கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“என்னப்பா பாக்கறீங்க…” குமார் எழுந்தார்.

“அடுத்த வாரம் புதன்கிழமையன்னைக்கு நாள் நல்லா இருக்குடா… அன்னைக்கு உன் ஃப்ரெண்டு நடராஜனை நம்ம வீட்டுக்கு ஒரு தரம் வரச்சொல்லேன்…

“சரிப்பா…”

“செல்வா…”

“சொல்லுங்கம்மா…”

“சுகன்யா உன்கிட்ட ஆசையா பேசினாளா?”

“பேசினாம்மா… கொஞ்சம் மெதுவா பேசும்ம்மா. அப்புறம் அப்பா என்னா.. ஏதுன்னு கேள்வி மேல கேள்வி கேப்பாரு…”

“உன் மேல அப்பாவுக்கு அக்கறை இல்லையாடா..?

முற்றத்தில் நிழலாடியது. நடராஜன் அவர்கள் இருவரின் முதுகுக்குப் பின்னால் சத்தமெழுப்பாமல் வந்து நின்றார். மனைவியும், பிள்ளையும் பேசுவதிலேயே அவர் கவனமிருந்தது. ஹாலுக்கும், பின் கட்டுமாக நடக்க ஆரம்பித்தார்.

“ம்ம்ம்.. யார் இல்லேன்னது?”

“சுகன்யா வீட்டுக்கு எப்படா போகப்போறே?”

“ம்ம்ம்.. போகணும்…”

“என்னை ஸ்டேஷனுக்கு நீதான் அழைச்சிட்டுப் போகணும்ன்னு சொல்லிட்டுப்போனாளே?

“ஆமாம்மா… நேரா ஸ்டேஷனுக்கு போயிடலாம்ன்னு பாக்கறேன்..”

“ஏன்டா?”

சுந்தரி அத்தைக்கு ரொம்பவே பிடிவாத குணம்… தன்னோட சுயகவுரவம், சுயமரியாதை இதுக்கெல்லாம் ரொம்பவே இம்பார்ட்டன்ஸ் கொடுப்பாங்கன்னு சுகன்யா சொல்லியிருக்கா… நேத்து டின்னர்ல பாத்தப்ப அவங்களை பாத்து சிரிச்சேன்.. பாக்காத மாதிரி போயிடாங்க… அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு…”

“உன்னைப் பத்தியும் எனக்குத் தெரியுண்டா… தப்பு பண்ணவன் நீ… உன் சுயகவுரத்தைப் பாக்கிறியே, அடுத்தவங்களும்தானே தங்க கவுரவத்தை பாப்பாங்க… நேத்தே நல்லாயிருக்கீங்களா அத்தேன்னு… நீதான் ஒரு வார்த்தை அவங்க கிட்டே கேட்டிருந்தா, தேய்ஞ்சா போயிருப்பே….”

“எப்படியிருக்கீங்கன்னு நான் கேட்டு.. அவங்க பதில் சொல்லாம போயிட்டிருந்தா, அதை என்னாலத் தாங்கிக்கிட்டு இருக்க முடியாதும்மா…”

“அதுக்காக…இப்படியே… நீ தயங்கிக்கிட்டு இருந்தா எப்படீடா.. நீ சாரின்னு ஒரு வார்த்தை சொன்னதும்.. சுகன்யா கவுரவம் பாக்காம நம்ம வீட்டுக்கு வந்தாளா இல்லையா?”

“ம்ம்ம்ம்…. ஆமாம்மா..”

நடராஜன், பின் கட்டுக்கு வேகமாக வந்தார்.

“செல்வா…”

“சொல்லுங்கப்பா..”

“நான் ஒரு விஷயம் சொன்னா… நீ கேப்பியா?

“ம்ம்ம்…”

“உன் ஈகோவை.. உன் அங்கங்காரத்தை ஒரு பக்கம் மூட்டையா கட்டி வெச்சுட்டு… நான் சொல்றதை அப்படியே செய்வியா?”

“செய்யறேன்… சொல்லுங்க.. நான் என்ன செய்யணும்?” செல்வாவின் குரல் தளர்ந்து வந்தது. குரலில் சிறிது விரக்தியும், சோர்வும் ஒன்று கலந்திருந்தன.

“நேரா சுகன்யாவோட வீட்டுக்குப்போ… அவ அப்பா குமாரசுவாமியும், சுந்தரியும் வீட்டுலதான் இருக்காங்க…”

“அப்பா…”

“குறுக்கே பேசாதேடா.. ப்ளீஸ்..” நடராஜன், தன் மகனின் தோளை மெல்ல தடவினார். தந்தையின் கரம் தன்னுடம்பில் ஆதரவாக பட்டதும், செல்வா மனம் இளகினான்.

“அவங்க கையைப் புடி.. கால்லே ஒரு தரம் விழு… உன்னை விட வயசுல பெரியவங்க.. நீ கொறைஞ்சு போயிட மாட்டே… நீ குனியறேன்னு உன்னை அவங்க குட்ட மாட்டாங்க.. நீ நல்லா இருன்னு மனசார ஆசீர்வாதம் பண்ணுவாங்க…”

“அவங்க பொண்ணோட நடத்தையை நீ சந்தேகப்பட்டேன்னு உன்னை அவங்க வெறுத்துடலேடா… கண்டிப்பா உன் மேல அவங்களுக்கு கோபம் இருக்கும்… இருக்கணும்… அவங்களும் மனுஷங்கதானே… ஆனா உன் மனசு மாறும்… உன் தப்பை நீ உணருவே… தவிச்சுப் போய்… நீயே சுகன்யாகிட்ட திரும்ப வருவேங்கற நம்பிக்கையில பொறுமையா உனக்காக காத்துகிட்டு இருக்காங்கடா…”

“சரிப்பா…”

“செல்வா.. நானும் ஒரு பிடிவாதக்கார பெண்ணை பெத்து வளத்தவன்தான்.. மீனா பிடிக்காத பிடிவாதமா? இன்னமும், ஒரு பிடிவாதக்கார பெண்ணோட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன். உங்கம்மாவுக்கு இல்லாத பிடிவாதமா?”

“அப்பா…?”

“நான் அவங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்ணேன். புரிஞ்சுகிட்டேன்… என் ஈகோவை கொஞ்சம் கொஞ்சமா விட்டுட முயற்சி பண்ணேன். சந்தோஷமா, திருப்தியா அவங்கக்கூட வாழ்ந்துகிட்டு இருக்கறேன்..!!

“ம்ம்ம்…”

“நம்ம நிச்சயதார்த்தம் கேன்சலுன்னு நீ சுகன்யாகிட்ட உளறினே… அவளும் அதை அவங்க வீட்டுலே சொன்னா; ஆனா நாலு ஊர்காரங்க நடுவுல, உன்னை உக்காரவெச்சு, உன் கழுத்துல அவங்க போட்டாங்களே அந்த தங்கச்சங்கிலியை நம்ம கிட்டேயிருந்து, அவங்க எப்பவாவது திருப்பிக் கேட்டாங்களா?”

“எனக்குத் தெரியாதுப்பா..”

“உன் நிச்சயதார்த்தத்தையே, ஒரு கல்யாணம் பண்ற மாதிரி பணத்தை தண்ணியா செலவு பண்ணி, அந்த பங்ஷனை தடபுடலா நடத்தி, நம்ம மனசு குளிர குளிர, நமக்கு மரியாதை பண்ணாங்களே… அந்த பொண்ணு வேணாம்ன்னு, நீ முகத்தை முறிச்சிக்கிட்டு போனியே, உன்னை என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கடிஞ்சி பேசினாங்களா? இல்லே நாங்க செலவு பண்ண பணத்தை திருப்பிக் குடுங்கண்ணு எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாங்களா?”

“இல்லேப்பா…”

“உங்கம்மா அரை நாள் செலவழிச்சு, நாலு கடை ஏறி இறங்கி, ஆசையா ஆசையா செலக்ட் பன்ணி, சுகன்யாவுக்கு குடுத்த பரிசப் புடவையும், நகையும், நம்ம வீட்டுக்கு திரும்பி வந்திடிச்சா…”

“அப்பா…”

“இன்னும் வரலேடா… அது வரவும் வராது… இது எனக்கு நல்லாத் தெரியும்…”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.