கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“…”

“சுகும்மா…. ப்ளீஸ்… காலை கட் பண்ணிடாதே…”

“நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”

டேய்… மாங்கா… சுகன்யா உனக்கு சொல்ற பதிலைப் பாத்தியாடா… பிஸியா இருக்காளாம்… செல்வா எல்லாம் உன் நேரம்டா… விதைச்ச வெனையை இப்ப அறுத்துத்தானே ஆகணும்… மனுசனா பொறந்தவன் எவளையும் காதலிக்கவே கூடாது… தன் மனசுக்குள் நொந்து போனான் செல்வா.

“நீ மட்டும்தான் எனக்கு வேணும்ம்மா..?” செல்வா செல்லில் கிசுகிசுக்க சுகன்யாவின் இதயம் வெகு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“மிஸ்டர் செல்வா சினிமாவுல வர்ற ஹீரோ மாதிரி கன்னா பின்னான்னு உளறாதீங்க…?”

“உளர்றேனா?” கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நான் கையைப்பிடிச்சி இழுத்ததும், நாய் குட்டி மாதிரி என் பின்னாடி வந்தா… நான் நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்கன்னு சிரிச்சா…? இப்ப எதுக்கு என்னை மிஸ்டர்ங்கறா? செல்வாவுக்கு இலேசாக மனதில் கிலி பிடிக்க ஆரம்பித்தது.

“பின்னே?” சுகன்யாவின் குரலில் சிறிது கேலி இருந்தது.

“சுகு… ப்ளீஸ் எங்கிட்ட பழையபடி கொஞ்சம் பிரியமா பேசும்மா..”

“உங்களுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன்…”

“என்னம்மா சொல்றே?”

“எங்கிட்ட பேசவே பிடிக்கலைன்னு நீங்க சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம்… என் முகத்தை பாக்கவே பிடிக்கலேன்னு சொன்னதாகவும் நினைவு… அதான் எனக்கு ஒண்ணும் புரியலே” சுகன்யா தன் உதட்டை சுழித்துக்கொண்டே இழுத்தாள்.

“நான் அப்படி பேசினதெல்லாம் தப்புதாம்மா… இப்ப உன்கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும்மா… ப்ளீஸ்… ஒரு ரெண்டு நிமிஷம் அந்த ரூமை விட்டு ஹாலுக்கு வாயேன்…”

“நான் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள எங்க ஊருக்கு போகணும்… திங்ஸ்ல்லாம் பேக் பன்ணிக்கிட்டு இருக்கேன்…” சுகன்யாவின் குரலில் இருந்த கிண்டலும், கேலியும் சற்றே குறைந்திருப்பதாக செல்வாவுக்குத் தோன்றியது.

“சுகு… ரொம்ப பிகு பண்ணாதடி.”

“செல்வா… என்னை போடி வாடீன்னு பேசாதீங்க… பழசையெல்லாம் தயவு செய்து மறந்துடுங்க..”

“அயாம் சாரி சுகன்யா… கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ் பார் மீ..” செல்வாவின் குரல் கெஞ்சலாக வந்தது.

“எங்கம்மா என் பக்கத்துல இருக்காங்க… காலையில உங்கக்கூட நான் பேசிக்கிட்டு இருந்ததே அவங்களுக்கு பிடிக்கலேன்னு எனக்குத் தோணுது… இப்ப என்னால எங்கேயும் வரமுடியாது…”

“பொய் சொல்லாதே செல்லம்… உங்கப்பாவும் அம்மாவும், என் பாதரோட பேசிகிட்டு இருக்காங்க… அவங்க எதிர்லேதான் சீனுவும் நின்னுக்கிட்டு இருக்கான். அங்கேதான் ரகு மாமாவும் இருக்கார். நீ உங்க அத்தையோட ரூமுக்குள்ள உக்காந்து இருக்கே… எனக்கு எல்லாம் தெரிஞ்சுதான் உன்னைக்கூப்பிடறேன். சட்டுன்னு வெளியில வாம்மா…”

சரிதான்… இதெல்லாம் சீனுவோட பிளானாத்தான் இருக்கணும். செல்வா ஹால்லேதான் எங்கேயாவது இருக்கணும்… சுகன்யா தன் தலையிருந்த சற்றே வாடியிருந்த பூச்சரத்தை எடுத்து எறிந்தாள். செல்வா எங்கிருக்கிறான் என ஹாலில் தனது பார்வையை ஓட்டித் தேடினாள்.

“சரி… நீங்க சொல்ல நினைக்கறதை போன்லேயே சொல்லுங்க…”

“சுகன்யா என்கிட்ட பேசறதுக்கு, என்னப்பாக்கறதுக்கு உங்கம்மாவோட பர்மிஷன் நிஜமாவே உனக்குத் தேவைதானா?”

“அந்த தேவையை உண்டாக்கினதே நீங்கதான்.. நான் இல்லே..”

“ப்ளீஸ்… சுகு… நான் பண்ணதெல்லாம் தப்புதான்… உங்கம்மாவுக்கு என் மேல இருக்கலாம்… அதுக்காக என்னை நீ இப்ப கொல்லாதடீ…” செல்வா உருகினான்.

“…”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.