கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“அவன் மாறியிருப்பாங்கறதுக்கு என்ன உத்திரவாதம்? அவனை நான் பாத்தே, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிகிட்டே, ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. நானே மறந்துட்ட இந்த விஷயத்துலே, நீ ஏன் உன் டயமை, உன் எனர்ஜியை அனாவசியமா, வீணடிக்க விரும்பறேன்னுதான் எனக்குப் புரியலே?”

“காரணம் சொல்லவா?” சுகன்யா அனுவின் முகத்தை தன் வலது கையால் நிமிர்த்தினாள்.

‘சொல்லு…”

“உன் செல்லுல, இன்னமும் அவன் போட்டோவை நீ சேவ் பண்ணி வெச்சிருக்கே; அந்த போட்டோவை தினமும் கொறைஞ்சது நாலு தரமாவது நீ பாத்துக்கிட்டு இருக்கே: அவன் போட்டோவை பாக்கும் போதெல்லாம் உன் முகத்துல ஒரு பளபளப்பு வருது; ஒரு ஏக்கம் வருது; அவனை உன்னால மறக்க முடியலே; உன் மனசுக்குள்ளவே அவனை நீ வெச்சிக்கிட்டு வெளியிலே சிரிக்கறே; உள்ளுக்குள்ளே அழறே…” சுகன்யா தான் பேசுவதை நிறுத்தினாள்.

“சுகன்யா… ப்ளீஸ்… நீ நினைக்கற மாதிரியெல்லாம் என் மனசுக்குள்ளே ஒன்ணுமேயில்லை.”

“உன் செல்லுலேருந்து அவன் போட்டோவை டிலீட் பண்ணுடீன்னு நான் சொன்னா, உடனே நீ பண்ணிடுவியா?” சுகன்யா அவள் முகத்தை மீண்டும் தன் புறம் திருப்பினாள்.

“இப்பவே பண்ணிடறேன்…” மனதில் கிளம்பிய வீம்புடன் தன் செல்லை விருட்டென எடுத்தாள் அனு.

“ஒரு செகண்ட் நில்லுடீ… அவனை நான் மறந்துட்டேன்னு என் முகத்தை நேரா பாத்து ஓரே ஒரு தரம் சொல்லுடீ. என்னால நீ படற அவஸ்தையைப் பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியலேடீ; இதுதான் நான் அவன் கிட்டே பேசப்போறேன்னு சொல்றதுக்கான முதல் காரணம்.”

“….”

சுகன்யாவுக்கு பதில் ஏதும் சொல்லாமல், காலியாக இருந்த மைதானத்தை நோக்கித் தன் முகத்தை விருட்டெனத் திருப்பிக்கொண்டாள் அனு. அவள் கண்கள் இலேசாக கலங்கிக்கொண்டிருந்தது.

“அனு… அயாம் சாரிடீ.. ஒரு விஷயத்தை மட்டும் நீ நல்லா புரிஞ்சுக்கோ; உன்னை அழவெக்கணுங்கறது என் விருப்பமில்லே”

“இட்ஸ் ஆல்ரைட்… ஐ நோ யூ…” அனுவின் குரல் தழுதழுத்தது.

“அனு… அப்ப நான் சொல்றதெல்லாம் உண்மைதானே?”