கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“அம்மா… ப்ளீஸ்… என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழவிடுங்களேன்.” அவன் தன் தாயை கையெடுத்து கும்பிட்டான்.

“குமாரசுவாமிக்கு நான் என்னடா பதில் சொல்றது?” நடராஜன் தன் கையை பிசைந்து கொண்டிருந்தார்.

“அவர் என்னைக் கேக்கட்டும்… அவருக்கு நான் பதில் சொல்லிக்கறேன்.”

“டேய் இந்த அளவுக்குத் திமிராப் பேசாதடா. திருமணங்கறது ஒரு மனுஷனோட நிம்மதியான வாழ்க்கைக்கு போடப்படற ஒரு அஸ்திவாரம்டா. உன்மேல உண்மையான அன்பு வெச்சிருந்த ஒரு பொண்ணோட மனசை அர்த்தமில்லாம புண்ணாக்கிட்டு வந்திருக்கே. இது தப்புடா.” செல்வா அளவுக்கு அதிகமாக மிரள ஆரம்பித்ததும், நடராஜன் கெஞ்சலாக பேச ஆரம்பித்தார்.

“அப்பா… என் மனசு எவ்வளவு தூரம் புண்ணாயிருக்குன்னு உங்களால புரிஞ்சுக்க முடியலே…”

“என் தலையெழுத்து சுகன்யாவை பெத்தவர் முன்னாடி கூனி குறுகி நிக்கற மாதிரி ஆயிடுச்சி. தினம் தினம் நான் அவர் மூஞ்சைப் பாத்தே ஆகணும்… இதுவரைக்கும் யார் முன்னாடியும் என் தலை குனிஞ்சதேயில்லே… இப்ப உன்னால, அந்த ஆளு முன்னாடி என் தலை நிரந்தரமா குனிஞ்சு போச்சு.”

“அப்பா.. உங்க புள்ளை நான் இருக்கும் போது, எதுக்காக நீங்க அவரு முன்னாடி கூனி குறுகி நிக்கணும்? அப்படிப்பட்ட வேலையே உங்களுக்கு வேணாம். அந்த கம்பெனி வேலையை விட்டுட்டு வீட்டுல வந்து உக்காருங்க. நான் கை நிறைய சம்பாதிக்கறேன். உங்களை நிம்மதியா, சந்தோஷமா, நான் வெச்சுக்கறேன்.” செல்வா வீரமாக முழங்கினான்.

“தூ… விழுந்து விழுந்து உன்னை காதலிச்ச ஒரு பொண்ணை சந்தோஷமா வெச்சுக்கறதுக்கு உனக்குத் துப்பு இல்லே. என்னை, என் பொண்டாட்டியை, என் பொண்ணை, நீ சந்தோஷமா வெச்சு காப்பத்த போறியா? இப்படி பேசறதுக்கு உனக்கு வெக்கமா இல்லே. உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கறதுக்கே, வெக்கமாயிருக்குடா. எங்கேயாவது கண்ணு மறைவா ஒழிஞ்சுத் தொலைடா.” நடராஜன் தன் தோளில் இருந்த துண்டை உதறிப்போட்டுக்கொண்டார்.

நடராஜனுக்கு வந்த கோபத்தில் தான் என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் கூச்சலிட ஆரம்பித்தார். சாது மிரண்டதை கண்டதும், மல்லிகா பேச்சு மூச்சில்லாமல், தன் கணவனின் சிவந்த முகத்தை மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

செல்வா விருட்டென எழுந்தான். தன் அறையை நோக்கி ஓடினான். கையில் கிடைத்த நாலு பேண்டையும் நாலு சட்டையையும் ஒரு தோள் பையில் திணித்துக்கொண்டான். காலில் செருப்பை மாட்டிக்கொண்டான். ஹாலில் உட்கார்ந்திருந்தவர்களை திரும்பிப்பார்க்காமல், வெராண்டாவை விட்டு கீழே இறங்கினான்.

“அண்ணா… இப்ப எங்கேடா கிளம்பிட்டே நீ?” மீனா செல்வாவின் பின்னால் ஓடி அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

“விடுடீ என்னை… நீங்களாவது சந்தோஷமா இருங்க… இல்லே என்னையாவது நிம்மதியா இருக்க விடுங்க. நான் எங்கயாவது, கண்ணு மறைவா ஒழிஞ்சு தொலைக்கறேன்.” செல்வா தன் தங்கையின் பிடியை வேகமாக உதறினான்.

“செல்வா இப்ப நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லேடா. அப்பா ஏதோ கோபத்துல பேசிட்டாரு. உன்னை ஒரு வார்த்தை சொல்ல அவருக்கு உரிமையில்லயா? இந்த நேரத்துல, அப்பாவும் அம்மாவும் மனசு ஒடைஞ்சு இருக்கும் போது, நீ வீட்டை விட்டு வெளியிலே போறது நல்லாயில்லே. சொன்னாக்கேளு. ப்ளீஸ்…” மீனா தன்னால் முடிந்தவரை அவனை வீட்டுக்குள் இழுத்தாள்.

“ஏய்.. மீனா… அவன் ரொம்பத்தான் பூச்சி காட்டறான். போகட்டும் விடுடி. இங்கே யாரும் யாரையும் நம்பி பொறக்கலே. தனியாத்தான் வந்தோம். தனியாத்தான் போகணும்.” மல்லிகா தன் தலை முடியை முடிந்துகொண்டாள். சமையலறையை நோக்கி விறுவிறுவென நடந்தாள்.

செல்வா காம்பவுண்டு கேட்டை திறந்து கொண்டு வெளியில் நடந்தான். மீனா வெரண்டா கதவில் சாய்ந்துகொண்டு தன் அண்ணன் போன திசையையே வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள். நடுக்கூடத்தில், நடராஜன் தன் தலையில் இருகைகளையும் வைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

“அயாம் சாரிம்மா சுகன்யா…” தன் மனதுக்குள் அழுதுகொண்டிருந்தார் அவர்.
அலுவலக நேரம் முடிந்து குமாரசுவாமியின் பர்சனல் செகரட்டரி தன் வீட்டுக்கு கிளம்பிவிட்டிருந்தாள். குமார் தன் அறையில் மிகவும் கவனமாக ஏதோ ஒரு பைலில் மூழ்கியிருந்தார். நடராஜன் அவர் அறைக்குள் நுழைந்தார்.

“உள்ளே வரலாமா குமார்?”

“வாங்க நடராஜன்…” குமாரசுவாமி தன் டேபிளின் மேலிருந்த பைலை மூடிவிட்டு எழுந்தார்.
“ உக்காருங்க… இன்னும் வீட்டுக்கு கிளம்பலியா?” சோஃபாவின் பக்கம் தன் கையை நீட்டினார்.