கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“தேங்க்யூ அங்கிள்…” செல்வாவின் தலை இன்னும் நிமிரவில்லை.

“வாங்க சார்… அவர்தான் சொல்றாருல்லே… ஏன் தயங்கி தயங்கி நிக்கறீங்க… உக்காருங்க… எப்டி இருக்கீங்க..?” முகத்திலிருந்த புன்னகை சற்றும் மாறாமல் பேசினாள் சுந்தரி.

“அத்தே.. என்னை சார்ன்னு ஏன் கூப்பிடறீங்க… செல்வான்னு கூப்பிடுங்களேன்…”

“நான் உன்னை என் பிள்ளையா நெனைச்சேன்… ஆனா உன் மேல நான் வெச்ச நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி நீ நடந்துக்கலயே; அதான்.. உன்னை சார்ன்னு கூப்பிடறேன்..” சுந்தரி தன் உதட்டை சுழித்தாள்.

கோவம் வந்தா அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரியே உதட்டை சுழிக்கறாங்களே? செல்வா மனதுக்குள் வியந்தான். வியந்தவன் தன் மார்பில் வியர்த்தான்.
“சுந்து… என்னம்மா இது? வீட்டுக்கு வந்த பிள்ளைகிட்ட கிட்ட பேசற பேச்ச இது?” செல்வாவின் கரத்தை பற்றி இழுத்து சோஃபாவில் உட்காரவைக்க முயன்றாள் கனகா.

“அயாம் சாரி.. அத்தே…” செல்வா சட்டென சுந்தரியின் காலடியில், தரையில், உட்கார்ந்தான். சோஃபாவில் உட்கார்ந்திருந்த சுந்தரியின் முழங்காலில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டான்.

“அத்தே… நான் தப்பு பண்ணிட்டேன்… மடத்தனமா, சுகன்யாவை கன்னா பின்னான்னு, சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்லி, அவ மனசை புண்படுத்திட்டேன்.” சுந்தரி செல்வாவின் தலையைத் ஆதுரமாக வருடினாள்.

“சுகன்யா என் மேல வெச்சிருந்த நிஜமான அன்பை, நிராகரிச்சேன். அத்தே நான் மட்டும் கஷ்டப்படலே. என் மேல அன்பும், அக்கறையும் வெச்சிருந்த உங்க எல்லோருடைய மனசையும் ஒடைச்சிட்டேன். என் தப்பை நினைச்சு இப்ப நான் வெக்கப்படறேன். வருத்தப்படறேன். அத்தே… என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்…”

“எழுந்திருப்பா…” அவனை எழுப்பி தன் பக்கத்தில் உட்க்கார வைத்துக்கொண்டாள் சுந்தரி.

“அத்தே.. அயாம் ரியலி சாரி..” செல்வாவின் கண்கள் கலங்கத்தொடங்கின. பேசமுடியாமல் தவித்தான் அவன்.

தன் தந்தையின் அறையிலிருந்து செல்வா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சுகன்யாவால் பொறுக்கமுடியாமல், ஹாலுக்குள் வந்து தன் தாயின் பக்கத்தில் நின்றாள். அழுகையுடன் பேசிக்கொண்டிருந்தவனை தன்னுடன் சேர்த்தணைத்துக்கொள்ள அவள் உள்ளம் துடித்தாள்.

“செல்வா… சுகன்யா மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நிஜமாவேத் தெரியலைப்பா…” சுந்தரி மெதுவாக இழுத்தாள்.

“அத்தே… ப்ளீஸ்… சுகன்யா இல்லாம என்னால வாழ முடியாது அத்தே…” சுந்தரியின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சலாகப் பார்த்தான். தன் பெண் இல்லாமல் தன்னால் வாழமுடியாதென அவன் சொன்னதைக் கேட்டதும், சுந்தரியின் நெஞ்சு நெகிழத்தொடங்கியது.

“செல்வா… நீ திரும்பி வருவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்டா.” தன் மனசு நிறைந்ததால், சுந்தரியும் தன் விழிகள் கலங்க, தன்னருகில் தலை குனிந்து அமர்ந்திருந்தவனின் உச்சியில் மென்மையாக முத்தமிட்டாள்.

“தேங்க் யூ அத்தே…” செல்வா தன் விழிகளைத் துடைத்துக் கொண்டான்.

“தாத்தா.. இப்ப நேரம் நல்லாருக்கா தாத்தா?”

“ஏன்டா கண்ணு?”

“நிச்சயதார்த்தத்துலே மாப்பிள்ளைக்கு மோதிரம் போடறது நம்ப வீட்டுலே வழக்கம் இல்லேன்னு அம்மா சொன்னாங்க. நான் பிடிவாதமா இவருக்கு போட்டேன். அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் தாத்தா..” சுகன்யாவின் குரல் தழுதழுத்தது.

“புரியுதும்மா… இப்ப செல்வாவுக்கு அந்த மோதிரத்தை திரும்பவும் பரிசா குடுக்க விரும்பறியா நீ?”

“ஆமாம் தாத்தா…”

“சிவ சிவா… தாராளமா செய்ம்மா… உனக்கு நல்ல நேரம் வந்தாச்சு…” சிவதாணு மனதுக்குள் இறைவனை நமஸ்கரித்தார்.

“செல்வா.. என்ன சொல்றே நீ?” சுந்தரி புன்னகைத்தாள்.

“அத்தே… அயாம் ஹானர்ட்… இதுக்கு மேல வேற எதையும் சொல்ல நான் விரும்பலே…” சுகன்யாவை நோக்கி தன் விரலை நீட்டினான் செல்வா.

சுற்றியிருந்தவர்கள் கைதட்ட, சுகன்யா, செல்வாவின் விரலில், மீண்டும் அதே ஆசையுடன், அதே காதலுடன், அதே நேசத்துடன், நான்கு மாதங்களுக்கு முன், தன் காதலன் தூக்கியெறிந்த அதே மோதிரத்தை, மீண்டும் அணிவித்தாள்.

“தேங்க் யூ… சுகன்யா.. ஐ லவ் யூ வெரி மச்…” சுகன்யாவின் வலது கையை அழுத்திப்பிடித்தான். தான் அழுத்திப்பிடித்த கையை திருப்பி மென்மையாக முத்தமிட்டான்.

“செல்வா… அயாம் ரியலி ஹேப்பி டுடே… என் தாத்தா… பாட்டி… அப்பா… அம்மா கிட்ட நாம ரெண்டுபேரும் ஆசீர்வாதம் வாங்கிக்கலாமா?”

“நிச்சயமா…” எல்லையில்லாத அன்புடன் சுகன்யாவை நோக்கினான் செல்வா.

செல்வாவும், சுகன்யாவும், பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, அவர்களின் மனமார்ந்த ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டார்கள். குமாரசுவாமி சுந்தரி தம்பதியினரின் வீட்டில் மீண்டும் சந்தோஷம் வெள்ளமாக பொங்கியோடிக் கொண்டிருந்தது.

முற்றும்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.