கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

இரவு உணவை முடித்துக்கொண்டதும், மறுநாள் சனிக்கிழமை விடுமுறைதானே என்ற காரணத்தால், சுகன்யா முதல்நாள் இரவு ஒரு மணிவரை ஆங்கிலப் புத்தகமொன்றை படித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த அந்த நாவலைப் படித்து முடித்த பின்னரே அவளுக்கு தூக்கம் வந்தது.

மறு நாள் காலையில் சுகன்யா படுக்கையை விட்டு எழுந்தபோது மணி எட்டைத் தொட்டுக்கொண்டிருந்தது. பாத்ரூமிலிருந்து தண்ணீர் வழியும் சத்தம் தொடர்ந்து வந்துகொண்டிருக்க, பக்கத்து கட்டில் காலியாக கிடந்தது. படுப்பதற்கு முன், காலையில் சீக்கிரமாக எழுந்து துணி துவைக்க வேண்டுமென அனுராதா முன்னாள் இரவு சொல்லிக்கொண்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது.

புது இடத்திற்கு சுகன்யாவின் உடம்பும், மனசும் இந்த இரண்டு மாதத்தில் வெகுவாகப் பழகிவிட்டன. கண் விழித்த பின்னும், அரைமணி நேரம் உடலை அசைக்காமல், கட்டிலிலேயே கிடந்தாள் சுகன்யா. மனதை சூன்யத்தில் நிலைக்கவிட்டாள். புருவ மத்தியில் தன் கவனத்தை நிறுத்தினாள். வெகு தூரத்தில் நீல ஜ்வாலை மெல்ல எழுந்தது. இடம் வலம் அசைந்தது. மேலும் கீழுமாக அசைந்தது. பின் நிலைத்து நின்றது. பிரகாசித்தது. உள்ளமெல்லாம் இதமான சுகம் மெல்லிய தூறலாக பொழிந்தது. பரவியது.

கட்டிலைவிட்டு எழுந்த சுகன்யா பால்கனிக்கு வந்தபோது, கிழக்கில் வானம் இருட்டிக்கொண்டிருந்தது. பொன்னிற சூரியன் கரு மேகங்களுக்குள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தான். ஆந்தி என்னும் மண்ணோடு சேர்ந்த பேய்க்காற்று வேக வேகமாக அடித்துக்கொண்டிருந்ததில், விடுதி காம்பவுண்டுக்குள் வளர்ந்திருந்த மாமரங்களில் இருந்த மாம்பிஞ்சுகள் சடசடவென காற்றில் கொட்டின. குழந்தைகள் கூச்சலுடன் ஓடி ஓடி தரையில் விழும் மாங்காய்களை பொறுக்கி சேர்த்துக்கொண்டிருந்தனர்.

சுகன்யா அணிந்திருந்த லூசான பைஜாமா, அவள் இடுப்புடன், தொடைகளுடன், புட்டங்களுடன் ஒட்டிக்கொண்டு, அழகான அவள் தேகத்தின் வடிவழகை தெளிவாக வெளிப்படுத்திக்கொண்டிருக்க, அவள் கூந்தல் காற்றில் அலையலையாக பறந்துகொண்டிருக்க, பால்கனியில் சுகன்யா ஒரு தேவதையைப்போல் நின்று கொண்டிருந்தாள்.

“மைடியர் ப்யூட்டி க்யூன்… குட்மார்னிங்…”

அனுராதா ஈரக்கைகளுடன் சுகன்யாவை, அவள் பின்புறத்திலிருந்து கட்டிக்கொண்டாள். அவளுடைய மெண்மையான கைகளிலிருந்து துணி வெளுக்கும் சோப்பின் வாசம் சுகன்யாவின் மூக்கிலடிக்க, அவள் விருட்டென அனுவின் பிடியில் திமிற, அனு அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, அவள் இடுப்பிலும் நறுக்கென கிள்ளிவிட்டு அறைக்குள் துள்ளி ஓடினாள்.

“இந்த மாதிரி தீடீர்ன்னு வந்து என்னை நீ கட்டிப்புடிக்காதேடீன்னு உனக்கு எத்தனை தரம் நான் சொல்லியிருக்கேன்? யாரோன்னு பயந்தே போயிட்டேன் நான்?” சுகன்யா அனுவை துரத்திச்சென்று அவள் முதுகில் பட்டென அடித்தாள். அவள் இவளை விளையாட்டாக அடிக்க, இவள் அவளை திருப்பி செல்லமாக அடிக்க, அவர்களிருவரும் இரண்டு நிமிடங்கள், சிறு குழந்தைகளாக கட்டிலில் விழுந்து புரண்டார்கள்.