கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“ஓ.கே.. அத்தான்… ரெண்டே நிமிஷம்… நாங்க வந்துகிட்டே இருக்க்கோம்..” சுகன்யா தன் செல்லை அணைத்தாள்.

“அனு… கிளம்புடீ… என் அத்தான் என்னைப்பாக்க வந்திருக்கார். நான் பேசினதுலேருந்து நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நினைக்கிறேன்… காலையிலே இன் ஃபேக்ட் அவர்கிட்ட வேற ஒரு விஷயமா பேசணும்ன்னு நினைச்சேன்… ஆனா அவர் நம்பர் கிடைக்கலே… தீடீர்ன்னு மனுஷன் டெல்லிக்கு வந்து நிக்கறார்…
நான் ஒரு முட்டாள்டீ.. இன்னைக்கு அவருக்கு பர்த்டேன்னு நான் மறந்தே போயிட்டேன்… கீழே போனதும் சரியான சண்டை இருக்கு…” சுகன்யா பரப்பரப்பாக பேசிக்கொண்டிருந்தாள்.

“சுகன்யா… உன் அத்தான் உன்னைப் பாக்க வந்திருக்கார். இன்னைக்கு அவருக்கு பொறந்த நாள். கோவிலுக்கு போகணுங்கறார். அவர் கூட நீ போயிட்டு வாடி. உங்கக்கூட நான் வேற எதுக்குடி நடுவுலே?”

“என்னடீ பேசறே? உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன்; நீ எங்கக்கூட வந்துதான் ஆகணும். நீ வரலேன்னா நானும் அவர்கூட லஞ்சுக்கு போக மாட்டேன்…”

“என்னடி இப்படி அர்த்தமில்லாம அடம் புடிக்கறே? உங்க அத்தானை எனக்கு தெரியாது. என்னை அவருக்குத் தெரியாது?” அனு நிஜமாகவே தயங்கினாள்.

“அனு… என் அத்தானை உனக்குத் தெரியாட்டா பரவாயில்லே; ஆனா நான் சொல்றதை கேளு. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீயும் சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் விரும்பறேன்.” சுகன்யாவின் முகத்தில் காரணமேயில்லாமல் ஒரு கள்ளச்சிரிப்பு பொங்கி பொங்கி வந்து கொண்டிருந்தது.

“நீ சந்தோஷமா இருக்கேங்கறது உன் முகத்தைப் பார்த்தாலே நல்லாத் தெரியுதுடீ” அனு நகருவதாக தெரியவில்லை.

“அப்படீனா இப்ப நீ எதுவும் பேசாம என் கூட எழுந்து வா…” சுகன்யா, அனுவின் கையை பிடித்து அவளை இழுத்தாள்.

“ஓ.கே. நான் ரிசப்ஷன் வரைக்கும் வர்றேன். உன் அத்தானை விஷ் பண்ணிட்டு ரூமுக்குத் திரும்பிடறேன்… இஸ் தட் ஓ.கே.?”

“இல்லே. நிச்சயமா இல்லே. ரிசப்ஷன் வரைக்கும் வர்றேங்கறே? அப்படியே கோவிலுக்கும், லஞ்சுக்கும் எங்கக்கூட வர்றதுல உனக்கு என்னடி பிரச்சனை? காலையிலே கோவிலுக்கு போகணும்ன்னு நீயே சொன்னியா இல்லியா?”

“ஆமாம் சொன்னேன்…”

“நானும் என் அத்தானும் லவ்வர்ஸா? அப்படீல்லாம் ஒண்ணுமில்லையே? ஹீ ஈஸ் ஜஸ்ட் மை ஃபிரண்ட் ஆஸ் தட் ஆஃப் யூ… எங்கக்கூட வர்றதுக்கு நீ ஏன் தயங்கறே?”

“சே… சே… அவரை எனக்கு முன்னே பின்னே தெரியாதேடீ… நீங்க ரிலேடிவ்ஸ்… உங்களுக்குள்ள இன்னைக்கு பேசிக்கறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும்.. அவரோட மேரேஜ் பத்தி நீ பேசும் போது நான் எதுக்கு குறுக்கேன்னு நினைக்கறேன் அவ்வளவுதான்.”

“எனக்கு பிரச்சனை இல்லே.. என் அத்தானுக்கு நீ வர்றதுனாலே எந்தப் பிரச்சனையும் இருக்காது… அவர் ரொம்ப ஜோவியல் டைப்… எனக்கு அவரைப்பத்தி தெரியும்…”

“என்னமோ நீ சொல்றே? ஆனாலும் எனக்கு தயக்கமாத்தான் இருக்கு..”

“அனுக்குட்டி… சும்மா படுத்தாதேடி.. சட்டுன்னு கிளம்புடி செல்லம்…”