கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“அப்புறம் எப்பம்மா வருவே..?”

“அடுத்த மாசம் மீனா கல்யாணத்துக்கு வரலாம்ன்னு இருக்கேன் தாத்தா…” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளுடைய செல் சிணுங்க ஆரம்பித்தது. எழுந்து மாடியிலிருந்த தன் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினாள்.

* * * * *

“சுகன்யா… குட் மார்னிங்…” சீனுதான் லைனில் வந்திருந்தான்.

“வெரி குட்மார்னிங்… ஹவ் ஆர் யூ சீனு?”

“சுகா… இப்ப நீ எங்கேருக்கே?”

“வீட்டுலேதான் இருக்கேன்..”

“லாஸ்ட் நைட் செல்வா உங்கிட்ட பேசினானா?”

“இல்லையே சீனு…”

“நேத்து ராத்திரி அவன் வீட்டுக்கே வரலையாம்…. இப்பத்தான் மீனா போன் பண்ணா…”

“ஓ மை காட்…”

“டின்னர்ல உன்னைக் காணோம்ன்னு ரொம்பவே எரிச்சலோட இருந்தான்.
“எழுந்து வாடா சாப்பிடலாம்னு’ எட்டுமணிக்கு கூப்பிட்டப்ப,
“ப்ச்ச்ச்க்குன்னான்…” நானும் மீனாவும் சாப்பிட்டு திரும்பி வந்தப்ப ஹால்லே அவனைக் காணோம். வீட்டுக்கு போயிருப்பான்னு நினைச்சோம்….”

“அவரைக் கொஞ்சம் பாத்துக்குங்கோன்னு உங்ககிட்ட சொன்னேன்ல்லா…??”

“அயாம் சாரி சுகன்யா… ஆனா அவன் என்னக் கொழந்தையா…? இருபத்து நாலு மணி நேரம் அவன் பின்னாடியா ஒருத்தன் நிக்கமுடியும்…? அவன் செல் அடிக்குது… யார் காலையும் எடுக்காம அடம் பிடிக்கிறான்…!?”

“என்னை என்னப் பண்ணச் சொல்றீங்க…?” சுகன்யாவுக்கு இலேசாக கால்கள் நடுங்கின. நிற்கமுடியாமல் தன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

“சுகன்யா… யூ ஆர் ஆல்சோ நாட் எ சைல்ட்…. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது? மீனா சொன்னதை உனக்குச் சொல்லிட்டேன்…”

“கோச்சிக்காதீங்க…சீனு

“ப்ளீஸ்… சுகன்யா… திரும்பவும் சொல்றேன்… இன்னைக்கு நீ தில்லிக்கு கிளம்பறதுக்குள்ள, ஒரு ரெண்டு நிமிஷம் அவனை தனியா சந்திச்சி, அவன் என்னதான் சொல்றாங்கறதை கேளு…”

“ம்ம்ம்…”

“இதுக்கு மேல உன் பாடு… அவன் பாடு…” சீனுவின் கால் சட்டென அணைந்தது.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.