ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 46

விஸ்வா, “I think I am the victim here. Vanitha had fun at my cost”

ராம், “Really? வனிதா அந்த மாதிரி வேணும்-ன்னு செய்யக் கூடியவ இல்லை. உனக்கு வருத்தத்தைக் கொடுக்கணும்-ன்னு செய்யலை. உனக்கு அது நல்லா தெரியும்”

விஸ்வா, “சரி, இப்போ நான் என்ன செய்யணும். சொல்லு”

ராம், “அவ அப்படி செஞ்சதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கணும்”

விஸ்வா, “எப்படியும் அதையும் அவளே டாக்டர் அமுதாகிட்டே சொல்லப் போறா”

ராம், “அவ கோணத்தில் சொல்லுவா. எந்த விதத்திலாவுது உனக்கு அது கஷ்டத்தைக் கொடுக்கும்-ன்னு அவ நினைச்சா சொல்லாமலும் இருக்கலாம். உன் கோணத்தில் என்ன காரணம் இருந்து இருக்கும்-ன்னு யோசி”

விஸ்வா, “என் கோணத்தில் ஒரு காரணமும் இல்லை”

ராம், “அதை உன்னால் நிச்சயமா சொல்ல முடியுமா?”

விஸ்வா, “எஸ்”

ராம், “சந்திரசேகரும் வனிதாவும் பேசிட்டதையே எடுத்துப்போம். ஏன் அந்த மாதிரி ஒரு பேச்சு வந்தது?”

விஸ்வா, “அதுக்குத்தான் வனிதாவே கடைசியா பதில் சொன்னாளே? தான் ஒரு நிம்ஃபோ-ன்னு …”

ராம், “உனக்கு nimphomaniaன்னா என்ன-ன்னு தெரியுமா? சும்மா எதையாவுது அனுமானம் செஞ்சுக்காதே”

விஸ்வா, “அப்படி இல்லைன்னா சந்திரசேகர் சொன்ன மாதிரி அவர்கிட்டே கிடைப்பது அவளுக்கு என் கிட்டே கிடைக்கலை”

ராம், “மறுபடியும் ஏண்டா வெளியே கையை காண்பிச்சுட்டு இருக்கே? வீட்டில் அவளுக்கு எந்த அளவுக்கு நீ அந்த திருப்தியைக் கொடுத்தே-ன்னு முதல்ல யோசிச்சுப் பாரு. என் அனுமானம் இது. கடந்த ஒன்றரை வருஷமா நீ உன் வேலையைத் தவிற எதைப் பத்தியும் யோசிக்கலை. அனேகமா It would have affected your intimacy with Vanitha a lot … நான் சொல்றது சரியா?”

விஸ்வாவின் முகம் வெளுத்தது … பிறகு அவன் சுதாரித்துக் கொண்டு, “சோ, புருஷன் குடும்ப நலனுக்காக பிஸியா இருந்தா மனைவி உடம்பு சுகத்துக்காக வேற ஆள்கிட்டே போறது சரிங்கறியா?”

ராம், “எதுடா குடும்ப நலன்? நீ பெரிய பொஸிஷனுக்கு வர்றதா? அப்படியும் நம் தாத்தா, அப்பா, அம்மா, அத்தை மாமா இவங்க எல்லாம் உனக்காக விட்டுட்டுப் போகப் போற சொத்துக்கு மேல நீ ஒண்ணும் அதிகமா சம்பாதிக்கப் போறது இல்லை. அப்பறம் எது குடும்ப நலன்?”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.