ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 46

இம்முறை வனிதாவின் முகம் வெளுத்து கண்கள் கலங்கின. மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவசரமாக அவ்விடத்தை விட்டு அகன்றாள் …

வெளியில் வந்த சுமதி வனிதா தன் காரில் அமர்ந்து அழுது குலுங்குவதைக் கண்டாள் …

நான்கரை மணிக்கும் மேல் ஆகியும் வனிதா இன்னும் வராமல் இருப்பதை உணர்ந்த அமுதா அவளை கைபேசியில் அழைக்க …

வனிதா, “எஸ் மேம்”

அவள் குரல் அழுது உடைந்து இருப்பதை உணர்ந்த அமுதா, “என்ன வனிதா? Any problem?”

வனிதா, “இல்லை. கொஞ்சம் அப்செட் ஆகி இருக்கேன்”

அமுதா, “அதுக்கும் தானே இந்த கவுன்ஸிலிங்க். இங்கே வா பேசலாம்”

வனிதா, “மேம், இன்னைக்கு என்னால வர முடியாது. ப்ளீஸ் … நான் கொஞ்சம் தனியா யோசிக்கணும். அதான் நேரா வீட்டுக்கு வந்துட்டேன். அப்பறம் நாளைக்கு எனக்கு சில வேலைகள் இருக்கு. ஒரு ரெண்டு நாள் அவகாசம் எனக்கு வேணும். ப்ளீஸ் …”

அமுதா, “என்ன யோசிக்கணும்?”

வனிதா, “இந்த டைவர்ஸ்ஸைப் பத்தி … ”

அமுதா, “அதில் உனக்கு விருப்பம் இல்லை-ன்னு எனக்குத் தெரியும்”

வனிதா, “இல்லை மேம். இது என் விருப்பத்தை பத்தி மட்டும் இல்லை. என் விருப்பத்தைப் பத்தி நான் கவலைப் படலை. என் கவலை எல்லாம் என் குழந்தைங்களோட எதிர்காலமும் விஸ்வாவின் எதிர்காலமும் மட்டும் தான்”

அமுதா, “என்ன வேலைகள் இருக்குன்னு சொன்னே? ஆஃபீஸ் வேலையா?”

வனிதா, “இல்லை … இந்த டைவர்ஸ் விஷயமாத்தான்”

அமுதா குரலில் அதிர்ச்சி ததும்ப, “டைவர்ஸ் விஷயமா-ன்னா?”

வனிதா, “டைவர்ஸ்ஸுக்கு ஒப்புதல் கொடுத்தேன். குழந்தைகளைப் பிரிக்கவும் ஒப்புதல் கொடுத்து இருந்தேன். ஆனா, இப்போ குழந்தைகளை பிரிப்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை. அவர் என்னை டைவர்ஸ் பண்ணும் பட்சத்தில் எனக்கு அவர் ஒண்ணும் கொடுக்க வேண்டாம். ஆனா வசியை என் கிட்டே இருந்தும் விக்கி கிட்டே இருந்தும் பிரிப்பதுக்கு நான் ஒத்துக்கப் போறது இல்லை. அப்படி செய்ய அவருக்கு எந்த உரிமையும் இல்லை. நானும் என் சார்பில் ஒரு லாயரை நியமிச்சு சில கண்டிஷன்ஸ் போடப் போறேன்”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.