ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 46

எந்த அளவுக்கு விஸ்வா சுமதியிடம் தங்களது உறவு நிலையை பகிர்ந்து கொண்டு இருப்பான் என்று எண்ணியபடி வனிதா, “ம்ம்ம்”

சுமதி, “ஓ.கே. அங்கேயே மீட் பண்ணலாம். 4 PM O.K?”

வனிதா, “ஓ.கே”

மாலை நான்கு மணியளவில் …

வனிதா, “சாரி மேம். கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. வந்து ரொம்ப நேரம் ஆச்சா?”

சுமதி, “இல்லை. சில நிமிடங்களுக்கு முன்னாடிதான் நானும் வந்தேன்”

வனிதா, “வழியில் ரொம்ப ட்ராஃபிக் இருக்கும்-ன்னு தெரியும். அதுக்குத் தகுந்த மாதிரி சீக்கிரம் ஆஃபீஸில் இருந்து புறப்பட்டு இருக்கணும். என் தப்பு”

சுமதி, “பரவால்லை விடு. என்ன சாப்பிடறே?”

வனிதா, “எஸ்ப்ரஸ்ஸோ”

சுமதி, “ஓ! உன் அமெரிக்கப் பழக்கம் இன்னும் இருக்கா?”

வனிதா, “ம்ம்ம் ”

சுமதி, “குழந்தைங்க எப்படி இருக்காங்க?”

வனிதா, “ம்ம்ம் … ஓ.கே”

சுமதி, “இப்போ எங்கே இருப்பாங்க?”

வனிதா, “நாளைக்கு அவங்களுக்கு லீவ். இன்னைக்கு அம்மாவும் அத்தையும் கூட்டிட்டுப் போயிருப்பாங்க நைட்டு அங்கேயே தங்கிட்டு நாளைக்கு சாயங்காலமா வருவாங்க”

சுமதி, “விஸ்வா எப்படி இருக்கான்?”

வனிதா, “உங்களுக்கே தெரிஞ்சு இருக்குமே. என் கிட்டே எதுக்கு கேட்கறீங்க?”

சுமதி, “வீட்டில் எப்படி இருக்கா-ன்னு கேட்டு இருக்கணும்”

வனிதா, “மூணு மாசத்துக்கு முன்னாடியை விட இப்போ சீக்கரம் வீட்டுக்கு வர்றார். முன்னாடி எல்லாம் முக்கால் வாசி நாள் குழந்தைங்க தூங்கினதுக்குப் பிறகுதான் வீட்டுக்கு வருவார். இப்போ வீட்டில் என் கூடப் பேசறது இல்லை அதனால் வாரத்தில் ஒண்ணு ரெண்டு நாளாவுது குழந்தைங்க தூங்கறதுக்கு முன்னாடி வந்துடறார். சில நாள் குழந்தைங்க சாப்பிடற நேரத்துக்கே கூட வந்துட்டு இருந்தார். இப்போ மறுபடி வேலையில் அவர் கவனம் திரும்பி இருக்கு-ன்னு நினைக்கறேன்”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.