கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“பெரியவங்க நாங்க முடிவு பண்ண விஷயத்தை கேன்சல் பண்றதுக்கு செல்வாவுக்கு என்ன உரிமை இருக்கு? எனக்குத் தெரியாமா இன்னொரு தரம் நீ செல்வாவைப் பாக்கக்கூடாது… பேசக்கூடாதுன்னு… என் அம்மா சொன்னாங்க; நானும் நாலு மாசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தேன் சீனு…”

“சுகன்யா…”

“இன்னைக்கு அவரை உங்கக்கூட நேராப் பாத்ததும், அவர் முகம் வாடிப்போயிருந்ததைப் பாத்ததும்.. என்னை என்னால கட்டுப்படுத்திக்க முடியலே; அவர்கிட்டே பேசிட்டேன்…”

“ஐ அண்டர்ஸ்டேன்ட்… பட் சுகன்யா… ஒரே ஒரு ரெண்டு நிமிஷம் நீ செல்வா கிட்ட பேசணும் சுகன்யா… ப்ளீஸ்…” சீனு, வானத்தை வெறித்துக்கொண்டிருந்த செல்வாவின் தோளில் கையைப் போட்டு அவனைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.

“என்னை வளத்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது என் அம்மா… அவங்க மனவருத்தத்துலே இருக்கும்போது அவங்க சொன்னதை மீறி எதையும் செய்ய எனக்கு விருப்பம் இல்லே; என்னைப் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.. என்னைக் கூப்பிடறாங்க நான் கிளம்பறேன் சீனு…”

“சுகன்யா… ஒன் செகண்ட்….”

“பட் ஐ லவ் ஹிம் சீனு… என் மனசை, என் நிலைமையை அவருக்கு நீங்கதான் புரிய வெக்கணும்… நிச்சயமா எங்கம்மா மனசு மாறிடுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு… அதுவரைக்கும் கொஞ்ச நாள் அவரை பொறுமையா இருக்கச்சொல்லுங்க… டேக் கேர் ஆஃப் ஹிம்…”
அனுவின் திருமணத்திற்காக தில்லியிலிருந்து வந்திருக்கும் சுகன்யாவை நேரில் சந்தித்து, தன் தவறுக்கு அவளிடம் வருந்தி, தொலைத்துவிட்ட தன் காதலை மீண்டும் அடைந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பாண்டிச்சேரிக்கு சென்ற செல்வா, மனதில் பெருத்த ஏமாற்றத்துடன் சென்னைக்குத் திரும்பி வந்திருந்தான்.

“செல்வா… சுகன்யாவைப்பாத்தியாடா?”

“பாத்தேம்மா…”

“என்னடா சொன்னா…”

“சும்மா என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கம்மா..” செல்வா முகத்தை திருப்பிக்கொண்டான்.

“எரிஞ்சு விழாதேடா… நீ சிரிக்கறதையே விட்டுட்டியேடா…! நான் எப்படிடா சும்மா இருக்கறது?”

“நிஜமாவே சுகன்யாவுக்கு பெரிய மனசும்மா..” செல்வா நெகிழ்ந்தான்.

“ம்ம்ம்ம்…”

“சுகன்யாவை என்னோட பேசக்கூடாதுன்னு அவளோட அம்மாதான் கண்டிச்சி வெச்சிருக்காங்க…”

“தான் பெத்த பொண்ணோட நடத்தையை சரியான காரணம் இல்லாம சந்தேகப்பட்டா, எந்த தாய்க்கும் கோபம் வரத்தான் செய்யும்…” நடராஜன் அவர்கள் பேச்சில் குறுக்கிட்டார்.

“அப்பா… நான் சுகன்யாகிட்ட என் தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்…”

“இப்ப கோவத்துல இருக்கறது சுகன்யாவோட அம்மா..”

“இவன் பிரச்சனை எப்பத்தான் ஒரு முடிவுக்கு வருமோ தெரியலே?” மல்லிகா தனக்குத்தானே சலித்துக்கொண்டாள்.

“மீனா கல்யாணம் நடந்து முடியறவரைக்கும் நாம கொஞ்சம் பொறுமையாத்தான் இருந்தாகணும்..” நடராஜன் தன் தோள் துண்டை உதறி கழுத்தில் போட்டுக்கொண்டு தோட்டத்தை நோக்கி நடந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை அனுராதா சம்பத்குமாரன் தம்பதியினர், தங்கள் நண்பர்களுக்கு கொடுத்த இரவுவிருந்துக்கு செல்வாவின் குடும்பத்தினரும், சீனுவின் குடும்பத்தினரும் அழைக்கப் பட்டிருந்தனர். விருந்தளிக்கப்பட்ட ஹாலில் சுகன்யாவைத் தேடி தேடி செல்வாவின் கண்கள் பூத்துப்போக, அவன் மனம் அலுத்துப்போனது.

காதலியைக் காணமுடியாமல் தன் அண்ணன் படும் தவிப்பையும், அவஸ்தையையும் மீனாவால் புரிந்து கொள்ள முடிந்தது. சுகன்யாவின் செல் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கும் தகவலை அரைமணி நேரமாக கேட்டு கேட்டு அவளும் களைத்துப் போய்விட்டாள்.

“சீனு… சுகன்யாவை காணோமே? சம்பத் குடுக்கற டின்னருக்கு வராம அவ எங்கே போயிருப்பா…?”

“நானும் அவளைத்தான்டீ தேடறேன்.. செல்லையும் எடுக்கமாட்டேங்கறா” சீனு மீண்டும் ஒரு முறை சுகன்யாவை தொடர்பு கொள்ள முயன்றான்.

ஹாலில் வலதுபக்கத்தில், சீனுவின் அத்தை உஷா தன் அண்ணியின் காதில் எதையோ குசுகுசுவென சொல்ல, அதைக்கேட்டு மல்லிகாவும் சுந்தரியும், விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, முகவாயில் கையை ஊன்றிக்கொண்டு கூரையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்த செல்வாவை நோக்கி திரும்பினர். பின் மீண்டும் தங்கள் பேச்சில் ஆழ்ந்து போயினர்.

“அனு.. சுகன்யா எங்கே இருக்கா தெரியுமா உனக்கு?” மீனா அவள் காதை கடித்தாள்.

“ஈவீனிங் அவ எங்கக்கூடத்தான் வந்தா… இங்கேதான் இருந்தா… அவ செல்லுல டிரை பண்ணேன்…” அனுவை வாழ்த்த யாரோ வர அவள் அவர்களுடன் பேசுவதில் பிஸியாகிவிட்டாள்.

மூன்றே நாட்களில் அனுவின் முகத்தில் ஒரு இனம் தெரியாத பளபளப்பும், அழகும் குடியேறி இருந்தன. சம்பத்தின் இடது முழங்கையை வளைத்துக்கொண்டு, அழகு தேவதையாக அவள் ஜொலித்துக் கொண்டிருந்தாள். சம்பத் ஓய்வேயில்லாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் மனைவியை முகர்ந்து வாசனை பார்த்துக் கொண்டிருந்தான்.

“மீனா… இந்த ஹோட்டலை சல்லடை போட்டு சலிச்சிட்டேன்… எங்கேயுமே சுகன்யாவை காணோம்.. நாளைக்கு ஊருக்கு போறாளே ஷாப்பிங் எதாவது பண்ண போயிருப்பாளா?”

“அப்படியே போனாலும் யார்கிட்டவாவது சொல்லிட்டுத்தானே போயிருக்கணும்.. அவ எங்கே போன்னான்னு யாருக்குமே தெரியலியே?”

“மீனா… எனக்கு பசிக்குதும்ம்மா… இப்ப சாப்பிட போகலாம் வா… அதுக்குள்ள சுகன்யா வந்தா சரி.. இல்லேன்னா நாளைக்குத்தான் அவளை பிடிக்கணும்…” இருவரும் டைனிங் ஏரியாவை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

ஹாலில் தனியாக ஏஸியில் உட்கார்ந்திருந்த செல்வாவுக்கு வியர்த்தது. செல்வா எழுந்தான். வெளியில் வந்தான். வானத்தை நோக்கினான். இருண்டிருந்தது. மூச்சை நீளமாக நெஞ்சு நிறைய இழுத்தான். கூட்டம் குறைந்திருந்த சாலையில் இலக்கில்லாமல் நடக்கத் தொடங்கினான்.

“சாவு கிராக்கி… வூட்டுல சொல்லிட்டு வந்திட்டியா?” உறுமிக்கொண்டு வந்த ஆட்டோவை கவனிக்காமல் சாலையை கடக்கும் போது டிரைவரிடம் திட்டு வாங்கினான்.

“போடா தேவடியா மவனே..” உரக்க கூவினான். ஆட்டோ கிறீச்சிட்டு நிற்க, சாலையில் நடந்தவர்கள் திரும்பிப்பார்ப்பதை பொருட்படுத்தாமல், வேகமாக ஓடி, ஆட்டோவிலிருந்து இறங்கிய டிரைவரின் சட்டையை கொத்தாகப்பிடித்து உலுக்கினான்.
“ங்க்ஹோத்தா” என அவன் குரல்கொடுக்க, டிரைவரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். மூக்கைப்பிடித்துக்கொண்டு தடுமாறி கீழே விழுந்தவன் மார்பில் பலமாக மிதித்தான்.

விருட்டென ஓடி எதிரில் வந்து கொண்டிருந்த பஸ்ஸில் புட்போர்ட் அடித்தான். பஸ் திருவல்லிகேணியைத் தொட்டு பீச் ரோடில் திரும்ப, ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கி கடற்கரை மணலில் மெல்ல நடக்க ஆரம்பித்தான். கரையில் வந்து மோதும் கடல் அலைகளை வெறித்துக்கொண்டு நின்றான்.

சம்பத்துடன் சுகன்யா விருந்தளிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாலுக்குள் நுழையும் போதே அவளுடைய செல் சிணுங்க ஆரம்பித்தது. அத்தான்… நீங்க அனுவை அழைச்சிக்கிட்டு உள்ளே போங்க… பின்னாடியே நான் வர்றேன்.

“ஹலோ… சுகன்யாவா…?”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.