கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“அவளைப் பொறுத்தவரைக்கும், அவ காதல் முடிஞ்சுப் போன விஷயம் இல்லே. அவ உங்களையே எப்பவும் தன்னோட மனசுக்குள்ளவே நெனைச்சிக்கிட்டு இருக்கா.” சுகன்யா இப்போது அவர்களை பார்க்காமல் கார் ஓடிக்கொண்டிருந்த பாதையை நோக்கியவாறு பேசிக்கொண்டிருந்தாள்.

“ஓ மை காட்…” இம்முறை சற்று உரக்கவே முனகினான் சம்பத்.

முனகிய சம்பத் தன் அருகில் உட்கார்ந்திருந்த அனுவின் முகத்தை தயக்கத்துடன் மீண்டும் ஒருமுறைப் பார்த்தான். அனு தன் இருகரங்களையும் ஒன்றுக்குள் ஒன்றாக கோர்த்து தன் மடியின் மேல் வைத்திருந்தாள்.

கார் ஓடும் வேகத்தில் அனுவின் முகத்தில் அடித்த மெலிதான வெய்யிலில், அவளுடைய குழந்தை போன்ற முகம் அழகாக மின்னிக்கொண்டிருந்தது. அனுவுக்குத்தான் எவ்வளவு அழகான மூங்கில் மாதிரி வழவழப்பான கைகள்? எத்தனை நீள நீளமான விரல்கள் இவளுக்கு? அமைதியான முகம். ஆரவாரமில்லாத பேச்சு. சம்பத், தன் பார்வையில் சிறிதும் காமம் என்பதேயில்லாமல் அவளை நோக்கினான்.

அனு நீ அழகு மட்டுமில்லே; புத்திசாலியும் கூட; இதுல எனக்கு கொஞ்சமும் சந்தேகமேயில்லை. உன்னை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. உன் அழகுல எனக்கு மோகமிருக்கு. ஆனா உன்னை நான் காதலிக்கலைங்கறதுதான் உண்மை. உன்னை மட்டுமல்ல; என்னால எந்தப்பெண்ணையும் காதலிக்க முடியாது. எந்த பெண்ணோடவும் நிரந்தரமான உறவை வெச்சுக்க எனக்கு விருப்பமில்லே. எனக்கு காதல், திருமணம், இதுலேல்லாம் சிறிதளவும் நம்பிக்கையில்லை.

அனு… என்னை நீ புரிஞ்சுக்கணும். உன்னை நான் எந்த விதத்திலும் வற்புறுத்தலை. உனக்கு சரின்னா, நம்ம ஓய்வு நேரத்துல, நம்ம மனசுல இருக்கற ஆசைகளை, உடலின் தேவைகளை, நம்ம விருப்பங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்து தீத்துக்கலாம். உனக்கு விருப்பம் இருக்கறவரைக்கும் இந்த உறவு நமக்குள்ள நீடீக்கும். உனக்கோ எனக்கோ போதும்ன்னு தோணும்போது இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சிடலாம்.

அனுராதா தன் காதலை சம்பத்குமாரனிடம் தெரிவித்தபோது, அவளை, அவள் மனதை, அவள் காதலை புரிந்துகொள்ளமால், அவளிடம் கொஞ்சமும் வெட்கமில்லாமல், பைத்தியக்காரத் தனமாக பேசியது அவன் நினைவுக்கு வந்தது. அந்தக் காலத்துலதான் நான் புத்தியே இல்லாம, யாரையுமே மதிக்காம, திமிர் பிடிச்சி அலைஞ்சுக்கிட்டு இருந்தேனே? சம்பத் தன் தலையை வேகமாக உதறிக்கொண்டான்.

என்னை இவ காதலிக்கறான்னு தெரிஞ்சும், இவளோட காதல் எனக்கு தேவையில்லைன்னு இவளை நான் உதறினதுக்கு அப்புறமும், இவ தன் மனசுக்குள்ளாகவே ஒரு வருஷத்துக்கும் அதிகமா என்னை காதலிச்சுக்கிட்டு இருக்காளே? என் பிறந்த நாளை நினைவு வெச்சுக்கிட்டு இருந்து, என்னோட நலனுக்காக, கோவில்ல அர்ச்சனை செய்ய நினைக்கிறாளே?

என்னை நினைச்சு, தன் காதலை நினைச்சு, என் கண் முன்னாலேயே என் நினைவுல இவ தன் கண் கலங்குகிறாளே. எனக்காகவும் ஒருத்தி அழுறாளா? இது உண்மையாவே சாத்தியம்தானா? சம்பத் அதிர்ந்து போனவனாக அனுவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏன்டா முடியாது? சுகன்யாவை நீ காதலிக்கறேங்கலையா? ஆறு கடலை சேர்ந்துதான் ஆகணும்ன்னு நீ கதை சொல்லலியா? எவ்வளவு காலமானாலும் நீயா வர்ற வரைக்கும் உனக்காக காத்திருப்பேன்னு சுகன்யாகிட்ட ஜம்பமடிச்சிக்கிட்டியேடா, அது உனக்கு மறந்து போச்சா? சுகன்யாவை நீ உன் மனசுக்குள்ளவே நினைச்சுக்கிட்டு இருக்கறது உண்மைன்னா அனு ஏன் உன்னை தன் மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு இருக்கக்கூடாது?

மனதுக்குள் வெகுவாக அதிர்ந்த சம்பத் மெல்ல அனுராதாவின் பக்கம் திரும்பினான். அவள் வலது கரத்தை மிகுந்த நேசத்துடன் வெகு மெண்மையாக தன் இடது கையால் பற்றினான். அனு அவனை நோக்கித் திரும்ப, அவன் விழிகள் அவள் விழிகளை கனிவுடன், காதலுடன் நோக்கின. அனுவின் விழிகள் லேசாக கலங்க ஆரம்பித்தன.