ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

வனிதா, “இல்லை. உங்க வீட்டுக்கு வரலையா?” என்று பதட்டத்துடன் பதிலளித்தாள்

ராம், “இல்லை. அனேகமா ஆஃபீஸில் எதாவுது வேலை இருந்து இருக்கும். டோண்ட் வொர்ரி” என்று விடைபெற்றான்.

ஆற்றாமையில் வனிதா விஸ்வாவின் கைபேசியை அழைக்க ..

விஸ்வா, “என்ன?”

வனிதா, “நைட்டு உங்க வீட்டுக்குப் போகலையா?”

விஸ்வா, “இல்லை. எங்க கெஸ்ட் ஹவுஸில் தங்கிட்டேன்”

வனிதா, “ஓ …”

விஸ்வா, “உனக்கு ரொம்ப பழக்கமான அதே கெஸ்ட் ஹவுஸ்தான்” என்று வெறுப்பை உமிழும் குரலில் சொல்லி இணைப்பைத் துண்டித்தான்.

அவள் சுயநிலைக்கு வர பல நிமிடங்கள் ஆனது … முந்தைய தினம் அவள் எடுத்த முடிவு அவள் மனதில் மேலும் உறுதி பெற்றது ….

வனிதா அழைத்து சில நிமிடங்களில் விஸ்வாவின் கைபேசி சிணுங்கியது …

விஸ்வா, “சொல்லுடா”

ராம், “எங்கேடா போயிட்டே?”

விஸ்வா, “எங்க கெஸ்ட் ஹவுஸில் தங்கிட்டேன்”

அவன் மன நிலையை உணர்ந்து மேலும் அவனிடம் விவரம் எதுவும் கேட்காமல் ராம், “சரி, இன்னைக்கு உன் ப்ரோக்ராம் என்ன?”

விஸ்வா, “வேலைக்குப் போயிட்டு இருக்கேன்”

ராம், “எப்போ மீட் பண்ணலாம்?”

விஸ்வா, “ம்ம்ம் … எதுக்கு?”

ராம், “தண்ணி அடிக்க கம்பெனிக்காக கேட்டேன்”

விஸ்வா, “எனக்கு மூட் இல்லை”

ராம், “அப்படியா, சரி, இனிமேல் இந்த கவுன்ஸிலிங்கில் என்னால் கலந்துக்கு முடியாதுன்னு நான் டாக்டர் அமுதாகிட்டே சொல்லிடறேன். பை” என்று இணைப்பைத் துண்டித்தான்.

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.