கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“என்னடா மூர்க்கனாட்டம் பேசறே? என்னடா ஆச்சு உனக்கு? நீ நெனைச்சா போடுவே, நெனைச்சா கழட்டுவே… உன் மனசுக்குள்ள என்னதான் நினைச்சுக்குட்டு இருக்கே? ஒரு பொண்ணோட மனசை ஒடச்சிட்டு வந்து எதுகை மோனையில பேசறயே உனக்கு கொஞ்சமாவது புத்தி இருக்காடா?”

“என் மனசை அவ நொறுக்கினாளே… அதைப்பத்தி யாராவது ஒருத்தர் கவலைப்படறீங்களா?”

“எதுவாயிருந்தாலும் எங்கக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்லே? சுகன்யாவை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லி, என்னடி இதெல்லாம்ன்னு நான் கேட்டிருப்பேன்லா? இப்ப அவங்க மூஞ்சியிலே முழிக்கமுடியாதபடி பண்ணிட்டியேடா பாவி?” செல்வாவின் தலை முடியை பிடித்து ஆத்திரத்துடன் உலுக்கினாள் மல்லிகா.

“ப்ச்ச்… உன் ஆசை பொண்ணு, நான் மோதிரத்தை கழட்டி போட்டதை மட்டும்தான் உன்கிட்ட சொன்னாளா? அவ ஆஃபீசுல, தன்னோட மானம், மரியாதை எல்லாத்தையும் காத்துல பறக்கவிட்டுட்டு, இன்னொருத்தன்கூட குஜால அடிச்ச கூத்தையெல்லாம் சொல்லலியா?”

“செல்வா… ஒரு நல்லப்பொண்ணை எக்குத்தப்பா பேசாதடா?” மல்லிகா அவனிடம் மன்றாடினாள்.

“என் மருமவ மூக்கும் முழியுமா இருக்கான்னு அவளை உன் தலை மேல தூக்கி வெச்சிக்கிட்டு ஆடினியே? ரீசண்ட்டா, அவளோட முழு நேர வேலை ஆஃபிசுல என்னான்னு உனக்குத் தெரியுமா?”

“அன்னைக்கும் சுகன்யாவைப்பத்தி நீ தான் ஆஹா ஒஹோன்னு சொன்னே… நீ சொல்றதை கேட்டுத்தான் அவளை உனக்கு நிச்சயம் பண்ணோம். இன்னைக்கும் நீதான் அவளைத் தாறுமாறா கன்னா பின்னான்னு பேசறே.” நடராஜன் எரிச்சலுடன் முனகினார்.

“சம்பத்துன்னு அவளுக்கு ஒரு அத்தைப்புள்ள இருக்கான். அத்தான்… அத்தான்னு அவனை செல்லுல கொஞ்சி குலாவறதை தவிர வேற எந்த உருப்படியான வேலையும் அவ செய்யறது இல்லே; இதை அவளோட ஆஃபிசர், என் மூஞ்சியில காறி துப்பாத கொறையா துப்பினா.”

“ப்ச்ச்ச்…
“ மல்லிகா சூள் கொட்டினாள்.

“நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கையில்லேன்னா, உன் ஃப்ரெண்டு சாவித்திரியை போய் கேளு; சாவித்திரிதான் அவளோட ஆஃபீசர். நான் பண்ணதை மட்டும் உனக்கு வத்தி வெச்சாளே, இந்த விஷயத்தையெல்லாம் உன் செல்லப்பொண்ணு உங்கிட்ட சொல்லலையா?” செல்வா முழு மூர்க்கனாக மாறியிருந்தான்.

“இதோ பாருடா… நம்ம வீட்டுலேயும் வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருக்கா. நாளைக்கு அவளும் வேலைக்கு போகப்போறா. போற எடத்துல நாலு ஆம்பிளைகிட்ட அவளும் பேசித்தான் ஆகணும். இன்னொருத்தர் வீட்டுப் பெண்ணைப்பத்தி பேசறப்ப, இதெல்லாத்தையும் மனசுல வெச்சுக்கிட்டு மரியாதையா பேசணும்.” நடராஜன் தன் அடித்தொண்டையில் உறுமினார்.

“நான் சொல்றதை நீங்க யாருமே ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க?” செல்வா சீற்றத்துடன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.

“சீனுவை நேத்து நீ மரியாதை இல்லாமே பேசினியாமே? யானை கொழுத்தா, அது தன் தலையிலே தானே மண்ணை வாரி போட்டுக்குமாம்; உன் கல்யாணத்தை நீயே பைத்தியக்காரத்தனமா நிறுத்திக்கிட்டே. இப்ப உன் தங்கச்சி கல்யாணத்தையும் ஏண்டா நிறுத்தப்பாக்கறே?” மல்லிகா சீறினாள்.

“அம்மா… உன் பொண்ணுகிட்ட அப்பவே நான் சாரீன்னு சொல்லிட்டேன். முடிஞ்சு போன விஷயத்தை திரும்ப திரும்ப கிளறாதே.” செல்வா தான் உட்கார்ந்திருந்த இடத்திலேயே நெளிந்தான். எதிரில் உட்கார்ந்திருந்த மீனாவை முறைத்தான்.

“சரிடா… நீ சொல்றது எல்லாம் சரி. மீனா என் பொண்ணாயிட்டா; அவளுக்கும் உனக்கும் எந்த உறவுமில்லே; அப்படியே இருக்கட்டும்..”

“அம்மா… என்னை யாருமே ஏம்மா புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க?”

“சுகன்யா நீ சொல்ற மாதிரி பொண்ணு இல்லேடா; உன் மனசாட்சியை தொட்டு சொல்லு; நம்ம சுகன்யா இப்படியெல்லாம் தப்பு பண்றவளா? சாவித்திரி என் ஃப்ரெண்டுதான். ஆனா உனக்கு அவளைத் தெரிஞ்சதை விட எனக்கு அவளைப் பத்தி அதிகமா தெரியும்டா. யாரோ பேசறதையெல்லாம் கேட்டுக்கிட்டு, சுகன்யாவை நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கேடா.” மல்லிகா தன் மகனின் முதுகை மெல்ல வருட ஆரம்பித்தாள்.