ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 46

விஸ்வா, “குழந்தைங்க ரெண்டும் தூங்க நேரம் ஆகும் .. சில நாள் நான் சீக்கிரம் தூங்கிடுவேன்”

ராம், “சரி, அதே அளவுக்கு அந்த டெல்லி ஃபேருக்குப் போறதுக்கு முன்னாடி வரை இருந்ததா?”

விஸ்வா, “More or less. Come on Ram. நீ அனாவிசியமா என் மேல் பழியைப் போடறே. சரி, அப்படி வீட்டில் சுகம் கிடைக்கலைன்னா வெளியில் போகணுமா?”

ராம், “இல்லை. உன்னை டைவர்ஸ் பண்ணி இருக்கணும். உயிருக்கு உயிரா காதலிக்கறேன்னு சொல்லிட்டு அவளை சித்திரவதை செஞ்சு இருக்கே”

விஸ்வா, “நோ அவதான் என்னை புரிஞ்சுக்கலை”

ராம், “புரிஞ்சுட்டு என்ன செஞ்சு இருக்கணும்?”

விஸ்வா பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான் ..

ராம், “எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு … உன்னை மணிபால் ஹாஸ்பிடலில் எனக்குத் தெரிஞ்ச டாக்டர் வாசன்கிட்ட அறிமுகப் படுத்தப் போறேன். அவர் ஒரு புகழ் பெற்ற ஆன்ட்ராலஜிஸ்ட் (Andrologist – Andrology ஆண் உறுப்பு பற்றிய மருத்துவம்). செக்ஸில் உனக்கு ஆர்வம் குறைவதற்கு உடல் ரீதியா எதாவுது காரணங்கள் இருக்கான்னு பார்க்கணும்”

விஸ்வா, “I don’t think there is anything wrong with me physically”

ராம், “For your own good allow doctors to decide that will you? அவர்கிட்டே உன்னைப் பத்தி நான் ஏற்கனவே பேசியாச்சு. போலாம் வா”

விஸ்வாவை அழைத்துக் கொண்டு வேறு ஒரு மருத்துவமனைக்குச் சென்றான்.

ராம், “இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை கூப்பிடுவார். உன் கூட பேசினதுக்கு பிறகு எதாவுது பரிசோதனை செஞ்சாலும் செய்யலாம்”

விஸ்வா, “எதுக்கு ராம் இதெல்லாம்?”

ராம், “ப்ளீஸ் விஸ்வா. இதெல்லாம் எதுக்குன்னு கேட்காதே. உன் நலனுக்குத்தான். அப்படியே டைவர்ஸ் ஆனாலும் காலம் பூரா சன்னியாசி மாதிரி இருக்கப் போறியா. அப்படி இருந்தேன்னா கொஞ்ச நாளில் பைத்தியம் பிடிச்சுடும். உன்னுடன் இருக்கப் போற வசியின் வாழ்க்கை நரகம் ஆயிடும். புரிஞ்சுக்கோ”

பெருமூச்செறிந்த விஸ்வா, “சரி. வனிதாவைப் பத்தி அவர்கிட்டே சொன்னியா?”

ராம், “சொல்லணுமா?”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.