கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“ம்ம்ம்..” சம்பத் தன் பார்வையை அனுவின் புறம் திருப்பினான். அனு இன்னமும் ரோடையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஒரு நேரத்துல, அனுவோட காதலை நீங்க ஏத்துக்க மறுத்து இருக்கலாம். ஈரத்துணியிலே சுத்தி வெச்சிருக்கற மல்லிகை பூவை மாதிரி, இன்னமும் உங்களை, அவ தன் மனசுக்குள்ளவே பொத்தி பொத்தி வெச்சிக்கிட்டு இருக்கா. உங்க நினைப்புங்கற வாசனையை தன் உள்ளத்குள்ளவேமுகர்ந்து முகர்ந்து பாத்துகிட்டு, தன் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கா.”

“சுகன்யா… இன்னைக்கு அவரோட பர்த் டேப்பா. இன்னைக்கு பூரா அவர் சந்தோஷமா இருக்கணும். இதுதான் என் ஆசை. எனக்கும் அவருக்கும் நடுவுல என்னைக்கோ நடந்த ஒரு மேட்டரை, இப்ப நீ டிஸ்கஸ் பண்ணியே ஆகணுமா?” அனு தன் பார்வையை காருக்குள் திருப்பமால் முனகினாள்.

“கொஞ்ச நேரம் நீ சும்மாயிருடீ… நீயாடீ என்னை இவர்கிட்ட உன்னைப்பத்தி பேச சொன்னே?”

“ப்ச்ச்ச்… இல்லே…” அனு மீண்டும் மெல்லிய குரலில் முனகினாள்.

“பாத்தீங்களா அத்தான்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செல்லுலே பேசும்போது, நான் யார் மனசை புரிஞ்சுகலேன்னு என் கிட்ட கேட்டீங்களே? இப்ப உங்களுக்கு புரியுதா?”

“சுகா..”

“உங்க பர்த் டே அன்னைக்கு உங்க சந்தோஷம்தான் முக்கியம்ன்னு நினைக்கறவளோட மனசைத்தான் இப்ப நீங்க முக்கியமா புரிஞ்சிக்கணும்.”

“சுகன்யா… அயாம் சாரி.. உண்மையாகவே உன்னோட குற்றசாட்டுக்கு இப்ப என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியலே.” முகத்தில் இலேசான குழப்பத்துடன் சம்பத் தன் சீட்டில் தளர்ந்து சரிந்தான்.

“அத்தான்.. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொல்றதை மட்டும் காது குடுத்து கேட்டாப் போதும்…”

“சுகன்யா உன் அத்தான்கிட்ட நீ பேச விரும்பறதையெல்லாம், என் எதிர்லேதான் பேசணுமா?” அனு அசௌகரியமாக தன் ஆசனத்தில் நெளிந்தாள்.

“ஆமாம்டீ… நீ கொஞ்ச நேரம் பேசாம இருன்னு சொல்றேன்”

“அத்தான், உங்ககிட்ட எனக்கிருக்கற உறவாலேயும், உங்க மேல இருக்கற உண்மையான அக்கறையாலேயும், அனுவோட ஃப்ரெண்டுங்கற உரிமையாலேயும், இப்ப நான் உங்க ரெண்டு பேரைப்பத்தியும் பேசிகிட்டு இருக்கேன். உங்க தனிப்பட்ட விஷயத்துல நான் தலையிடறது உங்களுக்கு பிடிக்கலேன்னா அதை ஓப்பனா சொல்லிடுங்க…”

இதுவரை பின்சீட்டை நோக்கி அவர்களைப் பார்த்து உரையாடிக்கொண்டிருந்த சுகன்யா விருட்டென திரும்பி உட்கார்ந்துகொண்டு, தன்னெதிரில் தன்னை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருக்கும் அகலமான வீதியைப்பார்க்க ஆரம்பித்தாள்.
“சுகா.. உன்னை நான் தப்பா எதுவும் சொல்லலீயே? எதுக்காக நீ கோவப்படறே?” சம்பத் தன் முகம் சுருங்கினான்.

“பின்னே எப்படி பேசணுங்கறீங்க? நீங்க பழைய சம்பத்தாயிருந்தா நான் அனுவைப்பத்தி உங்ககிட்ட பேசியே இருக்க மாட்டேன். நிச்சயமா அவளை என்னோட அழைச்சிக்கிட்டே வந்திருக்க மாட்டேன்.”

“சுகன்யா… ப்ளீஸ்… நான் சொல்றதை கேளேன்.” தன்னால் அவர்கள் நடுவில் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாதேயென்ற ஆதங்கத்தில் அனு அவர்கள் பேச்சின் நடுவில் நுழைந்தாள்.

“சரிடீ.. கடைசியா என்னை நீ ஒரே ஒரு வார்த்தை பேசவிடுடீ… அத்தான்… இப்ப நீங்க அனுவோட செல்லை வாங்கிப்பாருங்க. ஒண்ணுல்லே; ரெண்டுல்லே; பத்து போட்டோ வெச்சிருக்கா. அத்தனையும் உங்களோடதுதான். ஒரு நாள்லே பத்து தரம் திரும்ப திரும்ப அந்த படங்களை பாத்துக்கிட்டு இருப்பா…” சம்பத் அனுவைப்பார்த்தான்.