ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 46

விஸ்வா, “ஏன் முடியாது? ஒரு பெண் குழந்தையை நல்ல முறையில் வளர்க்கும் அளவுக்கு உனக்கு பொறுப்பு இல்லைன்னு சொல்லி வாதாடுவேன். You have no morals to teach a girl”

அவனது சொற்களால் மனம் புண்பட்டு கண் கலங்கினாலும் வனிதா, “அமாம் விஸ்வா, இந்த விவாகரத்து கேஸ் தொடங்கும் வரைக்கும் சில விஷயங்களில் எனக்கு போதுமான ஒழுக்க குணம் இல்லாமத்தான் இருந்தது. ஒத்துக்கறேன். ஆனா, தவறை உணர்ந்ததுக்குப் பிறகும் அப்படி இருப்பேன்னு நீ சொல்ல முடியாது. நிச்சயம் அந்த மாதிரி தவறை என் மகளை செய்ய விட மாட்டேன். Still, நீ கூட இருந்து அவளுக்கு தேவையான ஒழுக்கங்களை தேவைப் படும் வயசில் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”

விஸ்வா மௌனம் காத்தான்.

கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட வனிதா, “விஸ்வா, நீ சொன்னது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இருந்தாலும் சில விஷயங்களை யோசிச்சுப் பாரு. என் குழந்தைகளை நான் எப்பவாவுது புறக்கணிச்சு இருக்கேனா? அதே சமயம் குழந்தைகளுக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து அவங்க கூட எவ்வளவு நேரம் நீ செலவு செஞ்சு இருக்கே-ன்னு யோசிச்சுப் பாரு. உண்மையை சொல்லணும்ன்னா நான் ஏற்கனவே ஒரு சிங்கிள் பேரண்டாத்தான் இருந்தேன்”

விஸ்வா, “வாட் டூ யூ மீன்?”

குரலை உயர்த்திய வனிதா, “யூ நோ வாட் ஐ மீன்! நீ எனக்கு மட்டுமா கிடைக்காம இருந்தே? வாரத்தில் எத்தனை நாள் அவங்க முழிச்சுட்டு இருக்கும் போது அவங்க கூட இருந்தே-ன்னு யோசிச்சுப் பாரு”

விஸ்வாவின் முகம் பேயறைந்தது போல் ஆனது.

வனிதா, “விஸ்வா, நான் பெரிய தவறை செஞ்சு இருக்கேன். அதுக்கு என் சுயநலம் மட்டும் தான் காரணம். அதை மன்னிக்கும் மனப்பான்மை உனக்கு இருந்தா நாம் சேர்ந்து வாழலாம். அதுக்கு நீ என்ன கண்டிஷன் போட்டாலும் கேட்கத் தயாரா இருக்கேன். இல்லை பிரிஞ்சு போறதுதான் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்ன்னா அதுக்கும் நான் குறுக்க நிக்க மாட்டேன். என் குழந்தைகளை என் கிட்டே இருந்து பிரிக்க மட்டும் ஒத்துக்க மாட்டேன். இதுக்கு மேல் நான் சொல்லறதுக்கு எதுவும் இல்லை”

விஸ்வா, “சோ, நீ செஞ்ச தவறுக்கு நான் தனியா இருக்கணுமா?”

வனிதா, “உன்னை தனியா இருக்கணும்ன்னு யாரும் சொல்லலை. நீ முன்னாடி இருந்தது போல இப்பவும் இருக்கலாம். நாம் பிரியறதுனால குழந்தைகளின் சுற்றுச் சூழலை மாத்த வேண்டாம். வார நாட்களில் எப்படியும் அவங்க தூங்கின பிறகுதான் வீட்டுக்கு வந்துட்டு இருந்தே. லீவ் நாள் முழுவதும் வேணும்ன்னாலும் நீ அவங்க கூட இரு. அப்போ நான் அங்கே இருப்பது உனக்குப் பிடிக்கலைன்னா அந்த சமயத்தில் எங்க அம்மா வீட்டுக்குப் போயிடறேன்”

விஸ்வா, “You are victimising me … ”

வனிதா, “இல்லை விஸ்வா, I am not victimising you. All I am asking you is not to victimise the children for what I did. என்கிட்டே இருந்தும் விக்ரம்கிட்டே இருந்தும் பிரிஞ்சா வசி எந்த அளவுக்கு கஷ்டப் படுவான்னு யோசிச்சுப் பாரு. Does she deserve it? நான் உனக்கு எந்த தண்டனை கொடுக்கவும் விரும்பலை. நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏத்துக்கத் தயாரா இருக்கேன். இப்பவும் உனக்கு நான் செஞ்ச துரோகத்தை நினைச்சு அழுதுட்டுத்தான் இருக்கேன். நாம் ஒண்ணு சேர்ந்து இருக்க முடியலைன்னா நீ வேறு ஒருத்தியை கல்யாணம் செஞ்சுட்டு சந்தோஷமா இருக்கணும்ன்னுதான் கடவுளை வேண்டிக்கறேன்”

அந்த அறையில் மௌனம் நிலவியது …

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.