கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“குட்மார்னிங் சுகன்யா… சம்பத் ஹியர்..”

“அத்தான் வெரி வெரி குட்மார்னிங் … நீங்க நிம்மதியா தூங்கினீங்களா? இல்லே கனவு கண்டுகிட்டு கட்டில்லே உருண்டுகிட்டு இருந்தீங்களா?”

சுகன்யாவும், அனுவும் பார்க்கில் காலாற நடந்து முடித்தபின் புல்தரையில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள்.
“அனு… உன் ஆள்தான்டீ’ சுகன்யா ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு அனுவை நோக்கி கண்ணடித்தாள்.

“காலங்காத்தால கிண்டலா? நல்லாத் தூங்கினேன். அப்புறம் ரொம்ப தேங்க்ஸ் சுகா… அயாம் ரியலி ஹேப்பி… எழுந்ததுமே மனசுக்குள்ள ஒரு தெளிவு வந்த மாதிரி இருக்கு…”

“குட்.. அது இருக்கட்டும்.. இப்ப எனக்கெதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க?இதையெல்லாம் இனிமே அனுகிட்ட வெச்சிக்கோங்க… நேத்து நீங்க அவ நம்பரை வாங்கிக்கலையா?” சுகன்யா விஷமமாகச் சிரித்தாள்.”

“நீ பர்மிஷன் குடுத்தா நேர்லேயே வந்து அவ நம்பரை வாங்கிக்கலாம்ன்னு நினைக்கிறேன். அப்படியே அவகிட்டவும் நன்றி சொல்லலாம்ன்னு இருக்கேன்.
“ சம்பத்தும் குறும்பாக சிரித்தான்.

“உங்காளை பாக்கறதுக்கு என் பர்மிஷன் எதுக்கு?” சம்பத் தன்னைப்பார்க்க வரப்போகிறான் என தெரிந்ததும் அனுவின் முகம் மலர ஆரம்பித்தது.

“நீ தானே அவளுக்கு லாயர்… இன்னைக்கும் நான் ஃப்ரீதான்… உனக்குத் தெரியாம எப்படீ நான் அவளை மீட் பண்றது?” சம்பத் இழுத்தான்.

“புரியுது அத்தான்… புரியுது… நீங்க தாராளமா ஹாஸ்டலுக்கு வந்து அவளை எங்கே வேணா அழைச்சிட்டுப்போங்க… ஆனா அவளை முழுசா, பத்திரமா, திரும்ப இங்கேயே கொண்டுவந்து விட்டுடுங்க. சந்தோஷம்தானே?” சுகன்யா அனுவின் இடுப்பைக் கிள்ளினாள்.

“சும்மா இருடீ…” அனு சிணுங்கினாள்.

“அனு பக்கத்துல இருக்காளா?”

“இருக்கா… பார்க்ல இருக்கோம். அல்ரெடி ஸ்பீக்கர் ஆன்… நாம பேசறதை அவளும் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கா… அவகிட்ட செல்லை குடுக்கறேன்; பேசறீங்களா?”

“அதான் நேர்ல வர்றேனே…”

“குட்மார்னிங்ன்னு விஷ்தான் பண்ணுங்களேன். கொறைஞ்சா போயிடுவீங்க?”

“ஹாய் அனு… குட்மார்னிங்…”

“குட்மார்னிங் சம்பத்… ஹவ் ஆர் யூ? இன்னைக்கு வர்ர்றீங்களா?” தன் உதடுகளில் பொங்கும் சிரிப்புடன் அனு குழைந்தாள்.

“ம்ம்ம்..”

“எத்தனை மணிக்கு?”

“அரவுண்ட் டென்.. இஸ் தட் ஓ.கே..?”

“எப்ப வேணா வாங்க… வெய்ட் பண்ணிகிட்டு இருப்பேன்…” அனு செல்லை சுகன்யாவிடம் கொடுத்தாள்.

“அத்தான்… ஒரு விஷயம்…”