கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“கிளம்பணும்… ஒரு நிமிஷம் பர்சனலா பேசணும்”

“சொல்லுங்க…”

“அயாம் சாரி குமார். நடந்த விஷயத்தையெல்லாம், நேத்துதான் மீனா எங்ககிட்ட சொன்னா. சுகன்யா உங்க மகள் மட்டுமில்லே. அவ எங்களோட மகள். நிச்சயமா சுகன்யா மேல எந்த தப்பும் இருக்காதுன்னு நான் நம்பறேன். என் பொண்ணை நான் நம்பலேன்னா வேற யார் நம்புவாங்க? செல்வா அடிச்ச கூத்துக்கு, நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.” நடராஜனின் தலை தாழ்ந்திருந்தது.

“நோ… நோ… நடராஜன்.. ப்ளீஸ் உணர்ச்சி வசப்படாதீங்க. சுகன்யா உங்க பொண்ணுன்னா, செல்வா யாரு? அவன் எங்க வீட்டுப்பிள்ளை தானே? என் அப்பா சொல்ற மாதிரி ஏதோ போதாத வேளை… கெட்ட நேரம், கொழந்தைகளை ஆட்டிப்படைக்குது.” பக்கத்திலிருந்த பிளாஸ்கை திறந்து இரு கோப்பைகளில் தேனீரை ஊற்றி நடராஜனின் பக்கம் ஒரு கோப்பையை நகர்த்தினார்.

“தேங்க் யூ குமார்…” நடராஜன் அவர் கையைப் பிடித்துக்கொண்டார்.

“கோவத்துல என் கண்ணு முன்னாடி நிக்காதடான்னு செல்வாவை கொஞ்சம் கடிஞ்சி பேசிட்டேன். நேத்து காலையில பத்து மணிக்கு வீட்டை விட்டு போனவன் இப்பவரைக்கும் வீட்டுக்கு திரும்பி வரலே. இதை யாருகிட்ட சொல்லி அழறதுன்னு எனக்கு தெரியலே. என்னப்பண்றதுன்னும் புரியலே.?” நடராஜனின் குரல் தழுதழுத்தது.

“நான் வேணா செல்வா கிட்ட பேசிப்பாக்கட்டுமா?” குமாரசுவாமி, நடராஜனின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டார்.

“வேண்டாம் குமார்.. என் மேல இருக்கற கோவத்துல அவன் உங்களை எதுவும் தப்பா பேசிடக்கூடாது..”

“தென்.. சீனு மஸ்ட் பீ த கரெக்ட் பர்சன். செல்வா வீட்டுக்கு வரலேங்கற விஷயம் அவனுக்குத் தெரியுமா?”

“தெரியாது..”