கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“இன்னும் எத்தனையோ பேர் மனசை நீங்க புரிஞ்சிக்கலே? உங்களாலே எத்தனை பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா?”

“என்னால கஷ்டப்படறாங்களா? இன்னும் யாரார் மனசை நான் புரிஞ்சிக்கலே? அப்படி யாரை நான் கஷ்ட்டப்படுத்தறேன்?”

“உங்க அம்மா உங்களுக்குப் பாத்த பொண்ணை நீங்க ஏன் வேணாம்ன்னு சொன்னீங்க? உங்க மேரேஜை சீக்கிரமா முடிக்கணும்ன்னு அத்தை மனசுக்குள்ள எவ்வளவு ஆசையோடு இருக்காங்கன்னு உங்களுக்குப் புரியலியே?”

“என்ன என்னத்தான் பண்ண சொல்றே சுகா?”

“அந்த பொண்ணு வீட்டுல எல்லாருக்கும் உங்களை பிடிச்சிருக்காம்… நானும் அந்த பொண்ணு போட்டோவைப் பாத்தேன்… அவளை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லுங்களேன்… அவளுக்கு என்னக்கொறை?”

“ஸோ… இப்ப நீ என் அம்மாவோட லாயரா பேசிக்கிட்டு இருக்கியா? இல்லே என் மாமா பொண்ணு சுகன்யாவா பேசிக்கிட்டு இருக்கியா? இல்லே என் ஃப்ரெண்டா பேசிகிட்டு இருக்கியா?”

“நான் உங்களோட ஃப்ரெண்டா பேசிகிட்டு இருக்கேன். ஏன் உங்க கல்யாணத்தைப்பத்தி நான் உங்கக்கிட்ட பேசக்கூடாதா? உங்க கிட்ட இதைப்பத்தி பேச எனக்கு எந்த உரிமையும் இல்லையா?”

“வொய் நாட்… நீ பேசலாம்.. ஏன் பேசக்கூடாது?”

“பேசத்தான் போறேன்… நேர்ல வாங்க உங்களுக்கு ஒரு கச்சேரி வெச்சிக்கறேன்… சுவாமி மலைக்கு வந்திருக்கீங்களா?”

“நீயும் எனக்கு கச்சேரி வெக்கப்போறியா? எனக்கு பயமா இருக்கு சுகா… நான் வந்த வழியைப் பாத்துகிட்டு திரும்பி போயிடறேன்..” சம்பத் சிரித்தான்.

“திரும்பி போறீங்களா? இப்ப எங்க இருக்கீங்க?”

“உனக்கு பக்கத்துலேதான் இருக்கேன்…”