ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

வனிதா, “No! This is not fair. எப்படி அவர் என் குழந்தையை என் கிட்டே இருந்தும் அவளோட உடன் பிறப்பு கிட்டே இருந்தும் பிரிக்கலாம்?”

சுமதி, “I agree. இதைப் பத்தி நான் விஸ்வாகிட்டே பேசலை. அனேகமா உங்க வீட்டில் யாரும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க-ன்னு அவனுக்குத் தெரிஞ்சு இருக்கணும். அதனாலதான் யார் கிட்டேயும் சொல்லாம இருக்கான்”

கண் கலங்கிய வனிதா தலை குனிந்து அழுது குலுங்கினாள் …

சுமதி, “நீ உனக்கு-ன்னு டைவர்ஸ் லாயர் யாரையாவுது நியமிச்சு இருக்கியா?”

வனிதா, “இல்லை”

சுமதி, “ஏன்? விஸ்வா என்ன சொன்னாலும் அதுக்கு நீ ஒத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. உனக்கும் உரிமைகள் இருக்கு இல்லையா?”

வனிதா, “அவர் காட்டின இடத்தில் கையெழுத்துப் போட்டேன். மியூசுவல் கன்ஸர்ன் டைவர்ஸுக்கு ஒத்துக்கலைன்னா அடல்டரின்னு சொல்லி விண்ணப்பிக்கப் போறேன்னு மிரட்டினார்”

சுமதி, “எதுக்கு அவமானம் அப்படின்னு ஒத்துகிட்டேயாக்கும். அப்படி விண்ணப்பிச்சா அவமானம் உனக்கு மட்டும் இல்லை. அவனுக்கும்தான். அதை யோசிச்சியா? நீயும் ஒரு லாயரை வெச்சு வாதடி இருக்கணும்”

வனிதா, “மேம், விஸ்வாவை ஒரு எதிரியா என்னால் பார்க்க முடியலை. அவருடைய விருப்பம் எதுக்கும் நான் குறுக்கே நின்னது இல்லை”

சுமதி, “அப்படின்னா அவன் உன் மகளை கூட்டிட்டு வெளிநாட்டில் போய் செட்டில் ஆனா?”

வனிதா, “நோ, அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”

சுமதி, “நினைச்சேன். எதுக்கும் உனக்கு முன் கூட்டியே எச்சரிக்கை கொடுக்கலாம்-ன்னு உன்னை வரச் சொன்னேன்”

வனிதா, “தாங்க்ஸ் … ”

சுமதி, “அப்பறம், இந்த விஷயம், ஐ மீன், விஸ்வா வேலையைப் பத்தி நான் உனக்கு சொன்னதா சொல்லாதே. அதைப் பத்தி தெரிஞ்ச மாதிரி காண்பிச்சுக்காதே. டைவர்ஸில் நீ உனக்கு வேண்டிய கண்டிஷன்ஸ்ஸை மட்டும் அவனுக்கு சொல்லு”

வனிதா, “ம்ம்ம் ”

சில கணங்கள் மௌனமாக கழிந்தது …

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.