கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“ஓ மை காட்… அத்தான் நீங்க டெல்லிக்கு எப்ப வந்தீங்க? எங்கேருந்து பேசறீங்க..” சுகன்யா துள்ளி குதித்தாள்.

“வந்து ரெண்டு நாளாச்சு. கம்பெனி வேலையா வந்தேன். மண்டே ஈவினிங் பெங்களூருக்கு திரும்பிப் போறேன். இன்னைக்கு நான் ஃபிரீ. அதான் உன்னை மீட் பண்ணலாம்; உன் கூட லஞ்ச் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்; நீ என்னடான்னா என் மேல கம்ப்ளெய்ன்ட் மேல கம்ப்ளெய்ன்டா அடுக்கிக்கிட்டே போறே?”

“அத்தான் நான் இன்னைக்கும், நாளைக்கும் கம்ப்ளீட்லி ஃப்ரீதான். என் ஹாஸ்டலுக்கு வாங்க… உங்களுக்கு லஞ்ச் நான் குடுக்கறேன்.. ஓ.கே.வா?”

“ஏற்கனவே நான் உன் ஹாஸ்டலுக்கு வந்தாச்சு… சுகன்யா… லஞ்ச் வில் பீ ஃப்ரம் மை சைட்…”

“வந்தாச்சா? திரும்ப திரும்ப கேக்கறேன்… எங்க இருக்கீங்க நீங்க?”

“அயாம் அட் யுவர் ரிஸப்ஷன்….”

“அப்பிடியா.. அங்கேயே நில்லுங்க.. ரெண்டு நிமிஷத்துல நான் கீழே இறங்கி வர்றேன்…”

“நோ இஸ்யூஸ்… ஒண்ணும் அவசரமில்லே… நீ நிதானமா வா…”

“லஞ்ச் குடுக்கறேன்னு சொல்றீங்க… எனி திங் ஸ்பெஷல்…?”

“இருபத்தேழு வருஷத்துக்கு முன்னாடி, இன்னையத் தேதியிலதான் நான் இந்த பூமிக்கு வந்தேன்..”

“அத்தான்… ஹேப்பி பர்த் டே டு யூ…” சுகன்யா ராகம் பாடினாள். பேசிக்கொண்டே தன் கைப்பையைத் துணிக்குவியலிலிருந்து தேடி எடுத்து தன் தோளில் மாட்டிக்கொண்டாள். அனுவின் கையை பிடித்து இழுத்தாள்.

“தேங்க் யூ… சுகா… தேங்க் யூ” சம்பத் இனிமையாக சிரித்தான்.

“உங்க பர்த்டே அன்னைக்கு நீங்க எனக்கு டிரீட் குடுத்துத்தான் ஆகணும்… உங்களை யாரு விடப்போறது? ஆனா என் கூட, என் ஃப்ரெண்டும் வருவா? அதுல உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இல்லையே?” சுகன்யா அனுவைப்பார்த்து கண்ணடித்தாள்.

“நீ போயிட்டு வாடீ.. என்னை எதுக்குடீ கூப்பிடறே?” அனு, சுகன்யாவின் முழங்கையை கிள்ளினாள்.

“நீ சும்மாயிருடீ.. நீ எங்க கூட லஞ்சுக்கு வர்றதால என் அத்தான் ஒண்ணும் ஏழையாகிட மாட்டார்? என்னத்தான் நான் சொல்றது சரிதானே?” தாங்கள் பேசுவதை அனுவும் கேட்கட்டும் என சுகன்யா தன் செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

“சுகா… நீ உன் பிரண்டை மட்டுமில்லே; உன் ஹாஸ்டலையே தாராளமா அழைச்சிட்டு வா.. அயாம் ரெடி டு ஹோஸ்ட் எ லஞ்ச்.. ஒரு அழகான பொண்ணோட இன்னைக்கு டயம் பாஸ் பண்ணலாம்ன்னு நினைச்சேன். உன் கூட இன்னோரு அழகான பொண்ணும் வர்றான்னா எனக்கென்ன பிரச்சனை…?”

“என் ஃப்ரெண்ட் அழகான பொண்ணு மட்டும் இல்லே..” சுகன்யா சிரித்தாள்.

“பின்னே?”

“நேர்ல பாத்தீங்கன்னாத்தான் தெரியும்.”

“உன் ஃப்ரெண்டு யாரு சுகா? அவ பேர் என்ன? உன் ஃப்ரெண்ட் உன்னை விட அழகா?”

“செர்ட்டெய்ன்லீ… அவ என்னவிடவே அழகுதான். அவ எவ்வளவு நல்லவ தெரியுமா? நிச்சயா அவளை நீங்க பாத்தீங்கன்னா இன்னைக்கு அசந்து போய் நின்னுடுவீங்க…” சுகன்யாவின் முகத்தில் சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது. அனு அவள் இடுப்பைக் கிள்ள ஆரம்பித்தாள்.

“சுகா.. ஐ ஹாவ் ஏ கார் வித் மீ… நான் டில்லியில எங்கேயாவது ஒரு கோவிலுக்கு போய், சுவாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணித்தான் ஆகணும்ன்னு என் அம்மா உத்தரவு போட்டு இருக்காங்க… மலை மந்திருக்கு போகலாமா? சீக்கிரம் இறங்கி வாயேன்… அயாம் வெய்ட்டிங் ஃபார் யூ கேர்ல்ஸ்…”