கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“ஏங்க… அந்த குருவிங்க நாம பண்ணதையெல்லாம் பாத்து இருக்குமாங்க…?”

அனு தன் மார்பில் கிடந்த சம்பத்தை புரட்டித்தள்ளினாள்.
அவன் அனுவுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் மாமரத்தின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். மாமரத்தின் அந்த நீண்ட கிளை காலியாக இருந்தது. சிட்டுக்குருவிகள் பறந்து போய்விட்டிருந்தன.

“இல்லடிச்செல்லம்… அதுங்க வெக்கப்பட்டுக்கிட்டு பறந்துடுத்துங்க…”

“சம்பத்… டார்லிங்… அதுங்க புத்திசாலி குருவிங்க…” அனு புரண்டு கணவனின் முகத்தைப்பார்த்தாள். அனுவின் பெண்மை தந்த சுகத்தில், அந்த சுகத்தால் வந்த சந்தோஷத்தில் அவன் முகம் மலர்ந்திருந்தது. அனு தன் கணவன் வெகு அழகாக இருப்பதாக நினைத்தாள்.

தன் கணவனின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவள், அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.
சுகன்யா, செல்வாவின் வீட்டிலிருந்து, தன் வீட்டுக்குத் திரும்பியபோது, அவளுக்கு மிகவும் பிடித்த பூரியும், உருளைக்கிழங்கு மசாலாவும் தயாராக இருந்தது. குமாரும், கனகாவும் சாப்பிட்டுவிட்டனர். சிவதாணு தன் பேத்தியுடன் சாப்பிடுகிறேன் என அவளுடைய வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்.

“எங்கே போய் சுத்திட்டு வர்றேடீ நீ? சட்டுன்னு வந்து சாப்பிடற வழியைபாருடீ… நீ வருவேன்னு தாத்தா டிஃபன் சாப்பிடாம உனக்காக காத்துக்கிட்டு இருக்காரு…”

“தாத்த்தா… உங்களால பசி தாங்கமுடியாது… அப்றம் எனக்காக எதுக்கு நீங்க வெய்ட் பண்றீங்க? சுகன்யா விருட்டென தானே ஒரு தட்டில் இரண்டு பூரியையும் கிழங்கு மசாலாவையும் அள்ளி வைத்தாள். அதே தட்டில் மல்லிகா கொடுத்தணுப்பியிருந்த வடைகறியில் இரண்டு ஸ்பூன் எடுத்து பறிமாறி சிவதாணுவிடம் நீட்டினாள்.

“இன்னைக்கு நீ ஊருக்குப்போறே… உன்கூட உக்காந்து சாப்பிடலாம்ன்னு இந்த கிழவனுக்கு ஒரு ஆசைம்மா…” சிவதாணு அன்புடன் பேத்தியை நோக்கிப்புன்னகைத்தார்.

“இது ஏதுடீ வடைகறி?”

“மல்லிகா அத்தே குடுத்தணுப்பினாங்கம்மா..”

“அவங்க வீட்டுக்கு எதுக்கு போனே நீ? இங்க டிஃபனை பண்ணி வெச்சுட்டு நானும் சாப்பிடாம உனக்காக தேவுடு காத்துகிட்டிருக்கேன்…?”

“சுந்தரீ… கொழந்தை எங்கயோ ஒரு எடத்துல சாப்ட்டுட்டா… நீயும் உக்காந்து சாப்பிடறதை விட்டுட்டு, ஏன் இந்த விஷயத்தை நீ ஒரு பிரச்சனையாக்கறே?”

“நீங்க கொஞ்சம் சும்மாருங்க… உண்மையைச் சொல்லுடி… இப்ப ஏன் அங்கே போனே நீ?”

“அம்ம்மா… அத்தைக்கு உடம்பு சரியில்லேன்னு கேள்விபட்டேன்.. அதான் விசாரிக்கறதுக்குப் போனேன்?”

“பொய் சொல்லாதேடீ… மல்லிகாவுக்கு போன மாசம் உடம்பு சரியில்லே… அதைப்பத்தி விசாரிக்கறதுக்கு இன்னைக்கு நீ ஏன் பொழுது விடிஞ்சும் விடியாத நேரத்துல, அரக்க பரக்க ஓடணும்? உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்… நீ உண்மையைச் சொல்லலேன்னு உன் மொகத்தைப் பாத்தாலே தெரியுது…?”

“சுந்து… கோர்ட்ல நிக்கவெச்சு கேள்வி கேக்கற மாதிரி ஏன்டீ கொழந்தையை மடக்கறே?” குமார் சற்றே எரிச்சலானார்.

“பாருங்க அப்பா… நானும் சென்னைக்கு வந்ததுலேருந்து பாக்கறேன்… இவங்க என்னை எதுக்கெடுத்தாலும் சும்மா சும்மா திட்டிக்கிட்டே இருக்காங்க…” சுகன்யா குமாரின் பக்கத்தில் போய் உக்கார்ந்துகொண்டாள்.

“நான் எங்கடீ உன்னைத் திட்டினேன்…? கேட்டக்கேள்விக்கு நேரா பதில் சொல்லாம… என்னமோ புதுசா பிலிம் காட்டறே?” தன் தலைமுடியை உதறி கொண்டையாக்கிக் கொண்டிருந்தாள் சுந்தரி.

“நான் பண்ண ஒரே ஒரு தப்புக்கு இப்ப நான் எல்லார்கிட்டவும் நல்லா அனுபவிக்கறேன்..” சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. தந்தையின் தோளில் சாய்ந்திருந்தவளின் விழிகள் கலங்கியது.

“என்னம்மா ஆச்சு.. ஏன் இப்ப நீ அழறே?” குமார் பதறிப்போனார்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.