ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

விஸ்வா அவசரமாக, “வேண்டாம்”

ராம், “உனக்கு உன்னை அறியாமல் சில ப்ராப்ளம் இருக்கலாம்-ன்னு மட்டும் சொன்னேன்”

விஸ்வாவிடம் இருந்து விடைபெற்ற பிறகு தன் காருக்கு வந்த ராம் டாக்டர் அமுதாவை கைபேசியில் அழைத்தான் …

அமுதா, “சொல்லுங்க டாக்டர் ராம்”

ராம், “மேம், அவனை மாதிரியே என்னையும் நீ வா போன்னு கூப்பிடுங்க. எனக்கு சங்கடமா இருக்கு”

அமுதா, “God! உங்க குடும்பத்தில் இருக்கும் நெருக்கத்தைப் பாத்து நான் பொறாமைப் படறேன். முயற்சி செய்யறேன் ராம். சொல்லுங்க் … சாரி, சொல்லு”

ராம், “விஸ்வா கூட பேசினேன். நீங்க சந்தேகப் பட்டது சரி. அவங்க ரெண்டு பேருக்கு இடையே உடலுறவு ரொம்ப கம்மியா இருந்து இருக்கு .. என் கிட்டேயும் சொல்ல தயக்கப் படறான். நீங்க வனிதாகிட்டே கேளுங்க”

அமுதா, “நான் சொன்ன ப்ராப்ளம்?”

ராம், “You mean about Pre-mature ejaculation (ஆண்கள் உடலுறவின் போது மிக விரைவில் உச்சம் அடைவது), அனேகமா it will also be combined with Erectile Deficiancy (Erectile Deficiancy – ஆணுறுப்பின் விறைப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வதும் விறைப்பு விரைவில் குறைவதும்). இதெல்லாம் நிச்சயம் என்னுடன் பேச தயங்குவான். அதனால ஆன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் வாசன்கிட்டே அவனை கொண்ட் விட்டு வந்து இருக்கேன்”

அமுதா, “நானே சஜ்ஜஸ்ட் பண்ணனும்ன்னு இருந்தேன். உங்களுக்கு … ஐ மீன் உனக்கு அவரைத் தெரியுமா?”

ராம், “ஒரு முறை அப்பா அவரை அறிமுகப் படுத்தி வெச்சு இருக்கார். அந்த கனக்ஷனைப் பயன் படுத்தி அவரிடம் பேசினேன்”

அமுதா, “அவர் உன் அப்பாகிட்டே இதைப் பத்தி … ”

ராம், “இல்லை. பேச வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேன். அவரும் சரின்னார்”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.