கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

கொட்டிக்கொண்டிருந்த மழை இப்போது மெல்லிய தூறலாக மாறியிருந்தது. கீழ் வானில் சூரியன் இப்போது இலேசாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தான். அனு பதிலேதும் சொல்லாமல், சுகன்யாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தங்கள் அறையை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
காலையிலிருந்து அடித்த காற்றாலும், பெய்த மழையாலும், பகல் நேரத்து வெப்பம் அன்று மிகவும் கணிசமாக குறைந்து விட்டிருந்தது. சுகன்யாவும், அனுவும் வெளியில் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். சுகன்யாவின் செல் சிணுங்கியது. செல்லில் பளிச்சிட்ட நம்பர் அவளுக்குப் பரிச்சயமில்லாததாக இருந்தது.

“ஹலோ… யாரு?”

“ஹாய் சுகன்யா… ஹவ் ஆர் யு? சம்பத் ஹியர்..?”

“பைன்.. பைன்… அத்தான்.. நான் சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க… உங்ககிட்டதான் பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்… நீங்களே என்னை கூப்பிட்டுட்டீங்க…” சுகன்யாவின் முகம் சூரியனைக் கண்ட தாமரையாக மலர்ந்தது.

“சுகன்யா… நீ சும்மா கதை விடாதே…! நீயா ஒரு தரம் கூட எனக்கு போன் பண்ணி பேசினதே இல்லை. ஒவ்வொரு தரமும் உன்னை நான் கூப்பிடும்போதெல்லாம் இந்த பிட்டைத்தான் நீ போடறே?”

“பொய் சொல்லாதீங்க அத்தான்…. சென்னையிலேருந்து எத்தனை தரம் நான் உங்களை கூப்பிட்டு இருக்கேன்? மறந்துட்டீங்களா?”

“நீ டில்லி வந்ததுக்கு அப்பறம் நடக்கிற கதையை சொல்றேன் நான்…” சம்பத்தும் விடாமல் வம்படித்தான்.

“சாரி அத்த்த்தான்… அக்ரீட்ட்ட்… நீங்க ரிங் பண்ணா என்ன? நான் ரிங் பண்ணா என்ன? நாம ரெகுலர்லி பேசிக்கிட்டு இருக்கோம்… அதானே முக்கியம்… பிராமிஸா சொல்றேன்… ரெண்டு மூணு நாள் முன்னாடி… அத்தை எங்கிட்டே பேசினாங்க. உடனே உங்கக்கிட்ட பேசணும்ன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்..” சுகன்யா குழந்தையாக கொஞ்சினாள்.

“ம்ம்ம்… என் அம்மா, உன் கிட்டவும் பேசிட்டாங்களா?” சம்பத் சிரித்தான்.

“ஏன்… என் கிட்ட அவங்க பேசக்கூடாதா?”

“தாராளமா பேசலாமே?” சம்பத் கலகலவென சிரித்தான்.

“உங்களுக்கு சிரிப்பாத்தான் இருக்கும்… நீங்க ஏன் பொம்பளைங்க மனசை புரிஞ்சிக்கவே மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு அலையறீங்க?”

“என்ன நீ
“பொம்பளைங்க”ன்னு பண்மையிலே பேசறே? யார் மனசையெல்லாம் நான் புரிஞ்சுக்கலே?”

“ஆமாம்… உங்க அம்மா மனசை, நீங்க புரிஞ்சிக்கலே; நான் சொல்றதை நீங்க கேக்க மாட்டேங்கறீங்க; தட் மீன்ஸ், என் மனசையும் நீங்க புரிஞ்சிக்கலேன்னுதான் அர்த்தம்; அப்புறம்… அப்புறம்…” சுகன்யா இழுத்தாள்.

“அப்புறம்…?”