கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“சும்மாருடா… கிட்ட வந்துட்டாடா அவ..”

“அடுத்தக் கல்யாண மாப்பிளைக்கு கங்கிராட்ஸ்…
“ சீனுவின் கையை பிடித்து குலுக்கியவள், வேண்டுமென்றே செல்வாவைப் பார்க்காமல், அவன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“தேங்க் யூ சுகன்யா… எப்படி இருக்க்க்கே? சீனு எழுந்து நின்று தன் உடலை வளைத்து பணிவுடன் அவள் கையை பிடித்து குலுக்கினான்?”

“பைன்.. பைன்… இப்ப எதுக்கு என் முன்னால எழுந்து நின்னு உங்க ஆறடி உடம்பை கூனி குறுக்கி ட்ராமா காட்டறீங்க…?”

“என் வருங்கால மாமனார்… நீ பர்மிஷன் குடுத்தாத்தான் என் கல்யாண டேட்டையே பிக்ஸ் பண்ணமுடியும்ன்னு, சொல்லிகிட்டு ஒரு பத்து நாள் கூடத்துக்கும் வெராண்டாவுக்குமா அலைஞ்சார். அந்த அளவுக்கு அவரையே நீ மெரட்டி வெச்சிருக்கே…! உன் முன்னால இந்த சீனு எம்மாத்திரம்?” அவன் புன்னகைத்தவாறே ஆரம்பித்தான்.

“போதும்.. போதும்.. உங்களைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும்… இந்த நக்கலடிக்கற வேலையையெல்லாம் என்கிட்ட வெச்சிக்கதீங்க..!!”

“சரிங்க டீச்சர்…” சீனு மேலும் பணிவது போல் நடித்தான்.

“நீங்க உக்காருங்க மொதல்லே… டீச்சரா…? இது என்ன புதுக்கதை…?”

“ரீசண்டா…. இருட்டினதுக்கு அப்புறம், கூட இருக்கற மொட்டைப்பசங்களை மட்டும் முழுசா நம்பிடாதேடீன்னு யாரோ ஒரு கன்னிப்பொண்ணுக்கு நீங்க லெக்சர் குடுத்தீங்களாமே?” சீனுவின் முகத்தில் சிரிப்பு அலையலையாக பொங்கிக் கொண்டிருந்தது.

“ஸோ… அனு உங்களோட ஃப்ரெண்டாயிட்டா… அவ்வளவுதானே?” சுகன்யா சிரித்துக்கொண்டே ஓரக்கண்ணால் செல்வாவைப் பார்த்தாள். ஏன் இவன் மூஞ்சே சுண்டிப்போயிருக்கு. ராத்திரி தூங்கலையா? ஐயோ பாவம்.. மனசுக்குள் ஒரு வினாடி துணுக்குற்றாள்.

“ஃப்ரெண்டு என்னா ஃப்ரெண்டு… நீங்க கொஞ்ச மனசு வெச்சா… அனு எனக்கு சொந்தக்காரியாவும் ஆயிடுவா…”

“என்னது… அனு எப்படி உங்களுக்கு சொந்தக்காரியா ஆவா?”

“சுகா… புரியாத மாதிரி பேசாதே… என் மச்சான் நொந்து நூலாகி போய்ருக்கான்… நடந்தது நடந்து போச்சு… அவனுக்கு கொழந்தை மனசு… இவனை ரொம்ப கலாய்க்காதே… அப்புறம் நான் அழுதுடுவேன்…” சீனு கண்ணைக் கசக்கினான்.

சுகன்யாவின் புதுப்பட்டுப்புடவை வாசம், அவள் தலையிலிருந்து வரும் மல்லிகையின் மணம், கல்யாண வீட்டுக்கே உரிய ஒரு பிரத்யேகம், இவை எல்லாம் ஒன்றாக கலந்தடிக்க செல்வா தன் மனதுக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். சட்டென எழுந்து சுகன்யாவை கட்டிபிடித்துக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது அவனுக்கு.

கலகலவென சிரிக்கும் சுகன்யாவின் முகத்தை ஓரக்கண்ணால் பார்ப்பதும், தன் விரல்களை நெறித்துக்கொள்வதும், அவள் திரும்பும்போது, அசையும் போது, அவ்வப்போது பளிச்சிடும் அவளுடைய வென்னிற இடுப்பை திருட்டுத்தனமாக பார்ப்பதும், தான் பார்ப்பதை அவள் பார்த்துவிடப்போகிறாளே என்ற தவிப்புடன், உடனே தன் தலையை குனிந்து கொள்வதுமாக இருந்தான் செல்வா.

“இந்தக் கல்யாண வீட்டுல, பெசண்ட் நகர் நடராஜ முதலியாருக்கு மட்டும் வீ.ஐ.பி. ட்ரீட்மென்ட் நடக்குது? மத்தவங்களையெல்லாம் யாரும் கவனிக்கவே மாட்டேங்கறாங்க…?” சீனு சுகன்யாவை கிண்ட ஆரம்பித்தான்.

“நான் எப்படியிருக்கேன்னு என்னைப்பத்தி கவலைப் படறவங்களைத்தானே நான் ஸ்பெஷலா கவனிக்கணும்… அதானே முறை? அதானே ஞாயம்?” பேசிக்கொண்டே வேகமாகத்திரும்பி எதிர் வரிசையில் பரிமாறிக் கொண்டிருந்தவர்களை அழைத்தாள்.

“எப்படி இருக்கே சுகன்யா?” சட்டென முனகிக்கொண்டே அவள் கையை பற்ற முயன்றான் செல்வா.

“சீனு… இவரு யாரு? எப்படி இருக்கேன்னு என்னைக் கேக்கறாரே? என்னை இவருக்குத் தெரியுமா? என்னை எப்படித் தெரியும்ன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்?” சுகன்யா தன் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள். குழிந்த அழகான தொப்புள் வினாடி நேரத்துக்கு பளிச்சிட செல்வா மருண்டான். அவள் அழகில் தொலைந்தான்.

“சுகன்யா. எனக்கு பசி உயிர் போவுது.. நான் சாப்பிடணும்… உங்க ரெண்டு பேரு பஞ்சாயத்தையும் கொஞ்சம் கழிச்சி வெச்சுக்கலாம்.” இலையில் வைக்கப்பட்ட பாதம் ஹல்வாவை அள்ளி வாயில் திணித்துக்கொண்டான் சீனு.

“சீனு… நான் கேட்ட கேள்விக்கு எனக்கு ஒழுங்கான பதில் கிடைச்சா, உங்களுக்கு வி.வி.ஐ.பி டீரீட்மெண்ட் கிடைக்கும். ஸ்பெஷலா என் கையால இன்னும் ஒரு கரண்டி பாதாம் ஹல்வா கொண்டாந்து குடுக்கறேன்…” சுகன்யா இலேசாக தன் உதட்டை சுழித்து குறும்பாக சீனுவைப்பார்த்து சிரித்தாள்.

அடிப்பாவி… நான் யாருன்னா கேக்கறே? என் மனசு தவிக்கறது உனக்குத் தெரியலியாடீ? என் இதயம் சுகன்யா… சுகன்யான்னு துடிக்கறது உனக்கு கேக்கலையாடீ?

“சுகா… உங்க கண்ணாமூச்சி விளையாட்டை அந்த மூலையா போய் நீங்க ரெண்டுபேரும் ஆடுங்க. இப்ப என்னைக் கொஞ்சம் நிம்மதியா சாப்பிட விடுங்க..” சீனு தன் தலைக்கு மேல் இருகைகளையும் உயர்த்தி சுகன்யாவை கும்பிட்டவன், பொங்கலை அள்ளி வாயில் திணித்துக்கொண்டான். மெதுவடையை எடுத்து கடித்தான்.

“சார்… டிஃபன் ஏ கிளாசா இருக்கு…. உங்களை நீங்களே டேரக்டா இவங்ககிட்ட இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்கிட்டீங்கன்னா… நான் கொஞ்சம் நிம்மதியா சாப்பிடுவேன்..” விருட்டென இடதுபுறம் திரும்பி, செல்வாவை நோக்கி கண்ணடித்தான் சீனு.

செல்வா தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து விருட்டென எழுந்தான். நான் அதிகமா விளையாடிட்டேனா? செல்வா எழுந்த வேகத்தை கண்டதும், சுகன்யா ஒரு நொடி மனதுக்குள் அதிர்ந்தாள். அவள் தன்னை சுதாரித்துக்கொள்வதற்குள், செல்வா சுகன்யாவின் வலது கையை இறுகப்பற்றினான்.

செல்வாவின் உள்ளங்கையின் வெப்பம், சுகன்யாவின் மணிக்கட்டை சுட்டது. காலியாக இருந்த டைனிங் ஹாலின் மூலையை நோக்கி அவளை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தான்.

“நல்லா இருக்கியா சுகன்யா?” செல்வாவின் உதடுகள் துடித்தன.

“நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீங்க நல்லாயிருக்கீங்களா?” த்ன் சிவந்த உதடுகளை சுழற்றி நாக்கை லேசாக நீட்டினாள் சுகன்யா.

“வெறுப்பேத்தாதடீ… சத்தியமா சொல்றேன்… நீ இல்லாமே நொந்து போயிருக்கேன்டீ…” செல்வா அவள் கையை வலுவாக நெறித்தான்.

“என்னமோ தாடி மீசை யெல்லாம் வெச்சிக்கிட்டு அலைஞ்சீங்களாமே? கேள்விப்பட்டேன்…” சுகன்யாவின் உதடுகளில் குறும்பு புன்னகை சட்டெனத் துளிர்விட்டது.

“ப்ளீஸ்… சுகன்யா… அயாம் சாரி… அயாம் சாரிம்மா… என்னை மன்னிச்சுடு…” செல்வாவின் குரல் நடுங்கியது. அவள் கரத்தின் மேலிருந்த அவனுடைய பிடி மேலும் இறுகியது.

“எனக்கு கை வலிக்குது…”

“சுகா… உன்னை எங்கெல்லாம் தேடறதுடீ.. அனுவோட ஹேண்ட்பேக், கீயெல்லாம் உங்கிட்ட இருக்காமே?” சுந்தரியின் குரல் அவள் பின்னால் இருந்து வந்தது.

“இதோ வந்துட்டேம்மா…” செல்வாவின் கையிலிருந்து ஒரே உதறலாக உதறி, தன் கையை விடுவித்துக்கொண்டு சுகன்யா சிட்டாக தாயை நோக்கி ஓடினாள்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.