முண்டம் பண்ண தப்புக்கு நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேம்மா…”

நடராஜன் நிஜமாகவே அந்த கசப்பான நிகழ்ச்சியால் கலங்கிப் போயிருக்கிறார் என்பதை அவருடைய குரல் அவளுக்கு தெளிவாக சொன்னது. அவர் பேசமுடியாமல் திணறிக்கொண்டிருப்பதையும் சுகன்யா உணர்ந்தாள்.