கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

அனுவைக் கொஞ்சிக்கொண்டே எழுந்த சுகன்யா,
அவளை விருட்டென இழுத்து தன் தோளோடு அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள். சுகன்யாவின் முகத்தில் பூத்திருந்த அந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்ன என்பதை அந்த நொடியில் அனுவால் நிச்சயமாக புரிந்துகொள்ள முடியவில்லை. சுகன்யா அறையை பூட்டி சாவியை தன் தோள் பையில் போட்டுக் கொண்டாள். அனுவின் இடுப்பில் தன் இடது கையை தவழவிட்டவளாக, வேகமாக ரிசப்ஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“அனு… உன் லவ்வரோட பர்த் டே என்னைக்குங்கறதை நீ நிஜமாவே மறந்திட்டியா?” அவர்கள் இருவரும் ரிசப்ஷனை நோக்கி மெல்ல நடந்துகொண்டிருந்தார்கள்.

“இப்ப எதுக்கு இந்தக்கேள்வியை கேக்கறே நீ?”

நடந்து கொண்டிருந்த அனு சட்டென நின்றாள். அன்றைய தேதி ஜூன் மூன்று என்பது சட்டென அவள் மனதுக்குள் உறைக்க அவள் காதலனின் களையான முகம் அவள் கண்ணுக்குள் வந்து நின்றது. சுகன்யாவின் முகத்திலிருந்த குறும்புப்புன்னகையின் அர்த்தம் இன்னும் அவளுக்கு முழுமையாக விளங்கியிருக்கவில்லை. அனு, ஒரு நொடி, சுகன்யாவின் கையை இறுக்கிப்பிடித்தாள். சுகன்யா மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

“அனு… உன் மனசுக்குள்ளவே நீ நினைச்சிக்கிட்டு இருக்கற உன் காதலனை, அவனோட பிறந்த நாளன்னைக்கு, நீ விஷ் பண்ண விரும்புவேன்னு நான் முழுமையா நம்பறேன்.” இதை சொல்லிவிட்டு சுகன்யா, அனுவின் முகத்தை நோக்கி மிக மிக இயல்பாக சிரித்தாள். அவள் உதடுகளில் இருந்த குறும்பின் அர்த்தம், அனுவுக்கு இப்போது இலேசாக புரிவது போல் இருந்தது.

“சுகன்யா… என்னடி சொல்றே நீ? உண்மையைச்சொல்லுடீ… இப்ப இங்கே வந்திருக்கறது யாரு?” இப்போது அவர்கள் ரிசப்ஷனை அடைந்து விட்டிருந்தார்கள்.

“ஹாய் சுகன்யா ஹவ் ஆர் யூ? ஹாய் அனு… ஹவ் டு யூ டூ? எப்போ, எங்கே, யாரை, யார்கூட சந்திப்போம்ன்னு எதிர்பாக்கவே முடியலியே? நம்ம லைப்ல இப்படியெல்லாம் கூட நடக்குமான்னு நிஜமாவே நான் இன்னைக்கு ஆச்சரியப்படறேன்? திஸ் ஈஸ் ரியலி எ சர்ஃப்ரைஸ் டு மீ. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஃப்ரெண்ட்ஸா?” சம்பத் வியப்புடன் பேசிக்கொண்டிருந்தான்.

சுகன்யாவுடன் வந்துகொண்டிருந்த அனுராதாவைக் கண்டதும் சம்பத்தின் முகத்தில் இருந்த உற்சாகப் புன்னகையின் நிறம் சற்றே மாறி மங்கலடித்தது.ஒரே நொடியில் அவன் தன்னை சுதாரித்துக்கொண்டு, எப்போதும் தன் முகத்திலிருக்கும் இயல்பான புன்னகையை வரவழைத்துக் கொண்டான். சினேகிதிகள் இருவரையும் இதமான குரலில் விஷ் செய்தவன், முகத்தில் சிறிதும் தயக்கமேயில்லாமல் அவர்கள் கைகளையும் பிடித்து குலுக்கினான்.

ரிசப்ஷனுக்குள் நுழையும் போதே அங்கே வந்திருப்பது யாராக இருக்கும் என்பதை அனு ஓரளவுக்கு யூகித்துவிட்டிருந்தாலும், சுகன்யாவுக்கு சம்பத் நெருங்கிய உறவு என்பதை மட்டும் அவளால் சுத்தமாக நம்பவே முடியவில்லை. அவளும் சம்பத்தைப்போல் தன்னுள் திகைத்துத்தான் போயிருந்தாள்.

அனுவின் யூகத்துக்கு ஏற்ப, சம்பத் ரிசப்ஷன் வாசலில் நின்றவாறு புன்னகையுடன் தங்களை விஷ் செய்ததைக் கண்டதும், அவள் மனதில் இனம் புரிந்து கொள்ள முடியாத ஒரு மகிழ்ச்சி பீறிட்டெழ ஆரம்பித்தது. சம்பத்தை அவள் கடைசியாக பார்த்து ஒரு வருஷத்துக்கும் மேலாகியிருந்தது.

அனுவின் மனதை கொள்ளையடிக்கும் கவர்ச்சியான அதே சிரிப்பு, இன்றும் சம்பத்தின் முகத்தில் பூத்திருந்தது. அந்த இனிமையான, இதமான, சிரிப்பில்தானே அவள் அவனிடம் மயங்கி போயிருந்தாள். அவனுடைய கம்பீரமான குரலில் தானே, அவள் தன் மனதை அவனிடம் பறிகொடுத்திருந்தாள். அவனுடைய மிடுக்கானத் தோற்றத்தை கண்டுதானே தன் காதலை அவனிடம் தெரிவித்திருந்தாள்.