கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

சம்பத் இப்ப கொஞ்சம் மெலிஞ்சி போயிருக்கானே? எப்பவும் பார்ட்டி பார்டீன்னு அலையறவன்; இன்னும் அந்த பழக்கமெல்லாம் இவனுக்கு இருக்கோ என்னவோ? நேரத்துக்கு சரியா சாப்பிடறது இல்லையோ? ஆனா இந்த ஒரு வருஷத்துலே, முகத்துல ஒரு மெச்சூரிட்டி வந்த மாதிரி இருக்கே?

அவனே சொன்ன மாதிரி, திடுதிப்புன்னு, எதிர்பார்க்காத நேரத்துல, அவனோட பொறந்த நாளைன்னைக்கு என் எதிர்ல வந்து நிக்கறானே? நான் அவனை காதலிச்சது, நான் அவங்கிட்ட என் நேசத்தை சொன்னது, இதெல்லாம் அவனோட ஞாபகத்துல இருக்குமா? என்னைப் பாத்ததும் வெகு இயல்பா சிரிச்சானே?

இதுக்கு என்ன அர்த்தம்? என்னை அவன் மறக்கலேன்னுதானே அர்த்தம். கடைசீல என் மனசுக்குள்ள இருக்கற ஆசை நிறைவேறப்போகுதா? என் வேண்டுதல் வீண் போகலையா? நான் கும்பிடற தெய்வம் என்னை கைவிடலியா? தெரியலியே? அனுவின் மனம் மகிழ்ச்சியில் ஒரு பக்கம் பொங்க, மறுபுறம் ஆயிரம் கேள்விகளுடன் தவிக்க, அவள் உடல் சிலிர்த்துப்போய் நின்றாள்.

“அயாம் பைன்… ஹவ் டூ யூ டூ சம்பத்… ஹேப்பி பர்த் டே டு யூ” அனு தன் மனசார அவனை வாழ்த்தினாள்.

“தேங்க் யூ அனு… தேங்க் யூ வெரிமச்…?” சம்பத் அனுவின் வலது கையை மென்மையாக அழுத்தினான்.

“அத்தான்… அனுவோட கையை குலுக்கினது போதும்.. என் பக்கமும் கொஞ்சம் திரும்புங்க… ஹேப்பி பர்த் டே டு யூ…” சுகன்யா தாமரையாக மலர்ந்தாள்.

“தேங்க் யூ சுகா… உன் வாழ்த்துக்கு தேங்க்யூ… பட் இன்னைக்கு ஒரு நாளாவது என்னை நீ கிண்டல் பண்ணாம இரேன்..” அவளிடம் கெஞ்சுவது போல் அவன் நடித்தான்.

“அத்தான்.. நீங்க உண்மையைச்சொல்லுங்க. என் ஃப்ரெண்ட் அழகா இருக்காளா இல்லியா?”

“ஹேய்.. அனுவுக்கென்ன? ஷி ஈஸ் வெரி வெரி நைஸ் லேடீ.. அண்ட் ஷீ ஈஸ் ஆல்வேஸ் ப்யூட்டிஃபுல்…” அனுவின் முகத்தை, அவனுடைய பாராட்டுதலால் சிவந்த அவள் முகத்தை, அவன் தன் ஓரக்கண்ணால் பார்த்தான். உண்மையாகவே அனு இப்ப முன்னைக்கு அழகா இருக்காளே? உடம்புல கொஞ்சம் சதை போட்டிருக்கு… நல்லா கலர் ஏறின காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்கா? சம்பத் அவளை நீளமாக ஒரு முறைப்பார்த்தான்.

“அத்தான்… அனுவையோ, அல்லது அவளோட வாழ்த்தையோ இன்னைக்கு நீங்க எதிர்பாத்தீங்களா?”

“நிச்சயமா இல்லே. பட் அயாம் ரியலி ஹேப்பி டு மீட் ஹர் அகெய்ன். அனுவை சந்திச்சி கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலே இருக்கும். பெங்களுரூலேருந்து எங்க கம்பெனி வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் இப்பத்தான் அவளைப் பாக்கறேன். தேங்க் யூ அனு. தேங்க் யூ ஃபார் யுவர் விஷ்ஷஸ்.” மீண்டும் ஒரு முறை சம்பத் அவள் கையை பிடித்து மகிழ்ச்சியுடன் குலுக்கினான்.

“உலகம் ரொம்ப சின்னது. நாம நினைக்காததெல்லாம் நடக்குதுன்னு, போனவாரம் நான் சொன்னப்ப நீங்க சிரிச்சீங்களே, இப்ப என்ன சொல்றீங்க?” சுகன்யா சம்பத்தை நோக்கி கேலியாகச் சிரித்தவள், அனுவையும் குறும்பாக நோக்கினாள்.

“யெஸ்… யூ ஆர் ரைட் சுகன்யா…”அவர்கள் மெல்ல காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். இதமான காற்று அவர்கள் உடலைத் தழுவிக் கொண்டுபோனது.