ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

சுமதி தன் கைபேசியை இயக்க … சில கணங்களில் வனிதாவின் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி தோன்றியது. வனிதா அதைப் பார்த்துக் கொண்டு இருக்க …

சுமதி, “அது எனக்கு தெரிஞ்ச டைவர்ஸ் லாயர் ஒருத்தரோட நம்பர் … என் ஃப்ரெண்ட் காண்டாக்ட் பண்ணுவா அப்படின்னு மட்டும் சொல்லி இருக்கேன். மேற்கொண்டு எந்த விவரமும் கொடுக்கலை. நிச்சயம் நீ காண்டாக்ட் பண்ணனும்”

வனிதா சற்று நேர மௌனத்துக்குப் பிறகு, “மேம், சந்திரசேகர் சார் உயிரோடு இருந்து இருந்தா நீங்க என்ன செஞ்சு இருப்பீங்க?”

சுமதி, “அவர் அப்படி செஞ்சதுக்கு என் மேலயும் சில தப்பு இருக்கு. ஆனா அதை என் கிட்டே பேசி, முட்டி மோதி சண்டை போட்டு என்னை உணற வெச்சு இருக்கணும். அப்படி செய்யாம வேற ஒருத்திகிட்டே சுகத்தை நாடிப் போனதுக்கு நிச்சயம் டைவர்ஸ் செஞ்சு இருப்பேன்”

வனிதா, “நீங்க உங்க கணவரையும் கவனிச்சுக்காம குழந்தைங்களையும் குடும்பத்தையும் கவனிக்காம வேலையே கதின்னு இருந்து இருந்தாலும் அப்படி செஞ்சு இருந்துப்பீங்களா?”

சுமதி முகம் வெளுத்து சில கணங்கள் மௌனம் காத்தாள். பிறகு கண் கலங்க, “நல்ல வேளையா என் குழந்தைங்க விவரம் தெரியற அளவுக்கு பெரியவங்க ஆயிட்டாங்க. ஆனா உன்னை மாதிரி குழந்தைங்க சின்ன வயசா இருந்து இருந்தா குழந்தைங்களைப் பிரியணுமேன்னு மட்டும் கொஞ்சம் யோசிச்சு இருப்பேன்”

வனிதா, “உங்க மனசில் பட்டதை மறைக்காம சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் மேம். நான் கிளம்பறேன்” அவள் எழுந்து செல்ல எத்தனிக்கும் போது …

சுமதி, “வனிதா, என்னோடது அர்ரேஞ்ச்ட் மேரேஜ். அப்பா பாத்து சொன்ன மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினேன். அதனால நான் சொல்றதை வெச்சு நீ எந்த முடிவுக்கும் வரக் கூடாது. அதே சமயம் விஸ்வா இந்த மாதிரி ஒரு காரியத்தை செஞ்சு இருந்தான்னா நீ என்ன செஞ்சு இருப்பேன்னு யோசிச்சுப் பாரு. உனக்கே புரியும்”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.