கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“அங்கிள்… பெரியவங்க நீங்க என்ன தப்பு பண்ணீங்க? எந்த காரணமும் இல்லாம, நீங்க இப்படி என் கிட்ட மன்னிப்பு கேட்டு என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காதீங்க… அங்கிள் ப்ளீஸ்…” சுகன்யாவின் கண்கள் கலங்கிவிட்டிருந்தது.

“ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சுக்கத்தெரியாதவனா, அவன் மேல உண்மையான அன்பு வெச்ச ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதையை குடுக்கத் தெரியாதவனா என் புள்ளையை நான் நான் வளர்த்திருக்கேனே; அது என் தப்புத்தானேம்மா…” நடராஜன் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

“அங்கிள்… செல்வா அன்னைக்கு ரொம்ப கோபமா இருந்தப்ப.. நான் என்னால முடிஞ்சவரைக்கும் பொறுமையா இருந்தேன் அங்கிள்.. என் நடத்தையை திரும்ப திரும்ப அவர் சந்தேகபட்டு என்னைத் தவறா பேசினதுனாலேதான் என் பொறுமையை நான் இழந்துட்டேன்.. அயாம் சாரி…”

“எல்லா விஷயத்தையும் நான் கேள்விப்பட்டேன். நீ தப்பு பண்றவ இல்லேம்மா… உன்னாலத் தப்பு பண்ணவே முடியாதும்மா.. செல்வா உன்னை சந்தேகப்பட்டது ரொம்பப் பெரிய தப்பு…”

“அங்கிள்… எல்லாம் என் கெட்ட நேரம்… இதுல அவரை மட்டும் கொறை சொல்லி எந்த பலனுமில்லே…”

“அயாம் சாரிம்மா… நீ ஆயிரம்தான் சொன்னாலும், என் புள்ளை செல்வா பண்ணது தப்புதாம்மா… நீயில்லே… வேற எந்த பொண்ணாயிருந்தாலும் இந்த அளவுக்கு உன்னை மாதிரி பொறுமையா இருந்திருக்க மாட்டாள்.”

“நான் அதையெல்லாம் மறந்துடறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்… அங்கிள்…”

“ரொம்ப சந்தோஷம்மா… நடந்ததை நீ மறந்திட முயற்சி பண்றேன்னு சொல்றியே… உனக்கு உண்மையாவே பெரிய மனசு… ஆனா எங்களையெல்லாம் நீ மறந்துடலியே?”

“நோ… நோ.. அங்கிள் இப்படியெல்லாம் பேசி என்னை அழ வெக்காதீங்க… லாஸ்ட் வீக் கூட நானும் மீனாவும் பேசிகிட்டுத்தான் இருந்தோம். சீனுவும் அப்பப்ப என்கிட்ட பேசிகிட்டுத்தான் இருக்கார்.”

“தெரியும்மா… ஆனா நீ செல்வா மேல இன்னும் கோபமா இருக்கேங்கறதும் எனக்குத் தெரியும்… இப்ப ஒரு விஷயத்தை நான் உங்கிட்ட சொல்ல விரும்பறேன்.”